நோக்கியா : ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்களோ.!!
நோக்கியா என்றதும் பழைய காலத்து மொபைல் போன்கள் தான் ஞாபகம் வருகின்றது. இன்று ஸ்மாராட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் பழைய நோக்கியாவை கட்டாயம் பயன்படுத்தியவராகவே இருக்க வேண்டும்.
உலகின் அதிகம் விற்பனையான மொபைல்களில் நோக்கியா படைத்த சாதனை இன்றளவும் முறியடிக்கப்படவில்லை என்ற நிலையில் அந்நிறுவனம் தயாரித்ததில் வேடிக்கையான மொபைல் போன்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்.

நோக்கியா 3600, 3620 மற்றும் 3650
இந்த மூன்று மாடல்களும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும், 2002 - 03 ஆண்டு வாக்கில் வெளியிடப்பட்ட இந்த மாடல் போன்கள் பார்க்க டி.வி ரிமோட் போன்றே காட்சியளிக்கும்.

நோக்கியா ஈ70, 6822,6820,6810,6800
க்வர்டி கீபேடு கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த மாடல் போன்கள் பார்க்க கை கடிகாரம் போன்றே காட்சியளித்தன.

நோக்கியா 7600
2003 ஆம் ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நோக்கியா 7600 மாடலில் விஜிஏ கேமரா மற்றும் தொடுதிரை வசதிகள் வழங்கப்பட்டிருந்நதது.

நோக்கியா என்-கேஜ் மற்றும் என்-கேஜ் க்யு டி
2003 ஆம் ஆண்டு வெளியான இந்த போன் கேம் ப்ரியர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

நோக்கியா 7700
நோக்கியா 7700 தொடு திரை வசதி மற்றும் 3.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 640*320 பிக்சல்கள் கொண்டிருந்தது.

நோக்கியா 7710
2004 ஆம் ஆண்டு வெளியான நோக்கியா 7710 மாடலில் சேட்டிலைட் நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டிருந்தது.

நோக்கியா என்90, என்93 மற்றும் என்93ஐ
நோக்கியாவின் இந்த மாடல் போன்கள் ப்ளிப் வசதியுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 7280
இது கீ பேட் இல்லாமல் வெளியான நோக்கியாவின் பீச்சர் போன்

நோக்கியா 3250 மற்றும் 5700 எக்ஸ்பிரஸ் மியுசிக்
ஆல்ஃபா நியுமெரிக் கீபேடு, ப்ளிப் வசதியுடன் இரு மாடல்களும் வெளியானது

நோக்கியா என் 91
என்91 மாடல் 4ஜிபி இன்டர்னல் மெமரியுடன் கூடிய மல்டிமீடியா போன் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா ட்விஸ்ட் 7705
2009 ஆம் ஆண்டு க்வர்டி மற்றும் ப்ளிப் வசதியுடன் வெளியான மாடல் தான் ட்விஸ்ட் 7705

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications