கடல் நீர் மற்றும் சிறுநீரில் இயங்கும் WaterLight பவர் பேங்க் சாதனம்.! 3 வருடம் கரண்ட் தேவையில்லை!
மனித மூளை (Human Brain) எல்லோருக்கும் ஒரே அளவில் தான் படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மூளையை எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது, அவரவர் திறமையே. மூளை (Brain) ஒரே அளவாக இருந்தாலும், அதை ஒவ்வொருவரும் பயன்படுத்தும் விதம் இங்கு வேறுபடுகிறது.
ஒரு மனிதனுக்கு உயிர் வாழ இருதயம் (heart) எவ்வளவு முக்கியமோ, அதேபோல, மனித உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள மூளை மிக முக்கியமானது. மூளை சரியாக செயல்படவில்லை என்றால், ஒரு மனிதன் நடைப்பிணம் ஆகிவிடுவான். இப்படி மூளைக்கான சிறப்புக்கள் பல இருக்கிறது. குறிப்பாக, உங்கள் மூளையின் ஸ்டோரேஜ் கேபாசிட்டி (brain storage capacity) எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? அது 2.5 மில்லியன் கிகாபைட்ஸ் (million gigabytes) தகவலை ஸ்டோர் செய்யும் திறன் கொண்டது.

சிறுநீர் மற்றும் கடல் நீரில் இயங்கும் வாட்டர் லைட் சாதனம்.! இது என்ன செய்யும்?
'மனிதன் நினைத்தால் எதுவுமே சாத்தியம்' என்று கூறும் வாக்கியத்திற்கு முக்கிய காரணமாக, அவனுடைய சிந்திக்கும் திறன் (Ability to think) மற்றும் அவனுடைய செயல்பாட்டுத் திறன் (Functionality) குறிப்பிடப்படுகிறது. இப்படி, வினோதமாக சிந்தித்ததன் விளைவு தான் இந்த புதிய வாட்டர் லைட் (WATERLIGHT) பவர் பேங்க் கண்டுபிடிப்பு. வாட்டர் லைட் என்று இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது நீரில் தான் இயங்குகிறது. நீர் என்றதும் சாதாரண குழாய் தண்ணீர் (Tap water) என்று நினைத்துவிடாதீர்கள்.
இது கடல் நீரில் (Sea water) இயங்குகிறது. கடல் நீர் கிடைக்காவிட்டால், அவசரக்காலத்தில் மனிதனின் சிறுநீரை (Urine) பயன்படுத்திக்கூட இந்த வாட்டர் லைட் பவர் பேங்க் சாதனத்தை நீங்கள் இயங்கிக்கொள்ளலாம். கொலம்பியன் ரினிவப்பில் எனர்ஜி (Colombian renewable energy) தொடக்க நிறுவனமான E-Dina என்ற நிறுவனம் தான் இந்த புது விதமான கார்ட்லெஸ் லைட் (Cordless light) சாதனத்தை உருவாக்கியுள்ளது.

மொபைல் போனை கூட இதில் சார்ஜ் செய்துகொள்ளலாமா? இது பவர் பேங்க் சாதனமா?
இது ஆஃப்-கிரிட் சமூகங்களில் உள்ள மக்களுக்கு, சோலார் லைட்களுக்கு (Solar light) மிகவும் நம்பகமான மாற்றாக இந்த வாட்டர் லைட் சாதனம் திகழ்கிறது. இது உப்பு நீரை மின்சாரமாக (salt water electricity) மாற்றுகிறது. வாட்டர் லைட் என்று அழைக்கப்படும் இந்த சிறிய சாதனத்தில் 500 மில்லிலிட்டர் கடல்நீரை நிரப்ப வேண்டும் - அல்லது அவசரக்கால சூழ்நிலைகளில் சிறுநீரைப் பயன்படுத்தலாம். இது ஒரு முறை நிரப்பிவிட்டால், அடுத்த 45 நாட்களுக்கு சக்தியை வழங்குகிறது.
மினி பவர் ஜெனரேட்டராக (Mini power generator) இந்த சாதனம் செயல்படுகிறது. இதன் ஒருங்கிணைந்த USB போர்ட் வழியாக மொபைல் போன் (Mobile phone) அல்லது மற்ற சிறிய கேட்ஜெட்ஸ் (Gadgets) சாதனத்தை நீங்கள் சார்ஜ் செய்யவும் பயன்படுத்திக்கொள்ளலாம். கிரியேட்டிவ் ஏஜென்சியான, வுண்டர்மேன் தாம்சனின் கொலம்பியப் பிரிவின் ஒத்துழைப்புடன் இது உருவாக்கப்பட்டது. இது எல்லா நேரங்களிலும் இயங்கக் கூடியது. சோலார் லைட்களை போல் இல்லாமல், இது எளிமையாக மின்சாரத்தை உருவாக்குகிறது.

அடேங்கப்பா.! 3 வருடத்திற்கு மொபைலை சார்ஜ் செய்ய கரண்ட்டே தேவையில்லையா?
வுண்டர்மேன் தாம்சன் கொலம்பியாவின் நிர்வாக கிரியேட்டிவ் டைரக்டர், பைப் ரூயிஸ் பினெடா கூறுகையில், "சூரிய சக்தி லைட்களை விட வாட்டர் லைட் மிகவும் திறமையானதாக இருக்கும், ஏனெனில் இது உடனடியாக மின்சாரத்தை உருவாக்குகிறது. உப்பு தண்ணீரால் நிரப்பப்பட்டவுடன், இதில் சக்தி (Power) விநியோகம் உடனடியாக துவங்கிவிடும். சோலார் லைட்களை போல, பேட்டரிகளை (Battery) சார்ஜ் செய்த பின்னர், சக்தி ஆற்றலாக மாற்றப்படும் வேலை இங்கு இல்லை". என்று கூறியுள்ளார்.
வாட்டர்லைட் அயனைசேஷன் மூலம் ஒரு நாளின் 24 மணி நேரமும் வேலை செய்கிறது. இது உப்பு திரவத்தில் உள்ள உப்பை, மெக்னீசியம் மற்றும் தாமிரத் எலக்ட்ரோலைட்டு தகடுகளுடன் வினை புரிந்து, விளக்கின் உட்புறத்தில் மின்சாரத்தைத் தயாரிக்கிறது. இது நீண்ட காலம் நிலைத்து நிற்கும்படியான ஒரு புதிய வழியை E-Dina இதில் உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளது. இதன் வாழ்நாள் பற்றிப் பேசுகையில், இது சுமார் 5,600 மணிநேர ஆற்றலை வழங்கக்கூடியது.

வாட்டர்லைட்டில் பயன்படுத்திய உப்பு நீரை வீணடிக்காமல் 'இப்படியும்' யூஸ் செய்யலாமா?
ஒட்டுமொத்தமாக, இந்த வாட்டர்லைட் டிவைஸ் (WaterLight) இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை அதன் பயன்பாட்டை மின்சார தேவையின்றி வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த சாதனத்தில் நீங்கள் பயன்படுத்தும் உப்பு நீரில் உள்ள உப்பு துகள்கள் தீர்ந்த பின், அந்த நீரை நீங்கள் வீட்டில் பாத்திரம் கழுவ அல்லது துணி துவைக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தகைய புதிய கண்டுபிடிப்பு பற்றி உங்களுடைய கருத்து என்ன? அல்லது உங்கள் மூளையில் வேறு ஏதேனும் விசித்திரமான ஐடியா இருக்கிறதா? என்று கமெண்டில் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








