இது ரொம்ப தவறு- யூடியூப் பார்த்து இதெல்லாம் செய்வதா., சட்டரீதியிலான நடவடிக்கை பாயும்- அமைச்சர் விளக்கம்!
யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்வது என்பது மிகவும் தவறான அணுகுமுறை என்றும் இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வந்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
யூடியூப் தளம் என்பது பிரதான பயன்பாடாக மாறி வருகிறது. யூடியூப் தளம் பார்த்து கற்றுக் கொள்வது, அறிந்து கொள்வது என பல தேவைகளுக்கு பயன்பாட்டு வருகிறது. யூடியூப் பார்த்து சமையல் கற்றுக் கொண்டு அதை செய்வது, யூடியூப் பார்த்து உடல் எடையை குறைப்பது, தொப்பையை கரைப்பது, முகப்பருக்கள், கரும்புள்ளிகளை குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி அழகை மெருகேற்றுவது என பல வழிமுறைகளை பின்பற்றி வந்த நிலையில் தற்போது யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது என்றால் அதை ஒத்துக் கொள்ள முடிகிறதா?. இணைய பயன்பாடுகள் என்ற அனைத்திலும் நன்மை, தீமைகள் என இரண்டும் உண்டு. அதில் நன்மைகளை பார்த்து புரிந்துக் கொண்டு தீமைகளை அகற்றுவதே யாவருக்கும் நன்மை. இந்த நிலையில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது என்ற அணுகுமுறை குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு அளித்த பதில்
மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார். மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான மாணவர்கள் தரவரிசை பட்டியல் மதுரையில் வெளியிடப்பட இருக்கிறது, தமிழக முதலமைச்சர் முன்னதாகவே நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்த கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி வழங்கும் திட்டத்தினை தமிழகம் முழுவதும் மதுரையில் துவங்கி வைக்கப்பட இருக்கிறது. இதிலும் அவர் கலந்து கொள்கிறார்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணி
மதுரையில் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளதே என்ற கேள்விக்கு, அப்படி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியினை ஒன்றிய அரசு துவங்கினால் அதை முதலில் செய்வது தமிழக அரசாகத் தான் இருக்கும் என பதிலளித்தார்.

மிக தவறான அணுகுமுறை., சட்டப்படி நடவடிக்கை
சமீபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகேயுல்ல நெடும்புலி புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் தனது மனைவி கோமதிக்கு இயற்கை மற்றும் மரபுவழி ஆர்வத்தில் யூடியூப் சேனலை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். இதில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் பிரசவமான கீதாவுக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. யூடியூப் மூலம் பிரசவம் பார்த்துள்ள தகவல் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்றும் இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதிலளித்தார்.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் மட்டுமே
புதிய தடுப்பூசிகள் ஏதேனும் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு புதிய தடுப்பூசிகள் ஏதும் இல்லை ஏற்கனவே ஒன்றிய அரசு வழங்கி வரும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் மட்டுமே போடப்படுவதாக பதிலளித்தார். டெங்கு காய்ச்சல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக முதலமைச்சரின் அறிவுறத்தலின்படி சுகாதாரத் துறையின் சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதிலளித்தார். அதேபோல் ஊரடங்கு தளர்வு கொடுத்த நிலையில் கோவில்களில் சில திருவிழாக்கள் தடை செய்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தளர்வுகள் மூலம் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் ஒமிக்ரான் போன்ற நோய் அச்சுறுத்தலால் சுய கட்டுப்பாட்டை தொடர்வது அவசியமாக இருக்கிறது என பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications