எச்சரிக்கை! Aadhaar-ல் இது தப்பா இருந்தா ஒரு சலுகையும் கிடைக்காது! வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்!
ஆதார் அட்டை (Aadhaar Card) பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை. இது கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களும் தங்கள் வசம் வைத்து இருக்கும், அவர்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் ஆகும். இது இந்திய அரசால், இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. ஆதார் எண் ஆனது, யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
அரசு சேவைகள், வங்கி கணக்கு தொடங்குதல், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கான கேஒய்சி சரிபார்ப்பை நிறைவு செய்தல் போன்றவற்றுக்கு ஆதார் அட்டை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு நபரின் கைரேகைகள் போன்ற பயோமெட்ரிக் தரவுகளுடனும், புகைப்படம், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற பிற மக்கள்தொகை தகவல்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் - ஆதார் அட்டையில் உள்ள மேற்கண்ட விவரங்களில் ஒன்றை மட்டும் - நீங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். அது உங்கள் பிறந்த தேதி ஆகும். ஒருவர் எத்தனை முறை ஆதார் அட்டையில் தன்னுடைய பிறந்த தேதியை புதுப்பிக்க முடியும் என்கிற கேள்விக்கு, யுஐடிஏஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதில் - ஒருவர் தனது பிறந்த தேதியை (DoB) ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும்!
ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை எவ்வாறு புதுப்பிப்பது? ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி (DoB) மிகவும் முக்கியமான ஒரு விவரமாகும், ஏனெனில் இது பல்வேறு அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக அடையாளம் மற்றும் வயதுக்கான முதன்மை ஆதாரமாக செயல்படுகிறது.
இது அரசு திட்டங்களை பெறுவதற்கும், வங்கி கணக்குகளை தொடங்குவதற்கும் மற்றும் பலவற்றிற்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. தனிநபர்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள எல்லா தகவல்களுமே துல்லியமாகவும் புதுப்பித்த நிலையிலும் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம், அவைகளில் பிறந்த தேதி குறித்த தகவல் மிகவும் முக்கியம்.
ஆதார் அட்டையில் பிறந்த தேதியை புதுப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை? ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை புதுப்பிக்க 5 ஆவணங்கள் தேவைப்படுகின்றன: ஆதார் அட்டையில் பிறந்த தேதியைப் புதுப்பிக்கத் தேவையான 5 ஆவணங்கள்: பிறப்பு சான்றிதழ், செல்லுபடியாகும் இந்திய கடவுச்சீட்டு, சேவை புகைப்பட அடையாள அட்டை, ஓய்வூதியதாரர் புகைப்பட அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் அல்லது சான்றிதழ்.
ஆன்லைன் வழியாக இல்லாமல் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை புதுப்பிப்பது எப்படி? பிறந்த தேதியை புதுப்பிக்க, ஒருவர் பிறந்த தேதி சான்று ஆவணத்துடன் அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திராவிற்கு செல்லலாம். அங்கே நீங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பயோமெட்ரிக் அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அவ்வளவு தான். மீதி வேலை தானாக நடக்கும்.
ஆதார் அட்டையில் உள்ள வேறு என்னென்ன விவரங்களை எத்தனை முறை மாற்ற முடியும்?
பெயர் மாற்றம் - வாழ்நாளில் இருமுறை பெயர் மாற்றம் செய்யலாம்
முகவை மாற்றம் - எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்
பாலின மாற்றம் - பிறந்த தேதியை போலவே இதையும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்
பயோமெட்ரிக் அப்டேட் - தேவைக்கேற்ப பயோமெட்ரிக் அப்டேட் செய்யலாம் (5 மற்றும் 15 வயதுக்கு பிறகு)


Click it and Unblock the Notifications