Home
News

போனை பாதுகாப்பாக வைத்து கொள்வது எப்படி

By Meganathan

இன்றைய தேதியில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் யாருமே இல்லை என்று தான் கூற வேண்டும். தினசரி பயன்பாடுகளில் அழைப்புகளை மேற்கொள்வதில் துவங்கி, குறுந்தகவல், பேஸ்புக், இன்டர்நெட் என இதன் பட்டியல் நீள்கின்றது. இத்தனை பயன்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.

ஸ்மார்ட்போன்களில் ஷாப்பிங் மேற்கொள்ளும் போது சைபர் குற்றங்களில் சிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதை பாருங்கள்..

ஷாப்பிங்

ஷாப்பிங்

இன்டர்நெட்டில் பொருட்களை வாங்கும் போது அதன் யுஆர்எல் "https" என துவங்க வேண்டும், சில தளங்களில் யுஆர்எல் "http" என துவங்கும் அவ்வாறு இருக்கும் யுஆர்எல் பாதுகாப்பு சற்று குறைவே.

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக பலரும் பாஸ்வேர்டு செட் செய்கின்றனர் என்றே கூறலாம், முடிந்த வரை கடினமான பாஸ்வேர்டுகளை செட் செய்வது நல்லது.

ஆப்ஸ்

ஆப்ஸ்

போன் தொலைந்து போனால் அதனை எளிதாக கண்டறிய உதவும் பல ஆப்ஸ்களை போன் தொலையும் முன் இன்ஸ்டால் செய்வது நல்லது.

கனெக்ஷன்

கனெக்ஷன்

ஸ்மார்ட்போனில் ஆட்டோமேடிக் கனெக்ஷன்களை ஆஃப் செய்து வைக்க வேண்டும். இதன் மூலம் உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து தகவல்கள் ஏதும் வெளியே போகாது.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

சமூக வலைதளங்களில் தெரிந்திராத நபர்களின் ரிக்வஸ்டுகளை ஏற்க வேண்டாம். தீய வேலைகளில் ஈடுபடுவோர் இது போன்று ரிக்வஸ்டு கொடுத்து உங்களது தகவல்களை அறிந்து கொள்ள முயற்சிப்பர்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

ஸ்மார்ட்போன் மூலம் அதிகமாக ஷாப்பிங் செய்யலாம், ஆனால் பொருட்களை வாங்கும் முகவர்களுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முன் பின் தெரிந்திராத முகவர்களை நம்பாமல் இருப்பது நல்லது.

ப்ரைவசி செட்டிங்ஸ்

ப்ரைவசி செட்டிங்ஸ்

ஆப்ஸ்களின் ப்ரைவசி செட்டிங்ஸ் சரி பார்த்து பயன்படுத்த வேண்டும். சில ஆப்ஸ்கள் தேவையில்லாத பல தகவல்களை கேட்கலாம், அவ்வாறு கேட்கும் ஆப்ஸ்களை பயன்படுத்த வேண்டாம்.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

பொருட்களை வாங்கும் போது உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களிடம் கவனமாக இருக்க வேண்டும், பல போலி மின்னஞ்சல்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

வைபை

வைபை

பல வைபை நெட்வர்க்களில் இருந்து உங்களது தகவல்கள் திருடப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், வைபை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

பல தளங்களில் சிலர் ஒரே பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவர், இது பல சமயங்களில் பிரச்சனைக்கு வழி வகுக்கும். முடிந்த வரை பாஸ்வேர்டுகளை கடினமாக செட் செய்வது நல்லது.

Best Mobiles in India

English summary
Ways to Keep Your Phone Safe. Here you will find 10 Ways to Keep Your Phone Safe. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X