காஷ்மீர் அறிவிப்புக்கு பின் கூகுளில் பிற மாநிலத்தவர்கள் காஷ்மீர் பற்றி என்ன தேடுகிறார்கள் தெரியுமா?
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக
தெரிவித்தார்.

370 மற்றும் 35ஏ
அதன்பின்பு 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் இருந்தால் காஷ்மீரில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் ஊழல்கள்தான் இருந்ததாக குறிப்பிட்ட அவர், இப்போது காஷ்மீரின் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் , காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துகள் என்றும் பிரதமர் மோடி அவர்கள் கூறினார்.

காஷ்மீரில் ஐஐடி, ஐஐஎம்
குறிப்பாக காஷ்மீரில் ஐஐடி, ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்களும்,எய்ம்ஸ் மருத்துவமனையும்
தொடங்கப்படும் எனவும், பின்பு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடங்கப்படும் என மோடி அவர்கள் கூறியுள்ளார்.

கூகுளில் என்ன தேடுகிறார்கள் என்று தெரியுமா?
மேலும் காஷ்மீரில் இயல்புநிலை உருவாகி வருகிறது, இந்நிலையில் காஷ்மீர் பற்றி தமிழ்நாடு உட்பட பிற மாநிலத்தவர்கள் அதிகமாக காஷ்மீர் பற்றி கூகுளில் என்ன தேடுகிறார்கள் என்று தெரியுமா? வாங்க உடனே பார்ப்போம்.
மேற்கு வங்கம் -கர்நாடகம்:
மேற்கு வங்கம். கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நிறைய ஆண்கள் காஷ்மீரில் திருமணத்திற்கு பெண் கிடைக்குமா என கூகுளில் அதிமாக தேடுகிறார்கள், அதன்படி ‘Marry Kashmir girl' என்ற வாக்கியம் கூகுளில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.
டெல்லி-குஜராத்
அடுத்தப்படியாக டெல்லி, ஜார்கண்ட், குஜராத், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மக்கள் காஷ்மீரில் நிலம் வாங்குவது பற்றி அதிகமாக தேடுகிறார்கள், அதன்படி buy land in kashmir என்ற வாக்கியம் கூகுளில் அதிகமாக
தேடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம்
தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகம் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த மக்கள் காஷ்மீருக்கு செல்ல விரும்புகிறார்கள், அதன்படி move to kashmir என்ற வாக்கியம் கூகுளில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் எப்படி நிலம் வாங்குவது?
மகாராஷ்டிரா மற்றும் டெல்லியை சார்ந்த அதிக மக்கள் காஷ்மீரில் எப்படி நிலம் வாங்குவது என்று அதிகமாக தேடுகிறார்கள் அதன்படி how to buy property in kashmir என்ற வாக்கியம் கூகுளில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications