உஷார் மக்களே: ஏடிஎம் இல் கேமரா மற்றும் குளோனர் பொருத்தி பணத்தைத் திருடும் திருடர்கள்!
டெல்லியில் உள்ள சஃபதர்ஜங் என்க்ளேவில் என்ற பகுதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் டெபிட் கார்டுகளை குளோன் செய்யும் குளோனர் மற்றும் மெமரி கார்டு பொருத்தப்பட்டுள்ள கேமரா உள்ளதை ஆதாரத்துடன் காட்டும் ஒரு வீடியோ பதிவை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனரான விஜய் சேகர்
பணமில்லா பரிவர்த்தனைகளின் வலுவான ஆதரவாளரான பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனரான விஜய் சேகர் திங்களன்று ஏடிஎம் இயந்திரத்தின் வீடியோ ஒன்றை மக்களுக்கா எச்சரிக்கையுடன் வெளியிட்டுள்ளார். ரோஸி என்ற வழக்கறிஞர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ பதிவை, விஜய் சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களே உஷார்!
மக்களே உஷார், சில ஏடிஎம் இயந்திரங்களில் சிறிய வகை கேமரா மற்றும் மெமரி கார்டு குளோனர் பொருத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு முறை நீங்கள் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரத்தைச் சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரித்துள்ளார்.

ஏடிஎம் கார்டு விபரங்கள் மெமரி கார்டில் சேமிப்பு
ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த மெல்லிய சிறிய வகை கேமரா உங்கள் ஏடிஎம் பின் நம்பரை தெளிவாகப் பதிவு செய்துவிடும். அதேபோல் இதில் பொருத்தப்பட்டுள்ள சிறிய வகை குளோனர் உங்கள் ஏடிஎம் கார்டு விபரங்களை சில நொடியில் குளோன் செய்து மெமரி கார்டில் சேமித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெகு வேகமாக வைரல் ஆகும் வீடியோ
நூதன முறையில் மக்களின் பணத்தைத் திருடும் திருடர்களின் முயற்சியை அப்பட்டமாகக் காட்டியுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்பொழுது வெகு வேகமாக வைரல் ஆகிவருகிறது. இதுவரை சுமார் 90,000 மக்களை எட்டியுள்ளது. இதை சுமார் 3703 நபர்கள் ரீட்வீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை 3504 நபர்களுக்கு மேல் லைக்கும் செய்துள்ளனர்.

கனரா வங்கி பதில்
இந்த வீடியோவிற்கு கனரா வங்கியும் பதில் அளித்துள்ளது, வீடியோ பதிவில் உள்ள ஏடிஎம் இயந்திரத்திலிருந்து கேமரா மற்றும் குளோனர்கள் நீக்கப்பட்டுள்ளதென்றும், அந்த பகுதியில் உள்ள அனைத்து ஏடிஎம் இயந்திரங்களைச் சோதனை செய்தும் வருவதாகத் கனரா வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications