போரில் காயம்பட்டவர்களை காப்பாற்ற வந்துவிட்டது தானியங்கி ட்ரோன்.!

புத்திசாலித்தனமான ரோபோடிக் திறன் இருக்கும் பட்சத்தில், யுத்தத்தில் காயம்பட்டவர்களை காப்பாற்ற அதிக மனித உயிர்களை ஆபத்தில் விட வேண்டிய தேவை ஏற்படுவதில்லை.

|

ஒரு ராணுவ வீரரின் உதவி இல்லாமலேயே யுத்தத்தில் காயம்பட்டவர்களை எடுத்து வரும் பணியில் கார்மோரண்டு ஈடுபடுகிறது.

போரில் காயம்பட்டவர்களை காப்பாற்ற வந்துவிட்டது தானியங்கி ட்ரோன்.!

புத்திசாலித்தனமான ரோபோடிக் திறன் இருக்கும் பட்சத்தில், யுத்தத்தில் காயம்பட்டவர்களை காப்பாற்ற அதிக மனித உயிர்களை ஆபத்தில் விட வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. அர்பன் ஏரோனாட்டிக்கல் என்ற நிறுவனத்திற்கு சொந்தமாக ஒரு நிறுவனம், ஒரு ராணுவ வீரனின் உதவி இல்லாமலேயே காயமடைந்த இருவரை தூக்கி கொண்டு செல்ல கூடிய ஒரு தானியங்கி விடிஓஎல் (செங்குத்தாக மேலே எழும்புதல் மற்றும் தரையிறங்குதல் திறன்) ட்ரோனான கார்மோரண்டு, தனது முதல் 'மிஷன் ரீப்ரேசென்ட்டிவ்' பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

இதில் இருந்து காயம்பட்டவர்களைக் கீழே இறக்க மட்டும் மனிதர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. காயமடைந்தவர்களில் சுயநினைவு கொண்டவர்கள் பேசுவதற்கான ஒரு வீடியோ கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், இந்த எந்திரம் தானாகவே கூட பறந்து செல்கிறது.

இந்த வாகனத்தை முதன்மையாக, ராணுவத்தின் முதன்மை வரிசையில் ஆதரவளிக்கும் நோக்கில், 20 மைல் தூரம் வரை இயக்க முடியும். ஆனால் இந்த வாகனத்தில் உள்ள ஒரே ஒரு டர்போஷாஃப்ட் என்ஜின் மற்றும் இரண்டு மாற்றியமைக்க கூடிய ரோட்டர்களைப் பயன்படுத்தி, மணிக்கு 100 மைலுக்கு அதிகமான வேகத்தில் பறந்து செல்ல முடியும். பலத்த காற்று உள்ள பகுதியில் ஒரு ஹெலிகாப்டரை இயக்கும் பைலட்டை போல, இது இயங்க கூடியது என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நீங்கள் நினைப்பது போல, இந்த ட்ரோன் அவ்வளவு ஒளிரும் தன்மை கொண்டதாக இருப்பது இல்லை. மாறாக, இது ஒரு கார்பன் ஃபைபர் பாடியைக் கொண்டிருப்பதால், ரேடரில் சிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு ஆகும். மேலும் இதில் உள்ள வெளியேற்றும் அமைப்பு தீப்பொறிகளைக் குளிர்மைப்படுத்தி விடுவதால், கண்டறியும் வகையிலான எந்தவிதமான ஒரு அறிகுறியும் இல்லாமல் வானில் பயணிக்கிறது.

போரில் காயம்பட்டவர்களை காப்பாற்ற வந்துவிட்டது தானியங்கி ட்ரோன்.!

இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் பயன்பாட்டிற்காக தயாரிக்கவே இந்த ரோபோட்டிக் விமானம், துவக்கத்தில் தீர்மானிக்கப்பட்டது. புத்திசாலித்தனமான ரோபோட்டிக்ஸ் திறனுக்கு தாயகமாக விளங்கும் அது போன்ற ஒரு நாட்டில், இப்படிப்பட்ட ஒரு தயாரிப்பை பார்ப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. மற்ற ராணுவ வாடிக்கையாளர்களுக்கும், கார்மோரண்டுகள் மூலம் பயன் அடைய விரும்புவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, குடிமக்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும், வான்வழி ஆம்புலன்ஸ்களை இயக்கவும் ஈடுபடுத்த உலகம் முழுவதும் பயன்படுத்த முடியும்.
Best Mobiles in India

English summary
Watch a medevac drone perform a simulated rescue : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X