Home
News

தங்கு தடையின்றி.. IPL 2023 கிரிக்கெட் போட்டிகளை பார்க்க உதவும் 3 Airtel திட்டங்கள்!

கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல், 2023-க்கான ஐபிஎல் கிரிக்கெட் (IPL 2023) போட்டிகள் சற்றே வித்தியாசமாக நடக்கிறது. முன்னதாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட ஐபில் போட்டிகள் தற்போது ஜியோ சினிமா (Jio Cinema) வழியாக முற்றிலும் இலவசமாக ஒளிபரப்பப்படுகிறது.

அதாவது நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) சேவையின் கீழ் பயன்பெறும் வாடிக்கையாளராக இல்லாவிட்டாலும் கூட, உங்களால் ஜியோ சினிமா ஆப்பை டவுன்லோட் செய்து - மொபைல் நம்பரை பயன்படுத்தி லாக்-இன் செய்து - ஐபில் 2023 கிரிக்கெட் போட்டிகளை லைவ் ஆக பார்க்க முடியும்.

தங்கு தடையின்றி.. IPL போட்டிகளை பார்க்க உதவும் 3 Airtel திட்டங்கள்!

ஒருவேளை நீங்களொரு ஏர்டெல் கஸ்டமராக (Airtel Customer) இருந்தால், நிகழும் ஐபில் 2023 போட்டிகளை தங்கு தடையின்றி காண - உங்கள் டெய்லி டேட்டாவை மீறிய - கூடுதல் டேட்டா (Extra Data) தேவைப்படலாம். அப்படியான சூழ்நிலைகளில் கைகொடுக்கும் 3 முக்கியமான டேட்டா பேக்குகள் (Data Packs) இதோ:

01. ஏர்டெல் ரூ.19 டேட்டா பேக்: இரவு 10 மணிக்கு முன்னரே உங்களுடைய டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்து விடும்; அந்நாளில் நடக்கும் ஐபில் போட்டியின் கடைசி சில ஓவர்களை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகி விடும் என்கிற நிலையில் உங்களுக்கான ஆபாத்பாண்டவன் - ஏர்டெல் ரூ.19 தான்; இது 1ஜிபி டேட்டாவை வழங்கி உங்களை காப்பாற்றும்!.

02. ஏர்டெல் ரூ.181 டேட்டா பேக்: ஐபில் 2023 சீஸன் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜிபியாக ரீசார்ஜ் செய்து கொண்டிருக்க முடியாது என்கிறவர்கள் ஏர்டெல்லின் ரூ.181 டேட்டா பேக்கை தேர்வு செய்யலாம். இது தினசரி அடிப்படையில் (Daily Basis) டேட்டாவை வழங்கும் ஒரு ஸ்மார்ட்டான டேட்டா பேக் ஆகும்.

இது ஒவ்வொரு நாளும் 1ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டாவை மொத்தம் 30 நாட்களுக்கு வழங்குகிறது. அதாவது ரூ.181 இன் கீழ் மொத்தம் 30ஜிபி டேட்டா கிடைக்கும். சுவாரசியமாக இந்த பேக்கின் கீழ் 1 ஜிபி-க்காக நீங்கள் செலவு செய்யும் தொகை சுமார் ரூ.6 மட்டுமே. எனவே முடிந்த வரை 1ஜிபி டேட்டாவை ரூ.19-க்கு வழங்கும் டேட்டா பேக்கை தவிர்க்கவும்!

03. ஏர்டெல் ரூ 301 டேட்டா பேக்: இந்த திட்டம் முழுக்க முழுக்க டெய்லி டேட்டா லிமிட்டை வெறுப்பவர்களுக்கானது. ஏனென்றால் இது தினசரி வரம்புகள் இல்லாத மொத்த டேட்டாவை (Bulk Data) வழங்குமொரு திட்டமாகும். அதாவது ரூ.301 டேட்டா பேக்கின் கீழ் மொத்தம் 50ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா கிடைக்கும்; இதை உங்கள் இஷ்டம் போல பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த பேக்கின் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு வேலிடிட்டியே கிடையாது. இதன் வேலிடிட்டி உங்கள் மெயின் ரீசார்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். அதாவது நீங்கள் 1 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ரீசார்ஜை கொண்டிருந்தால், இந்த டேட்டா பேக்கின் கீழ் கிடைக்கும் 50ஜிபி டேட்டாவை.. 365 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஏர்டெல்லின் ரூ.301 டேட்டா பேக் மட்டுமல்ல, நாம் மேலே பார்த்த ரூ.19 மற்றும் ரூ.181 டேட்டா பேக்குகளும் கூட எந்த விதமான பிரத்யேக வேலிடிட்டி உடனே வரவில்லை. ரூ.301-ஐ போலவே இந்த 2 டேட்டா பேக்குளின் வேலிடிட்டியானது உங்கள் மெயின் ரீசார்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். பிறகென்ன..? ஹேப்பி ஐபிஎல் 2023!

Best Mobiles in India

English summary
Watch IPL 2023 Cricket Matches Without Any Interruption Using These 3 Airtel Data Packs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X