Home
News

Google Chrome மக்களே உஷார்.. இந்த வார்த்தையை மட்டும் கூகுளில் தேடிடாதீர்கள்.. தேடுனா சோலி முடுஞ்சுது..

உங்கள் ஸ்மார்ட்போன் (Smartphone), மொபைல் போன் (Mobile Phone), லேப்டாப் (Laptop) மற்றும் கம்ப்யூட்டரில் (Computer) கூகுள் குரோம் வெப் பிரௌசரை (Google Chrome Web Browser) நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்கும் நேரம் இது. குறிப்பாக, கூகுள் குரோம் அல்லது கூகுள் சர்ச் (Google search) தளத்தில் நீங்கள் ஒரு சில குறிப்பிட்ட வார்த்தைகள் டைப் செய்து தேடவே கூடாது என்ற புதிய எச்சரிக்கை செய்தி இப்போது வெளியாகியுள்ளது. மீறி தேடினால் ஹேக்கிங் வலையில் சிக்கி உங்கள் வங்கி கணக்கு, தனிப்பட்ட தகவல் போன்ற அனைத்தையும் இழக்க நேரிடும்.

கூகுள் சர்ச் தளத்தில் (Google search site) மக்கள் அவர்களுக்கான சந்தேகத்திற்கு விடை தேடுகிறார்கள். தினசரி கூகுள் தளத்தில் சுமார் 8.55 பில்லியன் தேடல்கள் தேடப்படுகிறது. 1 மணி நேரத்திற்கு கூகுள் சர்ச் தளத்தில் சுமார் 356.4 மில்லியன் தேடல்கள் தேட படுகிறது. அதேபோல், 1 நிமிடத்திற்கு சுமார் 5.94 மில்லியன் தேடல்களும், 1 நொடிக்கு சுமார் 99,000 தேடல்களும் தேடப்படுகிறது.

Google Chrome மக்களே உஷார்.. இந்த வார்த்தையை கூகுளில் தேடிடாதீர்கள்..

இனி கூகுள் சர்ச் தளத்தில், தேடல்களை மேற்கொள்ளும் பாதி பயனர்கள் மோசமான ஆபத்தை சந்திக்கவுள்ளார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் இப்போது கூகுள் தளத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட வார்த்தைகளை தேடும் நபர்களை குறிவைத்து தாக்க துவங்கியுள்ளனர். அதேபோல், கூகுள் சர்ச் தலத்தில் ஒரு சில முக்கியமான வார்த்தைகளை தேடும் பயனர்களை நேரடியாக ஹேக்கர்கள் தாக்கும் அவலநிலை எழுந்துள்ளது.

இது உலக கூகுள் குரோம் பயனர்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. இணைய பயன்பாட்டாளர்கள் இனி கவனமாக அவர்களின் தேடல்களை தேட வேண்டும் என்று சைபர்செக்யூரிட்டி நிறுவனமான SOPHOS எச்சரித்துள்ளது. கூகுள் தளத்தில் மக்கள் தேடவே கூடாத வார்த்தைகள் எது என்பதை இந்த நிறுவனம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. முதல் விஷயம் 6 வார்த்தைகளை இணைத்து ஒன்றாக உருவாக்கப்பட்ட வாக்கியங்களை நீங்கள் கூகுள் தலத்தில் சர்ச் செய்ய கூடாது.

ஹேக்கர்கள் 6 வார்த்தைகளை ஒன்றாக தேடும் பயனர்களை அதிகமாக குறிவைப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, ஆஸ்திரேலியா தொடர்பான வார்த்தைகள் மற்றும் ஆஸ்திரேலியா என்ற வார்த்தையை கூகுள் சர்ச்சில் தேடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தொடர்பான தகவல்களை தேடும் பயனர்கள் தான் அதிகமாக இந்த ஹேக்கிங் மோசடியில் சிக்கியுள்ளனர் என்று SOPHOS தெரிவித்துள்ளது.

இறுதியாக என்ன நடந்தாலும், யார் சொன்னாலும், விளையாட்டாக கூட "Are Bengal Cats legal in Australia?" என்ற வாக்கியத்தை மட்டும் கூகிள் தளத்தில் நீங்கள் டைப் செய்து சர்ச் செய்யவே கூடாது என்ற ஆபத்தான எச்சரிக்கை செய்தி இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்கியத்தை தேடும் பயனர்கள் நேரடியாக ஹேக்கரின் கட்டுப்பாட்டிற்குள் மாட்டிவிடுகிறார்கள். இந்த வாக்கியத்தை சர்ச் செய்ததும், கூகுளில் காண்பிக்கப்படும் முதல் லிங்கிற்குள் உங்கள்சாதனம் ஆட்டோமேட்டிக்காக நுளைந்துவிடுகிறது.

ஒரு நொடியில் உங்கள் சாதனம் இந்த லிங்கிற்குள் ஒரு முறை சென்றுவிட்டாலே, உங்கள் சாதனம் ஹேக்கரின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடுகிறது. உங்கள் சாதனத்தில் உள்ள, உங்களுக்கு சொந்தமான தனிப்பட்ட அணைத்து தகவல்களும் திருடப்படுகிறது. குறிப்பாக உங்கள் வங்கி கணக்கு, அதன் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ள PIN நம்பர், உங்கள் சாதனத்தில் உள்ள பாஸ்வோர்ட் விபரங்கள் எல்லாவற்றையும் ஹேக்கர்கள் திருடிவிடுவார்கள்.

இதன் மூலம், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் ஹேக்கர்கள் திருடும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. உங்கள் தனிப்பட்ட தகவல்களை வைத்து, உங்களை பிளாக்மெயில் செய்து உங்களிடம் இருந்து பணம் பறிக்கும் அபாயமும் அதிகமாக இருக்கிறது என்பதனால், கூகுள் தளத்தில் மேற்கூறிய வார்த்தைகளை ஒரு போதும் சர்ச் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்வது அவர்களுக்கும் பாதுகாப்பானது.

Best Mobiles in India

English summary
Warning don't search these words on Google and Google Chrome this could expose you to hacking
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X