செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? நாசா விஞ்ஞானி கூறிய 'உண்மை' தகவல் என்ன தெரியுமா?

|

செவ்வாய் கிரகத்தில் உண்மையிலேயே தண்ணீர் உள்ளதா? என்ற கேள்வி நீண்ட காலமாகப் பூமி வாசிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது நடத்தப்படும் பல விதமான ஆராய்ச்சிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது இரண்டு ஆராய்ச்சிகள் மட்டுமே. இதில் ஒன்று செவ்வாயில் தண்ணீர் உள்ளதா என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சி, மற்றொன்று செவ்வாயில் ஆக்சிஜன் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியிலும் நாசா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா?

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா?

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? நாசா இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சியின் பின்னணியில் உள்ள உண்மை தகவல்கள் என்ன கூறுகிறது? செவ்வாய் கிரகத்தில் நாசா கண்டறிந்துள்ள சுவாரசியமான தகவல்கள் எல்லாம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். இந்த அனைத்து கேள்விகளுக்குமான பதிலை நாசாவில் பணிபுரியும் விஞ்ஞானியிடம் இருந்து நேரடியாகப் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சி பற்றிய உண்மையைப் பகிர்ந்து கொண்ட விஞ்ஞானி கூறியதாவது,

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கு.. ஆனா அதுவே வேற மாதிரியா இருக்கு

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கு.. ஆனா அதுவே வேற மாதிரியா இருக்கு

சரி, ''செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? நிச்சயமாக இருக்கிறது!'' என்கிறார் நாசா விஞ்ஞானி. ஆனால், இது நாம் எதிர்பார்ப்பது போன்ற நிலையில் இந்த தண்ணீர் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. நம்முடைய பூமியில் உள்ள தண்ணீரைப் போன்றது அல்ல செவ்வாய் கிரகத்தில் உள்ள தண்ணீர். காரணம், செவ்வாய் கிரகத்தின் சூழல் பூமியை விடப் பல மடங்கு வேறுபட்டுள்ளது. நமக்குத் தெரிந்த மார்ஷியனில், அதாவது செவ்வாய் கிரகத்தில் தண்ணீரின் மூலக்கூறு பூமியில் இருக்கும் நீரைப் போல் அல்லாமல் சிறிய வேறுபாட்டுடன் இருக்கிறது.

இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

பூமி தண்ணீர் மற்றும் செவ்வாய் தண்ணீருக்கு மத்தியில் என்ன வித்தியாசம்?

பூமி தண்ணீர் மற்றும் செவ்வாய் தண்ணீருக்கு மத்தியில் என்ன வித்தியாசம்?

பூமியில் தண்ணீர் 'எச்2 ஓ' (H20) என்ற மூலக்கூறில் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், செவ்வாய் கிரகத்தில் இது வேறாக இருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள தண்ணீர் நமக்கு அக்கிரகத்தின் தொலைதூர கடந்த காலத்தைப் பற்றி அறிய உதவுகிறது. அதுமட்டுமின்றி இன்னும் நமக்கு நிறையச் தகவலை இது சொல்ல முடியும் என்றும், அதே நேரத்தில் எதிர்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது உதவும் என்று கூறப்படுகிறது. நாசா விஞ்ஞானி கூறிய மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், சில பாறைகளுக்குள் கூட செவ்வாயில் தண்ணீர் சிக்கியுள்ளதாம்.

செவ்வாய் தண்ணீர் என்ன விதத்தில் மாறுபட்டு உள்ளது?

செவ்வாய் தண்ணீர் என்ன விதத்தில் மாறுபட்டு உள்ளது?

NASA தரவுகளைப் பயன்படுத்தி அந்த கண்டுபிடிப்புக்கு உதவிய செவ்வாய் கிரக விஞ்ஞானி ஈவா ஸ்செல்லேர் (Eva Scheller) என்பவரிடம் இருந்து இந்த கேள்விகளுக்குப் பதில் கிடைத்துள்ளது. செவ்வாயில் தண்ணீர் உள்ளதா என்று இனி யார் கேட்டாலும், அதற்கான குறுகிய பதில் 'ஆம் இருக்கிறது' என்பது மட்டுமே சொல்லப்படும். சரி, தண்ணீர் இருக்கிறது, ஆனால் வேறு மாதிரி இருக்கிறது என்று கூறப்பட்டது அல்லவா,

கெத்து காட்டும் BSNL: 425 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்! ரூ.397 விலையில் கூட நீண்டகால திட்டமா?கெத்து காட்டும் BSNL: 425 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்! ரூ.397 விலையில் கூட நீண்டகால திட்டமா?

செவ்வாய் கிரகத்தில் உள்ள தண்ணீரா இது?

செவ்வாய் கிரகத்தில் உள்ள தண்ணீரா இது?

அது எப்படி இருக்கிறது என்று இப்போது தெரிந்துகொள்ளலாம். இப்போது, ​​நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும், செவ்வாயில் உள்ள தண்ணீரை எப்படி வரையறுப்பது? இது பூமியைப் போல் இல்லை, ஆனால் அது நிச்சயமாக இருக்கிறது என்றால் எப்படி இருக்கிறது? என்பதே அடுத்த கேள்வி. இங்கு புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் வெள்ளை பகுதில் அனைத்தும் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் தண்ணீரை குறிக்கிறது. ஆனால் இவை உறைநிலையில் உள்ளது.

செவ்வாயில் உள்ள தண்ணீர் எப்படி இருக்கிறது தெரியுமா? உண்மை என்ன?

செவ்வாயில் உள்ள தண்ணீர் எப்படி இருக்கிறது தெரியுமா? உண்மை என்ன?

நீர் என்பது ஒரு ஆக்ஸிஜன் அணு மற்றும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்ட ஒரு மூலக்கூறு என்பது நமக்குத் தெரியும். இதை நாம் எச்2ஓ என்று அழைக்கிறோம். பொதுவாக, செவ்வாய் கிரகத்தில் உள்ள நீர், பனி (ஐஸ்) வடிவத்தில் உள்ளது. இது பூமியை விடச் சற்று வித்தியாசமானது. பூமியில், உள்ள பனி பொதுவாக நீர் பனியால் ஆனது. ஆனால் செவ்வாய் கிரகத்தில் உள்ள நீர் உண்மையில் பனி மற்றும் CO2 உடன் ஐஸ் வடிவத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில், மிகவும் குளிராக இருப்பதால், இது சுற்றுப்புறத்தில் உள்ள வாயுவுடன் சேர்ந்து உறைந்துள்ளது.

சூரியனை தொட்ட நாசா விண்கலம் எடுத்த 'வீடியோ'.. பிரபஞ்ச வரலாற்றில் நம்ப முடியாத முதல் அதிசய நிகழ்வு இது தான்..சூரியனை தொட்ட நாசா விண்கலம் எடுத்த 'வீடியோ'.. பிரபஞ்ச வரலாற்றில் நம்ப முடியாத முதல் அதிசய நிகழ்வு இது தான்..

செவ்வாய் கிரகத்தின் பாறைகளில் தண்ணீர் உள்ளதா?

செவ்வாய் கிரகத்தின் பாறைகளில் தண்ணீர் உள்ளதா?

எனவே நீங்கள் உண்மையில் துருவங்களிலும் மேற்பரப்பிற்கு அடியிலும் செவ்வாய் கிரகத்தில் இந்த நீர் பனியைக் காணமுடியும் என்கிறார் நாசா விஞ்ஞானி. அதேபோல், நமது பூமி கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நீராவியாக நம்முடன் பயணிக்கிறது. ஆனால், இது மிகவும் சிறிய தொகை என்பதனால் நாம் அதை உணர்ந்ததில்லை. பூமியின் காற்றில் ஈரப்பதத்துடன் நீர் உள்ளது. அதேபோல், பாறைகளுக்குள்ளும் தண்ணீர் இருக்கிறது. இதே சூழல் செவ்வாய் கிரகத்திலும் உள்ளது. ஆனால், அதிக குளிர் காரணமாக இது உறைந்துவிட்டது.

செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் உள்ளதா?

செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் உள்ளதா?

பூமியில் உள்ள பாறைகளை போல், செவ்வாய் பாறையின் அடுக்குகளில் சில சமயங்களில் அந்த அடுக்குகளுக்கு இடையில் தண்ணீர் சிக்கியிருக்கும். நாசாவின் பல்வேறு பணிகள் மூலம் இதை நாங்கள் உண்மையில் அளவிட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். நீரின் சாத்திய நிலையின் கடைசி நிலை, செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் உள்ளதா என்றால்? நாம் உண்மையில் இப்போது வரை அதைக் கவனிக்கவில்லை என்பதே பதில். செவ்வாய் கிரகத்தின் சில மலைப்பகுதிகளில் இருண்ட கோடுகளை நாம் காண்கிறோம், இதை நாம் மீண்டும்-மீண்டும் வரும் சாய்வு வரி என்று நாம் அழைக்கிறோம்.

பூமியில் எந்த இடத்திற்கு போகணும் மட்டும் சொல்லுங்க.. வெறும் 1 மணிநேத்தில் பிளைட்டில் கூட்டி போறோம்..பூமியில் எந்த இடத்திற்கு போகணும் மட்டும் சொல்லுங்க.. வெறும் 1 மணிநேத்தில் பிளைட்டில் கூட்டி போறோம்..

செவ்வாயின் சாய்வு கோடுகள் திரவ நீரின் ஓட்டத்தால் உருவாகியதா?

செவ்வாயின் சாய்வு கோடுகள் திரவ நீரின் ஓட்டத்தால் உருவாகியதா?

நாசா விஞ்ஞானிகளின் ஒரு யோசனை என்னவென்றால், இந்த சாய்வு கோடுகள் திரவ நீரின் ஓட்டத்தால் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த இருண்ட கோடுகளின் உருவாக்கத்தை விளக்க உங்களுக்கு உண்மையில் திரவ நீர் தேவைப்படாத பிற யோசனைகளுக்கும் வழிவகுத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள இந்த சாய்வு கோடுகள் ஒருவேளை காற்றினால் ஏற்பட்ட மணல் ஓட்டமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இது அதிக சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எப்படியாக இருந்தாலும், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்றால்? அது பூமியில் நமக்குத் தெரிந்த கடல்களைப் போல் இல்லை, ஆனால் அது நிச்சயமாக இருக்கிறது என்பதே உண்மை பதிலாக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
We Asked NASA Scientist About Is There Any Water On Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X