Home
News

எத்தனை மணிக்கு சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும்? மூன் டச்சை லைவ் பார்க்க ஆசையா? இதோ லிங்க்..

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'அந்த' ஒரு முக்கியமான தருணத்தை நாம் நெருங்கிவிட்டோம். சந்திரயான்-3 (Chandrayaan-3) நிலவில் தரையிறங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை நேரலை காண இந்திய மக்களுக்கு இஸ்ரோ ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான (Indian Space Research Organisation) இஸ்ரோ, நிலவை நோக்கி சந்திரயான்-3 திட்டத்தை ஆரம்பித்தது. இப்போது, சந்திரயான்-3 அதன் லேண்டரை (Chandrayaan-3 lander landing) நிலவில் தரையிறக்க தயார் ஆகி வருகிறது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் பெருமைமிக்க நிகழ்வை இஸ்ரோ (ISRO) அதன் யூடியூப் சேனல் (YouTube) வழியாகவும், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாகவும் இன்று நேரலை செய்கிறது.

எத்தனை மணிக்கு சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும்? மூன் டச் லைவ் இதோ!

இந்திய பொதுமக்கள் இந்த நிகழ்வை நேரடி காணல் மூலம் பார்வையிட வேண்டும் என்பதற்காக, இஸ்ரோ இந்த நிகழ்வை நேரலை (ISRO Live Telecast) செய்கிறது. இந்த நேரலையை ஆன்லைனில் எப்படி பார்ப்பது? என்று பார்க்கலாம் வாங்க. யூடியூப் மற்றும் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணைய பக்கம் வழியாக மட்டுமின்றி, இஸ்ரோவின் பல்வேறு சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் இந்த நிகழ்வு நேரலை செய்யப்படுகிறது.

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கத் தயாராக இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதனால், சந்திரயான்-3 நிலவு தரையிறக்கம் திட்டமிட்ட படி, ஆகஸ்ட் 23 ஆம் தேதி (இன்று), மாலை 06:04 (சாத்தியம்) மணி அளவில் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் 3 நிலவு தரையிறக்கம் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் (National geographic channel) மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

எத்தனை மணிக்கு சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும்? மூன் டச் லைவ் இதோ!

சந்திரயான்-3 தரையிறங்குவதற்கு முன்னதாக மாலை 4 மணி முதல் இஸ்ரோவின் லைவ் ஸ்ட்ரீமிங் (ISRO Chandrayaan-3 landing live streaming) தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்காக, சந்திரயான் -3 ஜூலை 14 அன்று விண்ணில் இரண்டாவது ஏவுதளம், SDSC-SHAR ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஏவப்பட்டது. இது இந்தியாவின் மூன்றாவது சந்திரப் பயணமாகும்.

இது விக்ரம் என்ற லேண்டரையும் (Vikram lander), பிரக்யான் எனப்படும் ரோவரையும் (Pragyaan Rover) சந்திர மேற்பரப்பில் (Moon surface) வைத்து அவற்றை தோராயமாக ஒரு சந்திர நாள் அல்லது 14 பூமி நாட்களுக்கு இயக்க முயற்சிக்கும் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சந்திர மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை (moon landing) அடைய தயாராக உள்ளது" என்று இஸ்ரோவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளது.

டிவி பார்வையாளர்கள் சந்திரனில் சந்திரயான்-3 தரையிறங்குவதை (Chandrayaan-3 landing live) டிடி நேஷனல் (DD national) மற்றும் பல செய்தி சேனல்கள் வழியாகவும் நேரடியாகப் பார்க்கலாம்.

சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பை நெருங்க 40 நாட்கள் ஆனது. இஸ்ரோ விண்கலம் அதன் அமெரிக்க விண்கலத்தைப் போல வலுவாக இல்லாததால் நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இம்முறை பணி, தரையிறங்குவது மட்டுமல்ல, நிலவின் புவியியல் மற்றும் வரலாறு பற்றிய தரவுகளை ஆராய்ந்து சேகரிக்க பிரக்யான் ரோவரைப் பயன்படுத்துவது இந்த திட்டத்தின் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

இது தரையில் துளையிடுவது மற்றும் நிலவின் கனிம கலவை, நில அதிர்வு செயல்பாடு மற்றும் வளிமண்டல நிலைமைகளை சரிபார்க்க மாதிரிகளை சேகரிப்பது போன்ற ஆராய்ச்சிகளை நிலவில் (moon) செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரனில் இருந்து பூமியின் (earth) இந்த காரணிகள் மற்றும் புகைப்படங்கள் நிலவில் மனிதன் வாழ்வதற்கான வாய்ப்புகளை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இது ஒரு பெரிய வரலாற்று மிக்க செயலாகும். சந்திரயான்-3 சரியாக தரையிறங்கியவுடன், அமெரிக்கா (America), ரஷ்யா (Russia) மற்றும் சீனாவுக்குப் (China) பிறகு இதுபோன்ற சாதனையை எட்டிய நான்காவது நாடாக இந்தியா (India) மாறும் என்று கூறப்படுகிறது. இந்த வரலாற்று மிக்க நிகழ்வை நேரலை காண மக்கள் இஸ்ரோவின் யூடியூப் சேனல், இணையதள பக்கம், நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக மலை 4 முதல் பார்வையிடலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Watch ISRO Chandrayaan-3 Moon Landing Live In India Online Today With Vikram Lander and Pragyaan Rover
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X