சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!
இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக் கூடாது என்று
தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

உதரணமாக சில நபர்கள் செல்போனில் பேசியபடியே ரயில் பாதையை கடக்க முயன்று ரயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவத்தை நாம் செய்திகளில் பார்த்திருப்போம்.

சிசிடிவி கேமரா
இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இது குறித்து புகார்களின் பேரில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதில் திருட்டு நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்,
அப்போது, ஒரே நபர்தான் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதை போலீஸார் கண்டறிந்தனர்.

அவர் பெயர் கார்த்தி
தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது, தனிப்படை போலீஸார்
கொள்ளையனைத் தேடிவந்த நிலையில் அவரை மடக்கி பிடித்தனர். பின்பு விசாரணையில் அவர் பெயர் கார்த்தி என்றும் சாத்தாங்காடு எனும் பகுதியைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது. குறிப்பாக இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

செல்போன்களை பறிமுதல் செய்துள்ளோம்
அதன்பின்பு கடந்த 20-ம் தேதி திருவொற்றியூர் பகுதியில் மேரி என்பவரிடம் செல்போன் பறித்து செல்லும் நபரும் கல்யாணியிடம் செயின் பறித்த நபரும் ஒருவர்தான் என்பதை கண்டறிந்தோம். பின்பு இது தொடர்பாக விசாரணை
நடத்தி கார்திக் என்பவரை கைது செய்துள்ளோம், அவரிடம் இருந்து செயின் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளோம் என்றனர்.

கவனம் பேசுவதில் இருக்கும்
கார்த்தி அளித்த பகீர் வாக்குமூலத்தில், இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்களை முதலில் பைக்கில் சென்று நோட்டமிடுவேன், பிறகு அவர்கள் நடந்து செல்லும்போது பின்னால் சென்று செயின் அல்லது செல்போன்களை பறித்துவிட்டு தப்பிச் செல்வேன். அதிலும் செல்போன் பேசியபடி நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வது எளிது, ஏனெனில் அவர்களின் கவனம் பேசுவதில் இருக்கும் என்று கூறியுள்ளான்.

ஆடம்பரமாகவும் விருப்பம் போல வாழ்வேன்
குறிப்பாக வழிப்பறி செய்த ஸ்மர்ட்போன்களை விற்பேன் அந்தப் பணத்தில் ஆடம்பரமாகவும் விருப்பம் போல வாழ்வேன் என்று கூறியுள்ளான்.


Click it and Unblock the Notifications