இனி துடைப்பத்தில் உட்கார்ந்து பறங்க., ராக்கெட் எஞ்சின் எல்லாம் விற்க மாட்டோம்- அமெரிக்காவை கேலி செய்யும் ரஷ்யா

|

ராக்கெட் எஞ்சின் இனி அமெரிக்காவிற்கு விற்க மாட்டோம் எனவும் துடைப்பத்தில் உட்கார்ந்து பறக்கவிடுங்கள் எனவும் அமெரிக்காவை ரஷ்யா கேலி செய்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர்

உக்ரைன் ரஷ்யா போர்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை கண்டிக்கும் விதமாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை கண்டிக்கும் விதமாக ரஷ்யா இனி அமெரிக்காவிற்கு ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அரசு விண்வளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் தெரிவித்தார்.

உலகின் சிறந்த ராக்கெட் எஞ்சின்கள்

உலகின் சிறந்த ராக்கெட் எஞ்சின்கள்

இது போன்ற ஒரு சூழ்நிலையில் உலகின் சிறந்த ராக்கெட் எஞ்சின்களை அமெரிக்காவிற்கு வழங்க முடியாது எனவும் அவர்கள் துடைப்பம் அல்லது வேறு ஏதாவது ஒன்றில் பறந்து செல்லட்டும் எனவும் ரோகோசின் அரசு ரஷ்ய தொலைக்காட்சியில் கூறினார். மேலும் அமெரிக்காவிற்கு இதுவரை 122 ராக்கெட் எஞ்சின்களை ரஷ்யா வழங்கியுள்ளதாகவும் அமெரிக்காவின் பல செயற்கைக்கோள் திட்டங்களுக்கு பிரதான அடித்தளமாக இருந்தது ரஷ்ய எஞ்சின்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரோகோசின் அளித்த தகவல்

ரோகோசின் அளித்த தகவல்

ரோகோசின் தகவலின்படி, ரஷ்யா 1990-களில் இருந்து இதுவரை 122 RD-180 இயந்திரங்களை அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளது எனவும் அவற்றில் 98 அட்லஸ் ஏவுகணை வாகனங்களை இயக்க பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி அமெரிக்காவிற்கு வழங்கிய ராக்கெட் எஞ்சின்களுக்கு சேவை செய்வதை ரஷ்யா நிறுத்தும் எனவும் அமெரிக்காவில் இன்னும் மீதமிருக்கும் 24 எஞ்சின்களும் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவி இல்லாமல் இருக்கும் எனவும் ரோஸ்கோஸ்மஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஸ்கோஸ்மாஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம்

ரோஸ்கோஸ்மாஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம்

ரோஸ்கோஸ்மாஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தேவைகளுக்கு ஏற்ப இரட்டை நோக்கம் கொண்ட விண்கலன்களை உருவாக்குவதில் ரஷ்யா கவனம் செலுத்தும் எனவும் ரோகோசின் குறிப்பிட்டார். முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு

ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு

அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா உள்ளிட்ட 12 நாடுகள் 1949 உலகப் போருக்கு பின்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் நேட்டா. இதன்பின் இதில் கூடுதலாக 30 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக இணைந்தன. மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து பார்க்கையில், நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் மீது பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில் அமைப்பில் பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்பதாகும். இந்த நிலையில் ரஷ்யா தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு உக்ரைன், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய நேட்டோ அமைப்பில் இணைய விரும்பியது.

நேட்டோ அமைப்புடன் இணைக்கக் கூடாது

நேட்டோ அமைப்புடன் இணைக்கக் கூடாது

இதையடுத்து உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்புடன் இணைக்கக் கூடாது என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தியதோடு இதற்கான உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. இது கைகூடாததை அடுத்து ரஷ்யா நேரடியாக உக்ரைன் மீது போர் தொடக்க தொடங்கியது. தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா கவுன்சில் கொண்டு வரும் தீர்மானத்தில், இந்தியா எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டது.

ரஷ்யா மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடை

ரஷ்யா மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடை

இந்த நிலையில் ரஷ்யா மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்)-க்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடை நமது ஒத்துழைப்பை அழிக்கக்கூடும் எனவும் இந்தியா மற்றும் சீனாவை அச்சுறுத்த விரும்புகிறீர்களா எனவும் வாஷிங்டன்-க்கு ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் ரோஸ்கேோஸ்மஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ், தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
We Can't Supply to United States Our Worlds Best Rocket Engines: Russia

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X