குரோம் பயனர்கள் கடவுசொல்லை உடனே மாற்றவேண்டும் : கூகுள் எச்சரிக்கை.!

|

சைபர் குற்றவாளிகள் மில்லியன்கணக்கான மக்களின் ஆன்லைன் உள்நுழைவு(Login) விவரங்களை அணுக வாய்ப்பிருப்பதாக கூகுளின் பாதுகாப்பு ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள் அதன் குரோம் இணைய உலாவிக்கு கடவுச்சொல் சோதனைக்கான நீட்டிப்பை ( Password Checkup extension) அறிமுகப்படுத்தியது.

மூன்றாம் தரப்பு தரவு மீறல்

மூன்றாம் தரப்பு தரவு மீறல்

மூன்றாம் தரப்பு(third party) தரவு மீறல் காரணமாக பாதுகாப்பற்றது என அறியப்பட்ட நான்கு பில்லியன் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி ஏதாவது தளத்தில் நீங்கள் உள்நுழையும் போது இது எச்சரிக்கை செய்யும்.

பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 6,50,000 க்கும் மேற்பட்டோர் இதில் பதிவுசெய்துள்ளனர் மற்றும் முதல் மாதத்தில் மட்டும் இந்த சேவை 21 மில்லியன் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்களை பரிசோதித்துள்ளது.

<strong>ஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன? வாங்க பார்ப்போம்.!</strong>ஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன? வாங்க பார்ப்போம்.!

முதல் மாதத்தில், கடவுச்சொல் சோதனை

முதல் மாதத்தில், கடவுச்சொல் சோதனை

செயலி 316,000 க்கும் மேற்பட்டவற்றை பாதுகாப்பற்றது என குறிப்பிட்டுள்ளது. இது அந்த நீட்டிப்பு மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட மொத்த உள்நுழைவுகளில் 1.5 சதவீதம் ஆகும். இது மில்லியன்கணக்கான மக்களின் தகவல்கள் ஆபத்தில் உள்ளன என்பதை பரிந்துரைப்பதுடன், கூகுள் குரோமின் ஐந்து பில்லியன் நிறுவல்கள் அனைத்திலும் இந்த போக்கு ஒரு பழமைவாதமானது என்ற தோற்றமளித்தாலும் கூற்று உண்மையாகவே உள்ளது.

ஹைஜேக்கர்களின் முயற்சி

ஹைஜேக்கர்களின் முயற்சி

மூன்றாம் தரப்பு மீறல் மூலம் வெளியான ஒவ்வொரு கடவுச்சொற்களையும் பயன்படுத்தி இணையத்தில் உள்ள தளங்களில் உள்நுழைய ஹைஜேக்கர்கள் தொடர்ந்து முயன்று வருவதாக கூகுள் கூறுகிறது. மிகவும் முக்கியமான நிதி, அரசு மற்றும் மின்னஞ்சல் கணக்குகளில் சில பாதுகாப்பற்ற உள்நுழைவு விவரங்கள் ஆன்லைனில் பயன்படுத்தப்பட்டுள்ளதை கூகுள் கண்டறிந்துள்ளது.

<strong>சந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.! </strong>சந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.!

ஆபத்தில் உள்ள கிரிடிட் கார்டு விவரங்கள்

ஆபத்தில் உள்ள கிரிடிட் கார்டு விவரங்கள்

பயனர்கள் தங்களது கிரிடிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்கும் ஷாப்பிங் இணையதளங்கள், செய்தி மற்றும் பொழுதுபோக்கு தளங்களில் இந்த ஆபத்து மேலும் அதிகமாக உள்ளது. மிகவும் பிரபலமான வலைத்தளங்களை தவிர, பயனர்கள் பாதிக்கப்படக்கூடிய கடவுச்சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் 2.5 மடங்கு அதிகமாக அவர்களின் கணக்கை ஹைஜேக் ஆபத்தில் விடுகின்றனர்.

இதை எப்படி தவிர்க்கலாம்?

இதை எப்படி தவிர்க்கலாம்?

உங்களது எல்லா கணக்குகளுக்கும் வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தை குறைக்கலாம் என நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

<strong>உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா? அப்போ இதை பண்ணுங்க!</strong>உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா? அப்போ இதை பண்ணுங்க!

பாதுகாப்பில்லாத விபரங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

பாதுகாப்பில்லாத விபரங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

"இந்த வசதியை தொடங்கியதில் இருந்து, 650,000 க்கும் அதிகமான மக்கள் எங்கள் ஆரம்ப பரிசோதனையில் பங்கு பெற்றனர்.முதல் மாதத்தில் மட்டும் சுமார் 21 மில்லியன் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை நாங்கள் ஸ்கேன் செய்தபின், 316,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 1.5 சதவிகிதம்' என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

 புதிய கடவுச்சொல் அடையாளம்

புதிய கடவுச்சொல் அடையாளம்

கடவுச்சொல் பரிசோதனை நீட்டிப்பின் மூலம் பாதுகாப்பற்ற கடவுச்சொற்கள் என குறிப்பிடப்பட்டவைகளில், 26 சதவீத கடவுசொற்கள் பயனர்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என கூகுள் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இன்னும் சிறப்பாக புதிய கடவுச்சொற்களில் 60 சதவீதம் எந்தவொரு தாக்குதல்களையும் தாங்கும் வகையில் எதிராக பாதுகாப்பாக உள்ளன கூகுள் கூறுகிறது. அதாவது இந்த புதிய கடவுச்சொல்லை அடையாளம் காண்பதற்கு முன் ஹேக்கர்கள் நூறு மில்லியன் யூகங்கள் செய்யவேண்டும்.

<strong>வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்! ரெடியா இருங்க!</strong>வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்! ரெடியா இருங்க!

கூகுளின் புதிய முயற்சி

கூகுளின் புதிய முயற்சி

கூகுள் நிறுவனம் அதன் கடவுச்சொல் பரிசோதனை நீட்டிப்புக்கு இரண்டு புதிய புதுப்பிப்புகளை வெளியிட்டுள்ளது. முதலாவதாக பயனர்கள் கருத்து பெட்டியின் வழியாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிறுவனத்திற்கு சொல்ல முடியும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இரண்டாவதாக அந்த நீட்டிப்பு எச்சரிக்கை செய்யும் அநாமதேய தொலைத்தொடர்பை தேர்வு செய்ய உதவுகிறது. இதன் மூலம் பாதுகாப்பற்ற கடவுச்சொல்கள் எச்சரிக்கப்பட்டு மாற்ற பரிந்துரைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Google Chrome users must change passwords immediately : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X