ஆன்லைனில் ஆர்டர் செய்த மொபைல் போன் டெலிவரி: பார்சலை பிரித்து பார்த்ததும் மிரண்டு போன நபர்- இது ரொம்ப ஓவர்!

|

கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் நேரடியாக வெளியே சென்று பொருட்களை வாங்குவதற்கு விருப்பம் காட்டவில்லை. பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டினர். இதன்காரணமாக ஆன்லைன் ஆர்டர் என்ற பழக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. வீட்டில் இருந்தபடியே உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவதன் மூலம் பயண நேரம், கடையில் காத்திருக்கும் நேரம் என பல வகைகளில் நேரம் மிச்சமாகும் என பலர் கருதுகின்றனர். அதோடு மட்டுமின்றி ஆன்லைன் நிறுவனங்களும் போட்டுப் போட்டு கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

ஆன்லைன் ஆர்டர் டெலிவரி

ஆன்லைன் ஆர்டர் டெலிவரி

ஆன்லைன் ஆர்டர் டெலிவரியில் அவ்வப்போது குழப்பம் ஏற்படுவது வழக்கம். அதில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக வேறு ஒரு சம்பந்தமில்லாத பொருள் டெலிவரி செய்யப்படுவதே ஆகும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி இருக்கிறது. தெலங்கானா மாநிலம் ஊட்டனூரை சேர்ந்த நபருக்கு டெலிவரி செய்யப்பட்ட பொருள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தெலங்கானா மாநிலம் ஊட்டனூரை சேர்ந்த நபர் ஒருவர் மொபைல் போனை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த பொருளுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு பொருள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

ரூ.6000 மதிப்புள்ள மொபைல் போன் ஆர்டர்

ரூ.6000 மதிப்புள்ள மொபைல் போன் ஆர்டர்

தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டம் ஊட்டனுரை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் தளம் மூலமாக ரூ.6000 மதிப்புள்ள மொபைல் போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்து குறிப்பிட்ட முகவரிக்கு டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. ஆவலுடன் பார்சலை பிரித்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்சலுக்குள் அவர் ஆர்டர் செய்த மொபைல் போனுக்கு பதிலாக துணி துவைக்கும் சோப்பு இருந்திருக்கிறது. சார்ஜர் உள்ளிட்ட பொருட்களும் அந்த பார்சலுக்குள் இருந்திருக்கிறது. இதை பார்த்த அந்த நபர் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ஆர்டர் செய்பவர்களுக்கு சம்பந்தமில்லாத பொருட்கள் டெலிவரி செய்வது என்பது சமீபகாலமாக ஆங்காங்கே நடந்து வருகிறது.

துணி துவைக்கும் சோப்பு டெலிவரி

துணி துவைக்கும் சோப்பு டெலிவரி

ரூ.6000 மதிப்புள்ள மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு துணி துவைக்கும் சோப்பு டெலிவரி செய்யப்பட்டதையடுத்து அந்த நபர் சம்பந்தப்பட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனத்திடம் புகார் அளித்து வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டார். அந்த நிறுவனத்திடம் இருந்து எந்தவொரு பதிலும் கிடைக்காததையடுத்து அவர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்மார்ட் வாட்ச் ஆர்டர் செய்த நபர்

ஸ்மார்ட் வாட்ச் ஆர்டர் செய்த நபர்

இதேபோல் ஒரு சம்பவம் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த அணில்குமார் என்பவருக்கும் அரங்கேறியது. 32 வயதான இவர் ஆன்லைனில் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்தார். ஆன்லைனில் ஆர்டர் செய்த போதே ரூ.2400 பணத்தையும் செலுத்தி இருக்கிறார். இதையடுத்து அவருக்கு அவர் ஆர்டர் செய்த ஸ்மார்ட் வாட்ச் குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்யப்பட்டது. டெலிவரி செய்யப்பட்ட உடன் அணில்குமார் அதை ஸ்மார்ட்வாட்ச் என நினைத்து பிரித்து பார்த்து போது அதில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஆணுறை ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனுடன் மற்றொரு சாதாரண ஆணுறையும் இருந்தது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த அணில் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆப்பிள் ஐபோன் 12 ஆர்டர் செய்த நபர்

ஆப்பிள் ஐபோன் 12 ஆர்டர் செய்த நபர்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் நூருல் அமீன் என்பவர் ஆன்லைன் மூலம் ஆப்பிள் ஐபோன் 12 மாடலை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரிக்கு வந்த அந்த ஐபோன் பார்சலை பிரித்துப் பார்த்த நூருல் அமீன் அதிர்ச்சியடைந்தார். காரணம் இந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக 5 ரூபாய் நாணயமும், சோப்புக் கட்டியும் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சைபர் பிரிவு காவல்துறையிடம் அவர் புகாரளித்தார்.

File images

Best Mobiles in India

English summary
Washing Soap Delivered to Telangana man Who Ordered Mobile phone online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X