உஷார் மக்களே: ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம்மில் பணம் கொள்ளை- மீண்டும் தலையெடுக்கும் விவகாரம்

|

ஸ்கிம்மர் கருவி என்பது டேட்டாக்களை திருடும் ஒரு கருவி ஆகும். ஏடிம் மெஷினில் நாம் ஏடிஎம் கார்டை சொருகும் இடத்தில் அதை பொருத்தி விடுவார்கள். அது மெஷினோடு பொருந்தி பார்வைக்கு மாற்றம் எதுவும் இல்லாமல் இருக்கும்.

அனைத்து தகவல்களையும் கறந்துவிடும்

அனைத்து தகவல்களையும் கறந்துவிடும்

ஆனால் ஒருவர் ஏடிஎம் கார்டை சொருகிய உடனேயே அது அனைத்து தகவல்களையும் கறந்துவிடும். வாடிக்கையாளர் சென்றவுடன் அந்தக்கருவியை பொருத்திய நபர் எடுத்துக்கொள்வார், அதிலிருந்து போலி ஏடிஎம் கார்டை தயாரித்து வேறு மாநிலத்தில் பணத்தை திருடுவார்கள்.

ஏடிஎம் கார்டில் உள்ள மேக்னட் சிப்

ஏடிஎம் கார்டில் உள்ள மேக்னட் சிப்

ஸ்கிம்மர் கருவி என்பது நமது ஏடிஎம் கார்டில் உள்ள மேக்னட் சிப்பில் உள்ள நமது டேட்டாக்களை திருடும் கருவி ஆகும். நாம் ஏடிஎம் கார்டை நுழைக்கும் இடத்தில் அதற்கு மேல் பொருத்தப்படும் வகையில் தயாரிக்கிறார்கள்.

நொடியில் உங்கள் டேட்டாவை ஸ்கிம்மர் திருடி விடும்

நொடியில் உங்கள் டேட்டாவை ஸ்கிம்மர் திருடி விடும்

கார்டை நுழைக்கும் இடத்தில் அதை பொருத்தி விட்டு மர்ம நபர்கள் சிறிது தூரத்தில் அமர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் பணம் எடுக்க உங்கள் ஏடிஎம் கார்டை நுழைக்கும் போது நொடியில் உங்கள் டேட்டாவை அந்த ஸ்கிம்மர் மெஷின் திருடி விடும். உங்கள் அக்கவுண்டில் பணம் இருப்பதையும் உங்களுக்கான ஏடிஎம் ரகசிய குறியீடுகளை அது எடுத்துவிடும்.

BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!

பின் நம்பரை கவனிக்க வைஃபை வசதி

பின் நம்பரை கவனிக்க வைஃபை வசதி

நீங்கள் சென்றவுடன் பணம் எடுக்க வருவது போல் அந்த நபர் ஸ்கிம்மர் மெஷினை எடுத்து ஒரு மணி நேரத்தில் உங்கள் டேட்டாவுடன் கூடிய கார்டை தயாரித்து உங்கள் பணத்தை எடுத்து விடுவார்கள். இதற்கு உங்கள் பின் நம்பரை கவனிக்க வைஃபை வசதியுடன் கூடிய கேமராவையும் பொருத்தியிருப்பார்கள். அதன்பின் உங்கள் கார்ட் விவரங்களை பயன்படுத்தி வேறு மாநிலத்தில் பணம் எடுத்துவிடுவார்கள்.

கோடிக்கணக்கில் பணம் திருட்டு

கோடிக்கணக்கில் பணம் திருட்டு

இந்த ஸ்கிம்மர் கருவி புதுச்சேரியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு கலக்கு கலக்கியது. புதுச்சேரியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் கருதி பொருத்தி பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை திருடி வந்தது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து கோடி கணக்கிலான பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஏடிஎம் கொள்ளை அறங்கேற்றம்

ஏடிஎம் கொள்ளை அறங்கேற்றம்

இந்த நிலையில் தற்போது அதேபோல் மீண்டும் புதுச்சேரியில் ஏடிஎம் கொள்ளை அறங்கேறத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திடீரென மாயமாகி வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தாலும் சரிவர நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்ட் பதிவு

ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்ட் பதிவு

இதற்கிடையில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் ஒன்றில் ஒருவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்ட் பதிவு செய்யும் பகுதியில் மர்ம அட்டை ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த அட்டையை கையில் எடுத்து அதில் மெமரி கார்ட் சிப் உள்ளிட்டவற்று இருப்பதை பார்த்துள்ளார்.

கண்ணீருக்கு நாங்க பொறுப்பில்ல:என் சாமி.,விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இறந்த மகளை சந்தித்த தாய்- Videoகண்ணீருக்கு நாங்க பொறுப்பில்ல:என் சாமி.,விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இறந்த மகளை சந்தித்த தாய்- Video

காவல்துறையினர் விசாரணை

காவல்துறையினர் விசாரணை

இந்த அனைத்து சம்பவங்களையும் வீடியோவாக பதிவு செய்த அந்த நபர் அதை உரிய அதிகாரிகளுக்கு பகிர்ந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீண்டும் கடந்த 2018 போல் ஏடிஎம் மையங்கள் பாதிப்படையாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Warning for atm card users: Money Loot at ATM with Skimmer Tool

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X