இதற்கும் மெஷின்களா, இதை எப்ப கண்டுபிடிச்சாங்க

Posted By:

தொழில்நுட்ப சந்தையில் வியக்க வைக்கும் சில கருவிகளின் புகைப்படங்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள். இது போன்ற கருவிகளும் சந்தையில் வெளியாகின்றன என்று உங்களுக்கு தெரிந்திராத சில கருவிகளின் புகைப்படங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் உங்களை ஆச்சர்யமூட்டும் சில வியப்பூட்டும் கருவிகளின் புகைப்படங்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சார்ஜ்

சார்ஜ்

உங்களது மின்சாதன கருவிகளை சார்ஜ் செய்யும் போது அவைகளை பாதுகாப்பாக வைக்க இந்த கருவியை பயன்படுத்தலாம். பச்சை புல்களை கொண்டிருக்கும் இந்த கருவியில் சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி

துப்பாக்கி

இது உண்மையில் துப்பாக்கி கிடையாதுங்க, 16 எம்எம் ஸ்டில் கேமரா. ஜப்பான் நாட்டை சேர்ந்த டோர்யூ கேமரா கம்பெனி இந்த கருவியை உருவாக்கியது.

ஐசீகேம்

ஐசீகேம்

முனிச் மருத்துவமணை பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் இந்த ஐசீகேம் கருவியை தலையில் அணிந்து கொண்டு உங்களது கண்களை கொண்டே கேமராவினை இயக்க முடியும்.

ரோபோட் லான்மூவர்

ரோபோட் லான்மூவர்

ஹுஸ்குவர்னா நிறுவனத்தின் இந்த கருவியினை ரிமோட் மூலம் இயக்க முடியும். இதை கொண்டு புல் தரைகளை வெட்ட முடியும்.

ரோவர் கேம்

ரோவர் கேம்

உங்களது செல்ல பிரானி செல்லும் இடங்களை கண்காணிக்க இந்த கேமராவினை பயன்படுத்தலாம்.

ஜீன்ஸ்

ஜீன்ஸ்

இந்த பேன்ட் வகைகள் தற்சமயம் ஆய்வு பணிகளில் தான் இருக்கின்றன என்றாலும் இவை புழக்கத்தில் இருந்தால் எப்படி இருக்கும்.

எல்சிடி பெல்ட்

எல்சிடி பெல்ட்

ஈகோகேஸ்ட் எல்சிடி ஸ்கிரீன் பெல்ட் வகைகள் உங்களது பேன்டினை திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க வழி செய்கின்றன. இந்த கருவி 320*240 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றதோடு mp4, .avi, .jpg, and .bmp போன்ற ஃபைல்களை 2 ஜிபி மெமரி கேபாசிட்டி கொண்ட எஸ்டி கார்டுகளை சப்போர்ட் செய்கின்றது.

ஹெட்போன்கள்

ஹெட்போன்கள்

மைன்டுசெட் நிறுவனம் உருவாக்கியிருக்கும் ப்ரெயின் வேவ் ஹெட்போன்கள் ப்ளூடூத் மூலம் கணினி, ஸ்மார்ட்போன் மற்றும் சில கருவிகளுடன் இணைந்து செயல்படுகின்றது. இதோடு பல கூடுதல் அசம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

டோஸ்டர் ப்ரின்டர்

டோஸ்டர் ப்ரின்டர்

பார்க்க ப்ரின்டர் போன்று காட்சியளிக்கும் இந்த டோஸ்டர் கருவியை சுவிஸ் நாட்டை சேர்ந்த ஆத்மர் ம்யூல்பேக் என்பவர் வடிவமைத்திருக்கின்றார்.

ஸ்கேனர்

ஸ்கேனர்

பார்க்க ஃப்ளிப் மாடல் போன் போன்று காட்சியளிக்கும் இந்த கருவியை ஸ்கைமால் நிறுவனம் கண்டரிந்திருப்பதோடு 99.9 சதவீத பேக்டீரியா மற்றும் வைரஸ்களை இது அழித்து விடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Here you will find the Weird but Real Gadgets and Gizmos. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot