ஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது.! வெளியானது ஆய்வறிக்கை.!

|

பொதுவாக ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பார்ப்பது உடல் ரீதியில் நமக்கு மோசமான அனுபவத்தைத் தரும், அதேசமயம் இந்த வீடியோக்களை தடை செய்ய பல்வேறு நாடுகளும் பல முயற்சி செய்து வருகிறது.. இந்தியாவிலும் ஆபாச
வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திங்க் டேங்க் என்ற நிறுவனம்

திங்க் டேங்க் என்ற நிறுவனம்

இந்நிலையில் பிரெஞ்சு நாட்டு திங்க் டேங்க் என்ற நிறுவனம் ஆன்லைன் ஆபாசத்தைச் சார்ந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இப்போது வைரலாக உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்பனை வெளியிடுகின்றன

கார்பனை வெளியிடுகின்றன

திங்க் டேங்க் குழு வெளியிட்ட அறிக்கை என்னவென்றால், ஒட்டுமொத்த ஆன்லைன் வீடியோக்கள் ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியன் டன் கார்பனை வெளியிடுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இதில் மூன்றில் ஒரு பங்கு ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதிலிருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளன.

இஸ்ரோவின் பாகுபலி (சந்திராயன் 2) திட்டம் நிறுத்தப்பட்டதற்கான உண்மை காரணம் இதுதான்!இஸ்ரோவின் பாகுபலி (சந்திராயன் 2) திட்டம் நிறுத்தப்பட்டதற்கான உண்மை காரணம் இதுதான்!

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் 4% கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை உற்பத்தி செய்கின்றன என்றும் 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 8% ஆக உயரக்கூடும் என்றும் திங்க் டேங்க் மதிப்பிட்டுள்ளது.

தொலைப்பேசிகளிலிருந்து டிவிக்கள் வரை

தொலைப்பேசிகளிலிருந்து டிவிக்கள் வரை

இப்போது ஆன்லைன் வீடியோக்களால் மட்டும் CO2 உமிழ்வை மதிப்பிட்டுள்ளது. தொலைப்பேசிகளிலிருந்து டிவிக்கள் வரை இந்த வீடியோ தரவை எடுத்துச் சென்று வெவ்வேறு சாதனங்களில் பார்க்க எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்று அவர்கள் மதிப்பிட்டனர். இறுதியாக மின்சார உற்பத்தியிலிருந்து கார்பன் வெளியேற்றத்திற்கான உலகளாவிய சராசரி புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த உமிழ்வை அவர்கள் மதிப்பிட்டனர்.

வைரல்: திருமண ஜோடிக்கு தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கிய நண்பர்கள்!வைரல்: திருமண ஜோடிக்கு தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கிய நண்பர்கள்!

60%  ஆன்லைன் வீடியோ

60% ஆன்லைன் வீடியோ

இந்த ஆய்வில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் ஆற்றல் நுகர்வு ஆண்டுக்கு 9% அதிகரித்து வருவதாகக் கண்டறிந்துள்ளது. பின்பு உலக தரவு ஓட்டங்களில் சுமார் 60% ஆன்லைன் வீடியோவிலிருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்கைப் வீடியோ அழைப்புகள்

ஸ்கைப் வீடியோ அழைப்புகள்

ஆன்லைன் வீடியோ குறித்த அறிக்கையின் வரையறையில் ஸ்கைப் வீடியோ அழைப்புகள், "camgirls" அல்லது டெலிமெடிசின் போன்ற நேரடி வீடியோ ஸ்ட்ரீமிங் பாய்வுகளில் 20% பங்கைக் கொண்டுள்ளது.

கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை

கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை

ஆன்லைன் வீடியோக்களிலிருந்து உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதனங்களிலும், இயற்கை சார்ந்த அனைத்து இடங்களிலும் ஆன்லைன் காணொளிகளுக்குக் கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும் என்று என திங்க் டேங்க் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது கண்டிப்பாக மக்களுக்கும் மற்றும் விலங்குகளுக்கும் பாதுகாப்பு தரும் வகையில் இருக்கும்.

யோசிக்க வேண்டும்

யோசிக்க வேண்டும்

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ் பிரீஸ்ட் என்ற விஞ்ஞானியிடம் கூறும்போது, "டிஜிட்டல் சேவைகளின் வமைப்பாளர்கள் தாங்கள் வழங்கும் சேவைகளின் ஒட்டுமொத்த தாக்கத்தைப் பற்றி கவனமாகச் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை இது மீண்டும் நிரூபிக்கிறது. குறைந்த சாதனங்களை வைத்திருப்பது மற்றும் எல்லா இடங்களிலும் மொபைல், உயர்தர இணைய இணைப்பைக் கோருவது ஆகியவை நாம் அதிகமாக யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
watching-porn-online-harms-environment : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X