கழுத்தில்.. காலில் மாடக்கூடிய புது Xiaomi Smart Band 8 அறிமுகமாகிறது! விலை என்ன தெரியுமா?
Xiaomi இன் புத்தம் புதிய ஸ்மார்ட் ஃபிட்னஸ் டிராக்கரான Xiaomi Smart Band 8 சாதனம் இன்று (ஏப்ரல் 18) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முந்தைய தொடருடன் ஒப்பிடும்போது அதிக வித்தியாசம் இல்லையென்றாலும், Xiaomi ஒரு முழுமையான மாற்றத்துடன் சில புத்துணர்வுகளைக் கொண்டு வந்துள்ளது.
Xiaomi ஆனது, அதன் முந்தைய ஸ்மார்ட் பேண்ட்களில் இதுவரை வழங்காத புதிய வகை உலோகம் மற்றும் ஸ்ட்ராப் பட்டையை இந்த மாடலில் வழங்கியுள்ளது. இதை விட மிகப் பெரிய புதுமை என்னவென்றால், இந்த வரவிருக்கும் புதிய Xiaomi Smart Band 8 குறிப்பிடத்தக்க வகையில், கைகளில் மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட் பேண்டை இதன் பயனர்கள் கால்களிலும் மற்றும் கழுத்திலும் அணியலாம் என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

எது.. வாட்சை கால்ல மாட்டுறீங்களா? கழுத்துல மாட்டுறீங்களா? என்று சிலர் குழம்பி இருப்பீர்கள்.. அல்லது இது எப்படி சாத்தியம் என்று யோசித்திருப்பீர்கள். இந்த வித்தியாசமான யோசனையை சியோமி உண்மையாக்கியுள்ளது. இந்த Xiaomi Smart Band 8 சாதனத்தை நீங்கள் கழுத்தில் செயின் போல அணியலாம். அதே நேரத்தில், இந்த சாதனத்தை நீங்கள் உங்கள் கால்களில் ஷூவுடன் அணிந்துகொள்ளல்லாம். இதற்கான பிரத்தியேக ஸ்ட்ராப் செயின் மற்றும் ஹோல்டர் உடன் இது அறிமுகமாகிறது.
Xiaomi Smart Band 8 இம்முறையை புதிய மேம்படுத்தலைக் கொண்டு வந்துள்ளது. இதன் புதிய உலோகமானது Xiaomi Smart Band 8 சாதனத்தின் அழகியல் முறையீட்டை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் பயனர்களுக்கு சிறந்த ஆயுள் மற்றும் கூடுதல் ஸ்டைலிஷ் வசதியையும் வழங்குகிறது. Xiaomi ஸ்மார்ட் பேண்டை பயனர்கள் தங்கள் மணிக்கட்டில் மட்டுமின்றி கழுத்தில் நெக்லஸ் போல அணியும் வகையில் வடிவமைத்துள்ளது சியோமி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
குறிப்பாக பெண்கள் இந்த மாடலை அதிகமாக விரும்பி, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்தகைய வடிவமைப்பு அர்த்தமுள்ளதா இல்லையா என்பதைப் பற்றி நீங்கள் சிந்தித்தால், இந்த தனித்துவமான பயன்பாட்டு சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளும் பயனர்கள் எப்போதும் இருப்பார்கள். ஸ்மார்ட் ரிஸ்ட்பேண்டின் முக்கியமான அம்சம் நெக்லஸாகப் பயன்படுத்தும் போதும் அப்படியே கிடைக்கிறது. வழக்கமான ஸ்மார்ட் பேண்ட் அம்சங்களை இந்த வாட்ச் அப்படியே தருகிறது.

Xiaomi Smart Band 8 பயனர்கள் தங்கள் காலணிகளுடன் அதை இணைக்க அனுமதிக்கிறது. காலில் இதைப் பயன்படுத்துவதன் மூலம், Xiaomi Smart Band 8 ஆனது ஸ்ட்ரைட் நீளம் , ஸ்டேப் கவுண்ட் மற்றும் பிரிஸ்க் வாக்கிங் ஸ்டேட்டஸ் போன்ற பல்வேறு தரவைக் கண்காணிக்கிறது. இது எந்த வகையான டேட்டாவை வழங்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
ஆனால் உங்கள் ஃபிட்னஸ் டிராக்கரில் ஏற்கனவே உள்ளதை விட, Xiaomi Smart Band 8 இன்னும் விரிவான தகவலை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தரவு மிகவும் துல்லியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் விலை ரூ.3,999 புள்ளியை நெருங்கும் என்று கூறப்படுகிறது. Xiaomi Smart Band 8 இன் சீனப் பதிப்பு NFC அம்சத்தைக் கொண்டிருக்கும். இருப்பினும், உலகளாவிய பதிப்பில் NFC அம்சம் கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








