உஷார்! மொபைல் பேங்கிங்கில் பெரிய சிக்கல்.. இந்திய எமர்ஜென்சி டீம் எச்சரிக்கை!

|

நீங்களொரு மொபைல் பேங்கிங் (Mobile Banking) பயனரா? அதாவது மொபைல் போன் வழியாக அணுக கிடைக்கும் வங்கி தொடர்பான சேவைகளை அந்தந்த வங்கிகளின் அதிகாரப்பூர்வமான ஆப்களின் வழியாக பயன்படுத்தி கொள்பவரா?

ஆமெனில் இந்திய அரசாங்கத்திடம் இருந்து வெளியாகி உள்ள ஒரு எச்சரிக்கை, முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

அதென்ன எச்சரிக்கை?

அதென்ன எச்சரிக்கை?

இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (Indian Computer Emergency Response Team) வழியாக மொபைல் பேங்கிங் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

அது இந்தியர்களை குறிவைக்கும்.. மிகவும் மோசமான ஒரு மொபைல் பேங்கிங் 'ட்ரோஜன்' வைரஸை பற்றிய எச்சரிக்கை ஆகும்!

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

அந்த வைரஸின் பெயர் என்ன.. அது ஏன் மிகவும் மோசமானது?

அந்த வைரஸின் பெயர் என்ன.. அது ஏன் மிகவும் மோசமானது?

அந்த ட்ரோஜன் வைரஸின் பெயர் சோவா (SOVA) ஆகும். எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு இது ஏன் மிகவும் மோசமானது என்றால்.. இந்த சோவா வைரஸ் ஆனது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை திருட்டுத்தனமாக என்க்ரிப்ட் செய்யக்கூடியது மற்றும் இதை அன்இன்ஸ்டால் செய்வது மிகவும் கடினமான காரியம் ஆகும்!

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த சோவா வைரஸ், இந்திய வாடிக்கையாளர்களை குறிவைக்கிறது. எனவே தான் இந்திய அரசாங்கம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது!

ஒருவேளை SOVA வைரஸ் உங்கள் போனுக்குள் நுழைந்து விட்டால்?

ஒருவேளை SOVA வைரஸ் உங்கள் போனுக்குள் நுழைந்து விட்டால்?

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில், இந்திய சைபர்ஸ்பேஸில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த சோவா வைரஸ் ஆனது தற்போது அதன் ஐந்தாவது பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மொபைல் பேங்கிங் வைரஸ் ஆனது உங்கள் போனுக்குள் நுழைந்துவிட்டால்.. கீ லாக்கிங் (Key logging) மூலம் நீங்கள் மொபைல் பேங்கிங்-ஐ பயன்படுத்தும் போது, அது உங்களுடைய பெயர் மற்றும் பாஸ்வேர்ட், அக்கவுண்ட் விவரங்கள் போன்றவைகளை திருடும் "வல்லமையை" பெரும்.

உங்கள் போன் வெடிக்க போகிறது என்பதை நிரூபிக்கும் சில அறிகுறிகள்!உங்கள் போன் வெடிக்க போகிறது என்பதை நிரூபிக்கும் சில அறிகுறிகள்!

அதுமட்டுமின்றி?

அதுமட்டுமின்றி?

முன்னதாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் கவனம் செலுத்திய இந்த சோவா வைரஸ், கடந்த ஜூலை 2022 முதல் இந்தியா உட்பட பல நாடுகளை தனது 'டார்கெட் லிஸ்டில்' சேர்த்துள்ளது.

அதுமட்டுமின்றி, சோவா வைரஸின் லேட்டஸ்ட் வெர்ஷன் ஆனது, பயனர்களை ஏமாற்றுவதற்காக, Chrome, Amazon, NFT (கிரிப்டோ கரன்சியுடன் இணைக்கப்பட்ட Non-fungible Token) போன்ற சில பிரபலமான, சட்டப்பூர்வமான ஆப்களின் லோகோவை காண்பிக்கும் போலியான ஆண்ட்ராய்டு ஆப்களுக்குள் தன்னை மறைத்துக் கொள்ளும்.

இதை ஏன் அன்இன்ஸ்டால் செய்ய முடியாது?

இதை ஏன் அன்இன்ஸ்டால் செய்ய முடியாது?

ஏனென்றால், இந்த வைரஸ் ஆனது அதன் பாதுகாப்பை "மறுசீரமைக்கும்" திறனை கொண்டுள்ளது.

விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், செட்டிங்ஸ் வழியாக இந்த மால்வேரை அன்இன்ஸ்டால் செய்ய முயற்சித்தாலோ அல்லது "பாதிக்கப்பட்ட" ஆப்பின் ஐகானை அழுத்தினாலோ, SOVA வைரஸ் ஆனது உங்களின் செயல்களை இடைமறித்து, ஹோம் ஸ்க்ரீனுக்கு திரும்பும்.

விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?

ஹோம் ஸ்க்ரீனுக்கு திரும்பிய பின்னர்..?

ஹோம் ஸ்க்ரீனுக்கு திரும்பிய பின்னர்..?

நீங்கள் என்ன செய்ய நினைத்தாலும், அதை இடைமறித்து ஹோம் ஸ்க்ரீனுக்கு திரும்புவது மட்டுமின்றி, கடைசியாக - இந்த ஆப் பாதுகாப்பானது (This app is secured) என்கிற சிறிய பாப்அப்-ஐயும் காட்டி, மீண்டும் மீண்டும் உங்களை ஏமாற்றும்!

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த வைரஸை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது!

இதிலிருந்து தப்பிக்க இருக்கும் ஒரே வழி?

இதிலிருந்து தப்பிக்க இருக்கும் ஒரே வழி?

கண்மூடித்தனமாக ஆப்களை இன்ஸ்டால் செய்யாமல் இருந்தால் மட்டுமே சோவா போன்ற வைரஸ்களிடம் இருந்து ஒதுங்கி இருக்க முடியும்.

எப்போதுமே அதிகாரப்பூர்வமான ஆப்களை மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும், அதையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட ஆப்பை பற்றிய விவரங்கள் (App details), பதிவிறக்கங்களின் எண்ணிக்கை, பயனர்களின் மதிப்புரைகள் (User Reviews), மற்றும் "ADDITIONAL INFORMATION" செக்ஷன் போன்ற விவரங்களையும் ஆராய வேண்டும்!

சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!

தெரியாமல் கூட செய்ய கூடாத தவறுகள்!

தெரியாமல் கூட செய்ய கூடாத தவறுகள்!

- வழக்கமான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்களை புறக்கணிப்பது.
- நம்பத்தகாத வலைத்தளங்களில் ப்ரவுஸ் செய்வது.
- நம்பத்தகாத Link-களை கிளிக் செய்வது.
- எங்கிருந்து வந்தது என்றே தெரியாத இமெயில்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் உள்ள Link-களை கிளிக் செய்வது!

முடிந்தவரை மேற்கண்ட தவறுகளை செய்யாமல் இருந்தாலே.. நீங்களும் உங்கள் ஸ்மார்ட்போனும் அதில் இருக்கும் உங்களின் மொபைல் பேங்கிங் ஆப்பும் பாதுகாப்பாக இருக்கும்!

Best Mobiles in India

English summary
Warning For Mobile Banking Users New Virus SOVA Which Hard to Uninstall Targeting Indians

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X