Home
News

Ai ரோபோவுடன் மியூசிக் கம்போஸ் செய்த ஏ.ஆர். ரஹ்மான்! ஹை-டெக் அனுபவம் எப்படி இருந்தது?

AI ரோபோவுடன் மியூசிக் கம்போஸ் செய்த அனுபவம் குறித்து பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (AR Rahman) கூறிய தகவல்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. எந்திரன் 2.0 திரைப்படத்தில் சிட்டி ரோபோவிற்காக AR Rahman இசை அமைத்தாரே, அந்த பழைய கதை தானே இது என்று அலட்சியமாக நினைத்துவிடாதீர்கள். உண்மையாகவே ஹை-டெக் தொழில்நுட்பத்தில் இயங்கும் AI ரோபோவுடன் மியூசிக் கம்போஸ் செய்த அனுபவத்தைப் பற்றி ரஹ்மான் இப்போது பகிர்ந்திருக்கிறார்.

AI உடன் இசை அமைத்தாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

AI உடன் இசை அமைத்தாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில், எம்ஐடியில் இமேஜிங், ஏஐ மற்றும் கிளஸ்டர் கம்ப்யூட்டிங் படிப்பில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு, இவர் AI உடனான பாடங்களைப் பயின்று, ஏஐ தொடர்பான விஷயங்களை அறிந்திருக்கிறார். AI தொழில்நுட்பத்தில், இசையின் படைப்பை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த முயற்சியின் மூலம் அவர் ஆராய்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

MIT-ல் இமேஜிங், ஏஐ மற்றும் கிளஸ்டர் கம்ப்யூட்டிங்

MIT-ல் இமேஜிங், ஏஐ மற்றும் கிளஸ்டர் கம்ப்யூட்டிங்

ஏ.ஆர்.ரஹ்மான் இது குறித்துக் கூறுகையில், "நான் எம்ஐடியில் இமேஜிங், ஏஐ மற்றும் கிளஸ்டர் கம்ப்யூட்டிங் படிப்பில் கலந்துகொண்டேன். இது உண்மையில் பெரியளவில் உதவியாக இருந்தது," என்று ரஹ்மான் தி குட் டைம் ஷோ தொகுப்பாளர்களான ஆர்த்தி மற்றும் ஸ்ரீராம் ஆகியோரிடம் கூறினார். மேலும் சமீபத்திய தொழில்நுட்பத்தை இசையில் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக அவர் இந்த பயிற்சியில் கலந்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி ஏ.ஆர். ரஹ்மான் இடம் கேள்வி

செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி ஏ.ஆர். ரஹ்மான் இடம் கேள்வி

சமீபத்தில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் AI உடன் இசை அமைத்த அனுபவம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கான பதிலை அவர் நிகழ்ச்சின் போது விளக்கமளித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இது குறித்துக் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு (AI) இசை பயன்பாட்டில் அப்படியே தங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும், AI உடன் இசை உருவாக்கும் பணிகள் சில நேரங்களில் எளிதாகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Ai மனிதர்களின் வேலையை பறிக்குமா?

Ai மனிதர்களின் வேலையை பறிக்குமா?

ஆனால், மற்றவர்கள் சொல்வது போல், Ai ஆனது மனிதர்களின் வேலைகளைப் பறிக்காது என்று கூறியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக இசை அமைத்திருக்கிறார். அதேபோல், இவர் 5 ஹாலிவுட் திரைப்படத்திற்காகவும் இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், டைகர் ஷெராஃப் நடித்த ஹீரோபந்தி 2, மிமி மற்றும் அத்ரங்கி ரே படங்களுக்கும் இவர் இசையமைத்தார் என்பது கவனிக்கத்தக்கது.

AI உடன் இணைந்து இசையை எப்படி உருவாக்க முடியும்?

AI உடன் இணைந்து இசையை எப்படி உருவாக்க முடியும்?

இந்த ஆண்டு மே மாதம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். தமிழனாக இருந்து, ஹாலிவுட் வரை சென்ற பெருமை இவரையே சேரும். இசை துறையில் பல புதுமைகளை களமிறங்கிய ரஹ்மான் இப்போது, எதிர்கால AI உடன் இணைந்து இசையை எப்படி உருவாக்க முடியும் என்பதை பற்றி இப்போது அறிந்திருக்கிறார். இசையமைக்கும் முறையை Ai மூலம் மாற்ற முடியுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

Ai உடன் இணைந்து மனிதர்களால் சிறப்பாக செயல்பட முடியுமா?

Ai உடன் இணைந்து மனிதர்களால் சிறப்பாக செயல்பட முடியுமா?

அதற்கு, ரஹ்மான், "இசை துறையை AI இப்போதைக்குப் பெரிய அளவில் கையகப்படுத்தப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். அதேபோல், இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை ஒன்று அல்லது இரண்டு இசையமைப்பாளர்கள் மட்டுமே நடைமுறையில் இப்போதைக்குப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இசையை நாம் ஏஐ உடன் உருவாக்க முயன்றாலும், பாடல் வரி போன்ற பிற விஷயங்களும் நாம் மனிதனிடமிருந்து விஷயங்களைப் பெற வேண்டியதுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மனிதர்கள் தான் மிகச் சரியானவர்கள்

மனிதர்கள் தான் மிகச் சரியானவர்கள்

அதேபோல், நாம் ஒவ்வொரு அம்சத்திலும் மனிதராக இருக்க வேண்டும் என்றால், மனிதர்களுக்கு எது நல்லது, மனிதக்குலத்திற்கு எது நல்லது, மக்களுக்கு எது நல்லது, படைப்பாற்றலுக்கு ஏற்ற முடிவுகளை எடுத்து உலகிற்கு அழகைக் கொண்டு வரு நாம் செய்ய வேண்டும் என்பதைத் தான் நாம் யோசிக்க வேண்டும் என்கிறார் ரஹ்மான். இதற்கு மனிதர்கள் தான் மிகச் சரியானவர்கள் என்கிறார் ரஹ்மான்.

இந்த வேலையை AI தான் சிறப்பாக செய்கிறது - ரஹ்மான்

இந்த வேலையை AI தான் சிறப்பாக செய்கிறது - ரஹ்மான்

AI இன் பயன்பாட்டைப் பற்றி மேலும் பேசுகையில், இசையமைக்கும் பணியின் போது ஏஐ இன் பெரும் உதவி சாம்பிள்களை வரிசைப்படுத்துவது போன்ற சில விஷயங்களில் மிகவும் அருமையாகச் செயல்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். உண்மையில், இந்த வேலையை மனிதர்கள் செய்து முடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், ஏஐ, இதை சில நிமிடங்களில் சரியாக முடிந்துவிடுகிறது. இது வியப்படையச் செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் பெட்ரா விருதுகள்

ஏ.ஆர். ரஹ்மான் பெட்ரா விருதுகள்

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ரோஜா, பாம்பே, ஜோதா அக்பர், ரங் தே பசந்தி, லகான் போன்ற பல படங்களில் இசையமைத்ததற்காக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இரண்டு கிராமி விருதுகளைப் பெற்றிருக்கிறார். மோஷன் பிக்சருக்கான சிறந்த தொகுப்பு ஒலிப்பதிவு (ஸ்லம்டாக் மில்லியனருக்கு) மற்றும் சிறந்த மோஷன் பிக்சர் பாடல் (ஜெய் ஹோவுக்காக) உட்பட பல பெரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். பாலிவுட் மற்றும் தென் திரையுலகில் இருந்து ஆறு தேசிய விருதுகள் மற்றும் பல பிலிம்பேர் விருதுகளையும் ரஹ்மான் பெற்றுள்ளார்.

Best Mobiles in India

English summary
What AR Rahman Learned At MIT For The Use Of AI In Music
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X