சீனாவில் கார்கள் காற்றில் தூக்கி வீசப்பட்ட சம்பவம்..!
சமீபத்தில் சீனாவின் சாலை ஒன்றில் திடீரென கார்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டன அந்த சம்பவத்தை பார்த்தால், ஆவிகளின் சக்தி மீது நம்பிக்கை வரலாம் அல்லது வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டு பூமிக்கு வந்து நமது வாகனங்களை உறிஞ்சிக்கொண்டு போக முயற்சிப்பது போல தோன்றலாம்.
ஆனால், அங்கு நடத்ததோ வேறு..!

விசித்திரமான சம்பவம் :
சமீபத்தில், சீனாவின் க்ஷிங்டாய் (Xingtai) என்ற பகுதியில் உள்ள சாலை ஒன்றில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.

போக்குவரத்து சமிக்ஞை :
அந்த சாலையில் போக்குவரத்து சமிக்ஞையை பின் பற்றிய சில கார்கள் திடீரென காற்றில் தூக்கி வீசி அடிக்கப்பட்டன.

வைரல் :
வீடியோவில் பதிவான அந்த சம்பவம் யூட்யூபில் வைரலாக பரவியது.

ப்ரான்க் வேலை :
முதலில் இந்த சம்பவம் நிகழ காரணமாக பலமான காந்த ஈர்ப்பு சக்தியாக இருக்கலாம் என்றோ அல்லது ஏதாவது ப்ரான்க் (Prank) வேலைகளில் ஈடுபடும் கும்பலின் செயலாக இருக்கலாம் என்று நம்பப்பட்டது.

உண்மையான காரணம் :
ஆனால் கார்கள் காற்றில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததற்கு உண்மையான காரணம் என்னவென்றால் - கேபிள் வயர் தானாம்..!

சுத்தம் செய்யும் வாகனம் :
ஆம். அந்த சாலையில் தூக்கி வீசப்படும் வாகனமானது (இடது பக்கம்) சாலைகளை சுத்தம் செய்யும் ஒரு வாகனம் ஆகும்.

கேபிள் வயர் சிக்கி :
சாலைகளை சுத்தம் செய்யும் அந்த வாகனத்தின் பிரஷ்கள் சாலையில் உள்ள கேபிள் வயர் ஒன்றோடு சிக்கி கொள்ள அது தூக்கி வீசப்பட்டுள்ளது. அதன் விளைவால் அதன் அருகே சென்ற இரண்டு வாகனமும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

வேடிக்கை :
இந்த விசித்திரமான சம்பவம் குறித்து பலரும் பல வகையான கோணங்களில் யோசித்து மண்டையை கசக்கி கொண்டிருக்க, எல்லாம் ஒரு கேபிள் வயரால் தான் நிகழ்ந்தது என்பது வேடிக்கையாக உள்ளது.
வீடியோ :
கேபிள் வயர் ஒன்றோடு சிக்கி சீனாவில் காற்றில் தூக்கி வீசப்பட்ட கார்கள்..!

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications