வேலை தேடிக்கொண்டிருக்கும் நண்பர்களின் கவனத்திற்கு...!

By Keerthi
|

இன்று என்ஜினியரிங் படிக்கும் ஒவ்வோரு மாணவரின் கனவு ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான். தமிழ்நாட்டில் என்ஜினியரிங் படித்த ஒரே காரணத்தால் இன்று பல மாணவர்களுக்கு ஒரு நல்ல வேலை கூட கிடைக்காமல் இருக்கிறது.

மேலும் இவர்களுக்கு இன்டர்வியூவில் ஏற்படும் நடுக்கவே இன்று பல மாணவர்களுக்கு எதிரியாகி விடுகின்றது. நீங்கள் இண்டர்வியூக்கு செல்லும் முன் முதலில், அந்த அலுவலகத்தைப் பற்றிய விவரங்கள், சேவைகள், தொழிலாளர்களின் திறமை, நிதி நிலைமை, உற்பத்திப் பொருள்கள், ஆண்டு வருமானம், லாப நஷ்டங்கள், எதிர்கால விரிவுத் திட்டம், அவர்களுடைய போட்டியாளர்கள், அவர்களது செயல்முறைகள் போன்ற விஷயங்களை பற்றி முடிந்த அளவு விவரங்களைச் சேகரித்துக் கொள்ளவும்.

இந்த இன்டர்வியூ நடுக்கத்தில் இருந்து எப்படி தப்பிப்பது எச்.ஆர்யை எப்படியெல்லாம் இம்ப்ரெஸ் பண்ணலாம் மற்றும் ஆப்பிள் இன்டர்வியூக்களில் கேட்க்கப்பட்ட மிக எளிமையான கேள்விகளை இங்கே பார்போமா....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

பளிச்சென்று சுத்தமான ஸ்மார்ட்டாகத் தோற்றமளிக்கும் உடையை அணிந்து செல்ல வேண்டும். ஒரு தேர்ச்சி பெற்ற நேர்முகத் தேர்வாளர், உங்கள் டிரஸ், பாடி லாங்குவேஜ், முகபாவனைகள் இவற்றை வைத்தே உங்கள் மனதையும், உங்களையும் நன்கு எடை போட்டு விடுவார்.

#2

#2

நீங்கள் அறையின் உள்ளே நுழையும்போதே சிநேக பாவத்துடனும் நம்பிக்கையுடனும் இருங்கள். கை குலுக்குவது, உங்களுடைய சிநேக பாவம், உற்சாகம், கவர்ச்சி போன்றவற்றைத் தெரிவிக்கும் என்பதை நினைவில் வையுங்கள். நேராக, உறுதியுடன், வலிமையாக கொடுக்கப்படும் கை குலுக்கல் உங்களைப் பற்றிய பாஸிடிவ் விவரங்களை அவர்களுக்குத் தெரிவிக்கும் ஆதலால் கை குலுக்களில் அதிக கவனம் தேவை

#3

#3

மற்றொரு முக்கியமான விஷயம் நீங்கள் இருக்கையில் உட்காரும் விதத்திலிருந்து உங்களிடம் மறைந்து கிடக்கும் விவரங்களை அவர்கள் அறியக்கூடும். அதனால், உங்களுக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் நேராக நிமிர்ந்து அமரவும்.

#4

#4

அல்லது இருக்கையின் கைகள் மீது இருக்கும்படி அமரவும். அமைதியாக, வசதியாக உட்காரவும். ரிலாக்ஸ் என்றால், வீட்டில் சோபாவில் அமருவது போல கால்கள் நீட்டி அமர்வது இல்லை.அவர்களது முன்னால் சற்று அடக்கமாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் அமரவும்.

#5

#5

உங்களது கண்கள் நேருக்கு நேராக இண்டர்வியூ செய்பவரை நோக்கி தான் இருக்க வேண்டும் எக்காரணத்தை கொண்டும் தலை மட்டும் குனிந்து விடாதீர்கள் இது உங்களை பற்றி எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.

#6

#6

மேலும் மார்புக்கு குறுக்காகக் கைகளைக் கட்டி அமர்ந்து விடாதீர்கள் அப்படிஅமர்ந்தால் உங்களுடைய பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை பிரதிபலிக்கும்.

#7

#7

அவர் முன் உங்கள் மூக்கைத் தொடுதல், கன்னத்தைத் தேய்த்தல், வேறு எங்கோ நோக்குதல் போன்றவை உங்களிடம் ஒருவித சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும் எனவே இந்த மாதிரி செயல்களை செய்யாதீர்கள்.

#8

#8

எச்.ஆருடன் இண்டர்வியூ நேரம் முழுவதும் தைரியமாகவும், பாஸிடிவ் ஆகவும் இருங்கள். கேட்கப்படும் கேள்விகளுக்கு பொய் பேசாதீர்கள். குடும்ப விவரம் பற்றி சுருக்கமாகத் தெரிவியுங்கள் போதும்.

#9

#9

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரியவில்லை எனில் அமைதியாக இருந்து விடாதீர்கள் சற்று சத்தமாக எனக்கு அதை பற்றி சிறிதளவு மட்டுமே தெரியும் என்று கூறுங்கள் இது உங்களது ஆளுமையை அவர்களுக்கு காட்டும்.

#10

#10

இறுதியில் இதை செய்ய மறவாதீர்கள் நீங்கள் தேர்வானாலும் ஆகாவிட்டாலும் இறுதியில் கிளம்பும் போது அவருடன் கைக்குலுக்கிவிட்டு வாருங்கள்.

#11

#11

உங்கள் வாழ்கையில் நீங்கள் பெருமைபடக்கூடிய விஷயம் என்றால் அது எது?

இதற்கான பதில்களை உங்களது கண்ணோட்டத்தில் கீழுள்ள கமென்ட் பாக்ஸில் பதிலளிக்கவும் யாருடைய பதில் ஸ்மார்ட்டாக இருக்கிறது என்று பார்ப்போம் ஸ்லைடு நம்பர் போட்டு உங்களது பதிலை எழுதவும்

#12

#12

வாழ்கையில் உங்களுடைய முக்கியமான தோல்வி எது அதிலுருந்து நீங்கள் கற்ற பாடம் என்ன?

#13

#13

உங்களது வாழ்கையில் நடந்த மிக முக்கியமான விஷயம் எது?

#14

#14

8 வயது சிறுவனிடம் நீங்கள் மோடத்தை பற்றி எப்படி கூறுவீர்கள்?

#15

#15

உங்களை இங்கு இன்டர்வியூவுக்கு கொண்டு வந்து விட்டது எது?

#16

#16

அடுத்த 5 ஆண்டுகளில் இந்த கம்பெனியை உயர்த்த என்ன செய்வீர்கள்?

#17

#17

உங்களுக்கு இப்போது ஆப்பிளில் வேலை கிடைத்து விட்டது எனில் நீங்கள் உங்களுடைய பழைய கம்பெனியில் இழப்பது எதை

#18

#18

உங்களை அதிக சந்தோசப்படுத்தும் விஷயம் எது?

#19

#19

நீங்கள் உங்களது பிரட் டோஸ்டரை எப்படி பரிசோத்ப்பீர்கள்?

#20

#20

நாங்கள் உங்களை தற்போது வேலைக்கு எடுத்துவிட்டோம் என்றால் உங்களது முதல் வேலை என்ன? . . . .இதற்கான பதில்கள் உங்களுக்கு தெரிந்தால் கமென்ட் பண்ணவும் நண்பர்களே...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X