சிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்?- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்!

|

பங்குச் சந்தையில் இருப்பவர்களும் சரி, அதை கற்றுக் கொள்ள விரும்புவர்களும் சரி இவரை கடக்காமல் செல்ல முடியாது. "தேவையற்ற ஒரு பொருளை இன்று வாங்கினால் நாளை தேவையான ஒரு பொருளை விற்க வேண்டும்" இந்த காலத்திற்கு ஏற்ப அற்புத வார்த்தையை சொன்னவர் வாரன் பப்பட்.

ஹாத்வே நிறுவனத்தின் சி.இ.ஓ வாரன் பப்பெட்

ஹாத்வே நிறுவனத்தின் சி.இ.ஓ வாரன் பப்பெட்

அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் பெர்க்சைர் ஹாத்வே நிறுவனத்தின் சி.இ.ஓ-வுமானவர் வாரன் பப்பெட். இவர் சுவாரஸ்யமாக கூறிய இரண்டு விதிகள் என்னவென்றால். " முதல் விதி: பணத்தை வீணாக செலவு செய்யாதே., இரண்டாவது விதி: முதல்விதியை எப்போதும் மறக்காதே " என்பதாகும்.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளிலும் பங்குதாரர்

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளிலும் பங்குதாரர்

இவர் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளிலும் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். வாரன் பப்பட் உலகின் நான்காவது பெரும் பணக்காரர். இத்தனை நாளாக இவர் பயன்படுத்தி வந்த மொபைல் என்ன தெரியுமா, சாம்சங் நிறுவனத்தின் பழைய பிளிப் மாடல் போன் ஆகும். நாம் பார்த்திருப்போம் இந்த வகை மொபைல்களை சின்ன டிஸ்பிளே, திறந்தவுடன் கீபோர்ட் இருக்கும். உலகின் நான்காவது பணக்காரர் பயன்படுத்தி வந்தது இந்த போன்தான்.

Jio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது?Jio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது?

ஐபோன் என்பதே பலரது கனவு

ஐபோன் என்பதே பலரது கனவு

வருமானத்தில் ஆயிரம் ரூபாய் ஏறினால் உடனடியாக தோன்றுவது நமது கையில் இருக்கும் மொபைல் போனை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் நமது கையில் இருக்கும் போனில் அனைத்து அம்சங்களும் இருக்கும் இருப்பினும் மொபைல் போனை மாற்ற வேண்டும் என்று ஆசை அதுமட்டுமின்றி கையில் ஐபோன் என்பது பலரின் கனவாகவே உள்ளது.

வாரன் பப்பெட் பயன்படுத்திய போன் இதான்

வாரன் பப்பெட் பயன்படுத்திய போன் இதான்

ஆனால் வாரன் பப்பெட், பழைய வகை பிளிப் மாடல் செல்போனையே இதுவரை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தற்போதுதான் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு அவர் நகர்ந்துள்ளார் என்பது தற்போதைய அதிர்ச்சி தகவலாக வளம் வந்துக் கொண்டிருக்கிறது.

செல்போன் பேசுவதற்கு தானே

செல்போன் பேசுவதற்கு தானே

இவர் செல்போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். அதற்கு பழைய மாடல் என்ன புதுமாடல் என்ன என்ற நோக்கத்துடன் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஆப்பிள் ஐபோன் மாடல் 11-ஐ வாரன் பப்பட் பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

Jio அந்த விஷயத்தை செய்யுமா ?- டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்Jio அந்த விஷயத்தை செய்யுமா ?- டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்

அவரே இப்போதுதான் ஸ்மார்ட் போனுக்கு மாறியுள்ளார்

அவரே இப்போதுதான் ஸ்மார்ட் போனுக்கு மாறியுள்ளார்

இவர் பங்குச் சந்தை விவரங்கள் குறித்து அறிவதற்கு ஐபேட் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். இருப்பினும் உலக அளிவிலான பணக்காரர் இவர், ஐபேட் ஐபோன் பயன்படுத்தியிருக்கலாமே. ஆனால் வாரன் பப்பட் செய்யவில்லை. வீண் விரயம் என்ற நோக்கில் எப்போதும் உறுதியாக இருப்பவர். இவர் தற்போது தான் ஸ்மார்ட் போனுக்கு மாறியுள்ளார்.இந்த செய்தி பலரையும் வியக்கவைத்துள்ளது.

Source: cnn.com

Pic Courtesy: Socialmedia

Most Read Articles
Best Mobiles in India

English summary
Warren Buffett Finally upgrades from a Samsung flip phone to Apple Iphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X