Home
News

இந்தியாவில் இணைய தள வசதியை விரிவுபடுத்தும் வெஸ்டர்ன் டிஜிட்டல்

By Karthikeyan
இந்தியாவில் இணைய தள வசதியை விரிவுபடுத்தும் வெஸ்டர்ன் டிஜிட்டல்

கணினிகளுக்கான ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்களைத் தயாரிப்பதில் முன்னனியில் இருக்கும் நிறுவனமான வெஸ்டர்ன் டிஜிட்டல், விரைவில் இந்தியாவில் ஒரு பெரிய நெட்வொர்க்கிங் சொலுசனை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

கடந்த 2011 வரை உலக அளவில் 80 மில்லியன் வீடுகள் இணைய தள வசதியைப் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வரும் 2016ல் அவை 900 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வீடுகளில் ஆன்லைன் வீடியோ விளையாட்டு சாதனங்கள், ப்ளூரே வசதி கொண்ட சாதனங்கள் மற்றும் செட் டாப் பாக்ஸ் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

அதோடு இணைய தள வசதி உள்ள வீடுகளில் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்புகள், டேப்லெட்டுகள், மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் குடும்பத்தோடு இணைய தளத்தில் திரைப்படங்கள் பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது மற்றும் இன்டர்நெட்டைப் ப்ரவ்ஸ் செய்வது போன்றவை பெருமளவில் அதிகரித்திருப்பதாக வெஸ்டர்ன் டிஜிட்டலின் விற்பனை மேலாளர் கலித் வானி தெரிவித்திருக்கிறார்.

இந்த புதிய நெட்வொர்க் சொலுசன் மூலம் வாடிக்கையாளர்கள் முழுமையான எச்டி கண்டன்டுகளை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார். வரும் செப்டம்பர் 3வது வாரத்தில் வெஸ்டர்ன் டிஜிட்டல், மொநெட் என்ற பெயரில் என்900 சென்ட்ரல், என்900, என்750 மற்றும் என்600 ஆகிய பிரிவுகளில் ரூ.5,699லிருந்து ரூ.25,999க்குள் இந்த புதிய நெட்வொர்க் சொலுசனைக் களமிறக்க இருக்கிறது.

இதன் மூலம் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் டிவிக்கள், கணினிகள் மற்றும் வைபை வசதி உள்ள சாதனங்கள் போன்றவற்றில் இணைய தள வசதியைப் பெறமுடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X