தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு புதிய வலைதளம்: உடனே ஃபோன் எடுங்க மக்களே.!

மேலே கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தின் உதவியுடன் ஒருவர் தங்களது மொபைல் எண்ணை கொடுத்து காப்பீட்டு திட்டநிலைப்பாடினை தெரிந்துக்கொள்ளலாம் .

|

தற்சமயம் தேசிய மருத்துவக் காப்பீடு திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள அரசு சார்பில் புதிய ஏற்பாடு செய்துதரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு புதிய வலைதளம்.!

மக்கள் தேசிய மருத்துவக் காப்பீடு திட்ட பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள ஏதுவாக ப்ரத்தியேக இணையதளம் மற்றும் ஹெல்ப் லைன் வசதியினை என்எச்ஏ (NHA) தற்சமயம் துவங்கியுள்ளது.

பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜன

பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜன

மேலும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜன(PMJAY) என்ற பெயரில் தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை வரும் 23-ம் தேதி சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.5 லட்சம்

ரூ.5 லட்சம்

குறிப்பாக இந்த பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜன திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு திட்டம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவுள்ளது. பின்பு இத்திட்டத்தின் மூலம் சுமார் 10கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெருவர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலைதளம்:

வலைதளம்:

இந்த திட்டத்திற்கு வேண்டி mera.pmjay.gov.in என்ற இணைய தளத்தையும், பின்பு 1455 என்ற எண்ணில் ஹெல்ப் லைன் வசதியையும் நேஷனல் ஹெல்த்த ஏஜென்சி என்எச்ஏ துவங்கியுள்ளது. மேலும் பல்வேறு மக்களுக்கு இந்த திட்டம் கண்டிப்பாக பயன்படும்.

மொபைல் எண்

மொபைல் எண்

மேலே கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தின் உதவியுடன் ஒருவர் தங்களது மொபைல் எண்ணை கொடுத்து காப்பீட்டு திட்ட நிலைப்பாடினை தெரிந்துக்கொள்ளலாம் எனவும், பின்பு சான்றிதழ் சமர்பிக்கவும், மனிதவள குறக்கீடு போன்ற எந்த பிரச்சனைகளும் இன்றி பயனர்கள் தங்களது சலுகைகளை நேரடியாக பெற வழிவகுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு கிடைக்குமா இல்லையா

காப்பீடு கிடைக்குமா இல்லையா

ஒருவருடைய மொபைல் எண் கொண்டு காப்பீடு கிடைக்குமா இல்லையா என்பதையும் எளிமையாக அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ள மத்திய அரசு, மேலும் பயனர்களுக்கு இத்திட்டம் குறித்து உதவும் வகையில் பயனாளிகள் மற்றும் மருத்துவமனையுடன் ஒருங்கினைந்து ஆயுஷ்மன் மித்ராஸ்' மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Website, helpline number launched for prospective beneficiaries of Ayushman Bharat: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X