ஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ

|

தெருவிளக்கில் படித்து அரசு அதிகாரியாக பணியாற்றி வருபவர்கள் மற்றும் பல கிலோ மீட்டர் பயணம் செய்து பள்ளிக்கு சென்ற சிறுவன் சாதனை போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறியுள்ளன. ஆனால் தற்போது நாம் 5ஜி காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எனவே இணைய பயன்பாடு என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

கணினி சேவையாக மாறும் பள்ளிகள்...

கணினி சேவையாக மாறும் பள்ளிகள்...

எழுத்தை வைத்தே தலையெழுத்தை முடிவு செய்து விடலாம் என்று கூறுவதை கேள்விபட்டிருப்போம் ஆனால் இந்த காலக்கட்டத்தில் அனைத்தும் எலக்டானிக் சேவையாக மாறிவருகிறது. இந்தியாவிலும் பல்வேறு பள்ளிகளில் புரொஜக்டர் மூலம் பாடம் கற்பித்துக் கொடுப்பது, லேப்டாப்பில் நோட்ஸ் எடுத்துக் கொள்வது போன்ற செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் பெரும்பாலான அயல்நாடுகளில் இந்த முறை செயல்படுத்தப்பாட்டில் உள்ளன.

வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்...

வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்...

அதன்படி பிரேசிலில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் எலக்டரானிக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் பள்ளிச் சிறுவன் வீட்டுப்பாடம் செய்வதற்கு தங்கள் கடையில் உள்ள டேப்லட்டையும், இன்டெர்நெட் சேவையையும் இலவசமாக வழங்கியுள்ளது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடைக்காரர் அனுமதியோடு வீட்டுப்பாடம்

கடைக்காரர் அனுமதியோடு வீட்டுப்பாடம்

இந்த சிறுவனுக்கு 10 வயது எனவும் இவரது பெயர் கில்ஹெர்ம் சாண்டியாகோ எனவும் அந்த சிறுவன் முறையாக கடைக்காரரிடம் அனுமதி பெற்று அவர்களின் டேப்லட் மற்றும் இணையதளம் மூலம் நோட்ஸ் எடுத்துக் கொண்டு வீட்டுப்பாடம் செய்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.

10 மில்லியன் பார்வையாளர்கள்

இந்த வீடியோவை பார்த்த பலரும் பள்ளிச்சிறுவனக்கு பாராட்டுகள் தெரிவித்ததோடு, கடை சாதனத்தை பயன்பாடுக்கு அளித்த கடைக்காரரையும் வாழ்த்தி வருகின்றனர். இந்த வீடியோவானது 10 மில்லியனுக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டுள்ளது.

பெருமையல்ல கடமை: நெட்டிசன் பதிவு

பெருமையல்ல கடமை: நெட்டிசன் பதிவு

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் கடைக்காரருக்கு பாராட்டுகள் என பதிவிட்டதோடு இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற செயல்கள் பெருமையல்ல கடமை என பதிவிட்டுள்ளார். அதேபோல் வீட்டில் இணைய சேவை இல்லை என முடங்கி விடாமல் ஷாப்பிங் மால் வந்து உதவி கேட்ட அந்த சிறுவன் வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேற்றம் அடைவான் எனவும் அவருக்கு வாழ்த்துகள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Watch How 10-Year-Old Boy Does His Homework Using Tablet In Electronics Store

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X