Jio, Airtel சிம் இருக்கா.. ஸ்குவிட் கேம் சீசன் 3.. FREE நெட்பிளிக்ஸ் சாந்தா.. எந்தெந்த திட்டங்கள்?
நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தில் ஸ்குவிட் கேம் சீசன் 3 (Squid Game Season 3) ஸ்ட்ரீமிங் தொடங்கிவிட்டது. இதனால், பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்யும்போது, நெட்பிளிக்ஸ் சந்தா இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. இவர்களுக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் எந்தெந்த திட்டத்தில் நெட்பிளிக்ஸ் சந்தா கொடுக்கப்படுகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இரண்டு தனியார் நிறுவனங்களும் தலா 2 திட்டங்களை கொடுக்கின்றன. இதில் உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
ஜியோ ரூ 1299 திட்டம் நெட்பிளிக்ஸ் (Jio Rs 1299 Plan Netflix): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சந்தா கிடைக்கிறது. 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவும் கிடைக்கிறது. ஆகவே, 2 ஓடிடி ஆப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.

மற்ற சலுகைகளை பார்க்கையில், 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை போக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ ஏஐ கிளவுட் மற்றும் ஜியோ டிவி சலுகைகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
ஜியோ ரூ 1799 திட்டம் நெட்பிளிக்ஸ் (Jio Rs 1799 Plan Netflix): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தா கிடைக்கிறது. இதையும் 84 நாட்கள் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல இதற்கும் 90 நாட்கள் சாந்தா கொண்ட ஜியோஹாட்ஸ்டார் மொபைல் ஓடிடி ஆப் கிடைக்கிறது. தினசரி டேட்டா சலுகையும் அதிகமாக கிடைக்கிறது.
ஆகவே, இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி சலுகை கிடைக்கிறது. அதேபோல ஜியோ ஏஐ கிளவுட் சலுகையும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 1729 திட்டம் நெட்பிளிக்ஸ் (Airtel Rs 1729 Plan Netflix): இந்த ஏர்டெல் திட்டமானது, கிட்டத்தட்ட முதலில் பார்த்த ஜியோ திட்டம் போலவே இருக்கிறது. ஏனென்றால், 84 நாட்கள் சந்தாவுடன் நெட்பிளிக்ஸ் பேசிக் ஓடிடி மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா கிடைக்கிறது. இதுபோக ஜீ5 பிரீமியம், எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் போன்ற கூடுதல் ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது.
இந்த ஏர்டெல் திட்டத்துக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையும் வருகிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இதற்கு அடுத்த திட்டம் கூடுதல் டேட்டா சலுகையுடன் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 1798 திட்டம் நெட்பிளிக்ஸ் (Airtel Rs 1798 Plan Netflix): இந்த ஏர்டெல் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தா கிடைக்கும். இதை தவர மற்ற பிரீமியம் ஓடிடி ஆப்களை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், எக்ஸ்ட்ரீம் ஆப் ஓடிடியில் பிரீமியம் அல்லாத கன்டென்ட்கள் கிடைக்கும். இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இந்த டேட்டா போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ளலாம். 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இதுவே நெட்பிளிக்ஸ் சந்தாவை தனியாக பெற்றால், மாதத்துக்கு ரூ.149 செலவில் பெற்று கொள்ளலாம். ஆனால், 720p ரெசொலூஷன் மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications