இணையப் பயன்பாடு அதிகரிப்பைச் சமாளிக்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளது - எஸ்.ஈஸ்வரன்!

|

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணத்தினால் இணையப் பயன்பாடு பெரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் இன்டர்நெட் டிராபிக் ஏற்பட்டுள்ளது என்று டெல்கோ நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. அண்மையில் நடந்த ஒரு கலந்தாய்வில் இணையப் பயன்பாடு அதிகரிப்பைச் சமாளிக்கும் ஆற்றல் அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் உள்ளது என்று அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது

இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது

வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை, வீட்டிலிருந்து கல்வி பயிலும் நடைமுறை ஆகிய புதிய ஆன்லைன் நடைமுறைகள் ஊரடங்கினால் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வீட்டிலேயே இருக்கும் மக்கள் இணையப் பயன்பாட்டைப் பயன்படுத்தியே நேரத்தைப் போக்கி வருகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

இணைய நெருக்கடி சிக்கல்களைச் சமாளிக்கும் ஆற்றல்

இணைய நெருக்கடி சிக்கல்களைச் சமாளிக்கும் ஆற்றல்

இதன் விளைவாகப் பல இடங்களைச் சரியாக இணையம் சேவை கிடைக்காமலும் மக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது போன்ற இணைய நெருக்கடி சிக்கல்களைச் சமாளிக்கும் ஆற்றல், அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனக் கட்டமைப்புக்கும் உள்ளதாகத் தொடர்பு தகவல் அமைச்சர் S. ஈஸ்வரன் கூறியுள்ளார்.

ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!

சிக்கல்கள் கட்டுப்படுத்த முடிவு

சிக்கல்கள் கட்டுப்படுத்த முடிவு

அதேபோல், குறைந்தது 30 விழுக்காடு வரையிலான கூடுதல் இணையப் பயன்பாட்டைத் தாக்குப் பிடிக்கும் வகையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஆற்றல் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இணையப் பயன்பாட்டில் ஏற்படும் கூடுதல் சிக்கல்கள் கட்டுப்படுத்த மேலும் அதிகமான இணையப் பயன்பாட்டைத் தாங்கிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் திரு. ஈஸ்வரன் கூறினார்.

Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!

அமைச்சர் உறுதி

அமைச்சர் உறுதி

அதற்காக, தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் தொடர்பு, தகவல் அமைச்சகம்
தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வழி, தனிநபர்கள், குடும்பங்கள், வர்த்தகங்கள் வலுவான, நம்பகமான இணையத்தொடர்பைத் தொடர்ந்து எதிர்பார்க்கலாம் என்று அமைச்சர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
We have the potential to cope with increasing internet usage says S Iswaran : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X