உஷார்: ஆர்டர் செய்தது ஸ்மார்ட் வாட்ச்., வந்தது தண்ணீர் நிரப்பப்பட்ட காண்டம்- கூடவே இருந்த இன்னொரு பொருள் வேற!

|

ஆன்லைன் ஆர்டர் வழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம். மக்கள் ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இதுபோன்ற ஆன்லைன் தளங்களில் சில பொருட்கள் சலுகையுடன் கிடைப்பதால் பல ஆன்லைன் தளங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல்
பண்டிகை காலம் என்பதால் பல்வேறு ஆன்லைன் தளங்களில் சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

ஆன்லைனில் ஸ்மார்ட் வாட்ச் ஆர்டர்

ஆன்லைனில் ஸ்மார்ட் வாட்ச் ஆர்டர்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். 32 வயதான இவர் ஆன்லைனில் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை பார்த்து ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஆன்லைனில் ஆர்டர் செய்த போதே ரூ.2400 பணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு அவர் ஆர்டர் செய்த ஸ்மார்ட் வாட்ச் 15 ஆம் தேதி டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்தப்படி ஜனவரி 15 ஆம் டெலிவரியும் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதியில் டெலிவரி

குறிப்பிட்ட தேதியில் டெலிவரி

அணில் குமார் வாங்கிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதை அணில் குமார் ஆவலுடன் பிரித்தப் பார்த்தப்போது அதிர்ச்சி காத்திருந்தது. டெலிவரி செய்யப்பட்ட உடன் அணில்குமார் அதை ஸ்மார்ட்வாட்ச் என நினைத்து பிரித்து பார்த்துள்ளார். ஆனால் அதற்குள் ஒரு சிறிய அட்டைப் பெட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஆணுறை ஒன்று இருந்துள்ளது. அதனுடன் மற்றொரு சாதாரண ஆணுறையும் இருந்திருக்கிறது. இதை பார்த்ததும் அணில் குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பார்சலுக்குள் டெலவரி செய்யப்பட்ட பொருள் இல்லை

பார்சலுக்குள் டெலவரி செய்யப்பட்ட பொருள் இல்லை

பார்சலுக்குள் டெலவரி செய்யப்பட்ட பொருள் இல்லை என்று தெரிந்த உடன் அணில் குமார் உடனடியாக டெலிவரி செய்ய வந்த நபரை நிறுத்தி விசாரித்துள்ளார். அதற்கு, தான் வெறும் டெலிவரி ஊழியர் மட்டுமே தனக்கு தான் டெலிவரி செய்யும் எந்த பார்சலுக்குள்ளும் என்ன இருக்கிறது என்பது குறித்த எந்த தகவலும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார். உடனடியாக தான் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவத்தன் வாடிக்கையாளர்கள் மையத்துக்கு அணில்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் வாடிக்கையாளர்கள் மையத்தில் இருந்து எந்த பதிலும் சரியாக வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அணில்குமார் ஆலுவா காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்டர் செய்த ஐபோன்

ஆர்டர் செய்த ஐபோன்

முன்னதாக ஆன்லைனில் ஒருவர் ஐபோனை ஆர்டர் செய்தார். ஆனால் அதற்கு பதிலாக 5 ரூபாய் நாணயமும், ஒரு சோப்பு கட்டியும் வைக்கப்பட்டிருப்பதை கண்டு ஆர்டர் செய்தவர் அதிர்சி அடைந்தார். மேலும் இது குறித்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம். கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் நூருல் அமீன். இவர் கடந்தசில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம்ஆப்பிள் ஐபோன் 12 மாடல் வாங்க ஆர்டர் செய்திருந்தார். பின்பு டெலிவரிக்கு வந்த அந்த ஐபோன் பார்சலை பிரித்துப் பார்த்தநூருல் அமீன் அதிர்ச்சியடைந்தார்.

ஐபோனுக்கு பதிலாக 5 ரூபாய் நாணயமும், சோப்புக் கட்டியும்

ஐபோனுக்கு பதிலாக 5 ரூபாய் நாணயமும், சோப்புக் கட்டியும்

அதாவது இந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக 5 ரூபாய் நாணயமும், சோப்புக் கட்டியும் வைக்கப்பட்டிருந்தது. எனவேஇதைதொடர்ந்து அவர் எடுத்த வீடியோ மூலம் சைபர் போலீசாரிடம் ஆதாரத்துடன் புகார் அளித்தார். மேலும் அந்த
பாக்ஸின் மேல் இருந்த ஐஎம்இஐ எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் வலைதளநிறுவனத்திடம் விசாரித்துள்ளனர்.

ஐஎம்இஐ எண் உள்ள மொபைல் போன்

ஐஎம்இஐ எண் உள்ள மொபைல் போன்

பின்பு அந்த விசாரணையில் குறிப்பிட்ட ஐஎம்இஐ எண் உள்ள மொபைல் போன் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும், ஜார்க்கண்ட்மாநிலத்தில் செப்படம்பர் மாதம் முதல் பயன்பாட்டில் இருப்பதும் தெரியவந்தது. அதன்பின்பு ஒருவழியாக நூருல் அமீனுக்கு அந்த மொபைலுக்கான தொகை முழுவதுமாக திருப்பியளிக்கப்பட்டது. மேலும் மொபைல் போன் மாடலுக்கு பதிலாக சோப்பை வைத்து அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சைபர் க்ரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக ஐபோன் வாங்கவேண்டும் என்ற கனவு

நீண்ட நாட்களாக ஐபோன் வாங்கவேண்டும் என்ற கனவு

இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு சிம்ரன்பால் சிங் என்பவர் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்ட ஆஃபர் மூலம் ஐபோன் ஒன்றை ரூ.51,000-க்கு ஆர்டர் செய்துள்ளார். குறிப்பாக நீண்ட நாட்களாக ஐபோன் வாங்கவேண்டும் என்ற கனவை தான் கஷ்டப்பட்டு சேர்ந்த பணம் மூலம் வாங்க நினைத்துள்ளார் சிம்ரன்பால் சிங் . அவர் ஆர்டர் செய்த பார்சலை பிளிப்கார்ட் டெலிவரி பாய் கொண்டு வந்து கொடுத்துள்ளார். பின்பு தன்னுடைய கனவு நினைவானதை பார்க்கும் வகையில் சிம்ரன்பால் தான் பார்சலை பிரிப்பதை
வீடியோ எடுக்கவும் சொல்லியுள்ளார். அந்த டெலிவரி பாய் அவர் சொன்னது போல வீடியோ எடுக்கும் போது அந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக இரண்டு பெரிய நிர்மா சோப்பு இருந்துள்ளது. இதைப் பார்த்த சிம்ரன்பால் அதிர்ச்சி அடைந்தார். உடனே உஷாரான சிம்ரன்பால் இதுதொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். பின்பு சிம்ரன்பாலின் புகாரை ஏற்றுக் கொண்ட பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு சில மணி நேரங்களில் அவர் கொடுத்த பணத்தை திரும்ப அளிப்பதாக உறுதி அளித்தது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Water filled condom has been delivered to the Kerala Man who ordered the SmartWatch online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X