டிராபிக் போலீஸ்களை முரட்டுத்தனமாக அடித்த குடிமகன்.!

போக்குவரத்துக்கு காவலர்களை கண்முடி தனமாகத் தாக்கிய குடிமகனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

|

டிராபிக் போலீஸ், வாகன ஓட்டுநர்களை சரியான ஆவணங்கள் காண்பிக்க சொல்லி சோதனை செய்வது வழக்கம், ஆனால் சில நேரங்களில் அந்த சாதாரண சோதனை கூட விபரீதம் ஆகிவிடுகிறது.

விசாரணை செய்யும் அதிகாரிகளிடம் சிலர் அதிகம் பேசி வாய் தகராறு செய்யும் பல வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது போக்குவரத்துக்கு காவலர்களை கண்முடி தனமாகத் தாக்கிய குடிமகனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஓட்டுனர்

ஓட்டுனர் "சோதனை"

பெங்களூர்: தாவனகெரே பகுதியில் வாகன ஓட்டுனர்களை சோதனை செய்த இரண்டு போக்குவரத்துக்கு காவல் அதிகாரிகளை, குடிபோதையில் இருந்த வக்கீல் ருத்ரா என்பவரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஹெல்மெட் அணியாமல்

ஹெல்மெட் அணியாமல்

ஹெல்மெட் அணியாமல் வந்த ருத்ராவை காவல் அதிகாரி தடுத்து நிறுத்தி, ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்ட, முன்னுக்கு முரணாகப் பதில் சொன்ன ருத்திரா குடிபோதையில் இருக்கிறார் என்று உணர்ந்த காவல் அதிகாரி அவரை வாகனத்தை விட்டு இறங்கச் சொல்லி இருக்கிறார்.

 ஸ்மாக் லாக்

ஸ்மாக் லாக்

வாகனத்தில் இருந்து இறங்க மறுத்த ருத்ராவை காவல் அதிகாரி வற்புறுத்த முயன்ற போது, ஆத்திரம் அடைந்த ருத்ரா குடிபோதையில் சீருடை அணிந்திருந்த காவலர்களை ஸ்மாக் லாக் எல்லாம் போட்டு அடிக்கத் துவங்கிவிட்டார். இதில் ஒரு காவலரின் மண்டையை அருகில் இருந்த மண்பானை வைத்து ஓடைத்தும் விட்டார்.

கைது

கைது

சீருடையில் இருந்த காவலர்களை தாக்கிய குற்றத்திற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதர்காவும் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய காரணத்திற்காகவும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Best Mobiles in India

English summary
WATCH! Drunk man assaults traffic cops who stopped him for not wearing a helmet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X