விண்வெளி : அட இது தெரியாம போச்சே..!!
விண்கலங்களும், விண்வெளி வீர்ரார்களும் தான் விண்வெளிக்கு அனுப்பபடுகிறார்கள் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் ஆனால் விண்வெளிக்கு சற்றும் பொருத்தமே இல்லாத சில விசித்திரமான 'பொருட்கள்' விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது தான் உண்மை.
இந்திய சதி கோட்பாடுகள் : மறைக்கப்படும் உண்மைகள்..!?
அப்படியாக ""அட இது நமக்கு தெரியாம போச்சே..?!" என்று உங்களை யோசிக்க வைக்கும், விண்வெளிக்கு அனுப்பட்ட 10 விசித்திரமான 'பொருள்களை' தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

10. அனைத்து உயிர் இனங்களின் விந்துக்கள் :
விண்வெளியில் விந்துக்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆராய அனைத்து வகையானஉயிர் இனங்களின் விந்துக்களும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

09. அமிலியா ஏர்ஹர்ட் வாட்ச் :
82 ஆண்டு பழமை வாய்ந்த அமிலியா ஏர்ஹர்ட் வாட்ச் (Amelia Earhart Watch) விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது.

08. லைட்சாபெர் :
பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஸ்டார் வார்ஸ் (Star wars) படத்தில் வரும் லைட்சாபர் (Lightsaber) ஒன்று 2007-ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

07. கார்ன்டு பீஃப் சாண்வெஜ் :
1965-ஆம் ஆண்டு மாட்டு இறைச்சி அடங்கிய சாண்வெஜ் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது.

06. லேகோஸ் :
2011-ஆம் ஆண்டு நாசா, விண்வெளிக்கு லேகோ பொம்மைகளை அனுப்பி வைத்தது.

05. ப்ளே பாய் :
1969-ஆம் ஆண்டு 'ப்ளே பாய்' (Play boy) காலண்டர் ஒன்றும் நாசா விண்வெளி வீரர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது.

04. சால்மொநெல்லா :
சால்மொநெல்லா (Salmonella)என்ற கிருமி வகை ஒன்று விண்வெளியில் எப்படி செயல்படுகிறது என்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

03. சிலந்தி :
நாசா ஒருமுறை சிலந்திகளையும் விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.

02. பிட்சா :
விண்வெளியில் பிட்சா டெலிவரி செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது பிட்சா ஹட். (கேலி சித்திரம்)

01. மனித சாம்பல் :
விண்வெளிக்கு மனித சாம்பல் அனுப்பபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :
மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
புகைப்படம் : நாசா


Click it and Unblock the Notifications