Home
News

சூழ்நிலை சரியில்ல., பாதுகாப்பு முக்கியம்- கூகுள் மேப் குறிப்பிட்ட சேவை தற்காலிக நிறுத்தம்: எங்கு தெரியுமா?

உக்ரைனில் கூகுள் மேப்ஸ் லைவ் டிராஃபிக் டேட்டாவை கூகுள் தற்காலிமாக முடக்கி உள்ளது. நாட்டில் உள்ள உள்ளூர் சமூகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூகுள் தெரிவித்திருக்கிறது. ஆல்பாபெட் இன்க்-ன் கூகுள் கடந்த ஞாயிற்றுக் கிழமை உக்ரைனில் தற்காலிமாக சில கூகுள் மேப்ஸ் கருவிகளை முடக்கியதாக உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்திய பகுதிகளின் அதிகாரிகள் உடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் மேப்ஸ் டிராஃபிக்

கூகுள் மேப்ஸ் டிராஃபிக்

உக்ரைனில் உள்ள உள்ளூர் சமூகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உக்ரைனில் கூகுள் மேப்ஸ் டிராஃபிக் லேயரையும், அங்காடிகள் மற்றும் உணவகங்கள் போன்ற நெரிசலான இடங்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து நேரடித் தகவலை உலகளவில் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆல்பாபெட் இன்க்-ன் கூகுள் உக்ரைனுக்கான சில கூகுள் மேப்ஸ் கருவிகளை தற்காலிமாக முடக்கியதை உறுதிப்படுத்தியது.

பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும்

பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும்

அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா உள்ளிட்ட 12 நாடுகள் 1949 உலகப் போருக்கு பின்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் நேட்டா. இதன்பின் இதில் கூடுதலாக 30 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக இணைந்தன. மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து பார்க்கையில், நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் மீது பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில் அமைப்பில் பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்பதாகும். இந்த நிலையில் ரஷ்யா தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு உக்ரைன், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய நேட்டோ அமைப்பில் இணைய விரும்பியது.

நேட்டோ அமைப்பு

நேட்டோ அமைப்பு

இதையடுத்து உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்புடன் இணைக்கக் கூடாது என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தியதோடு இதற்கான உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. இது கைகூடாததை அடுத்து ரஷ்யா நேரடியாக உக்ரைன் மீது போர் தொடக்க தொடங்கியது. தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா கவுன்சில் கொண்டு வரும் தீர்மானத்தில், இந்தியா எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டது.

சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையம்

அதேபோல் சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) இந்தியா அல்லது சீனா நிலப்பரப்பு மீது விழுந்தால் என்ன செய்வீர்கள் என ரஷ்யா கேள்வி எழுப்பி இருக்கிறது. கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற பல ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐஎஸ்எஸ் திட்டத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் முக்கிய பங்குதாரர்கள் ஆவார்கள்.

ரஷ்யா மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடை

ரஷ்யா மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடை

இந்த நிலையில் ரஷ்யா மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்)-க்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடை நமது ஒத்துழைப்பை அழிக்கக்கூடும் எனவும் இந்தியா மற்றும் சீனாவை அச்சுறுத்த விரும்புகிறீர்களா எனவும் வாஷிங்டன்-க்கு ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் ரோஸ்கேோஸ்மஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ், தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம்

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம்

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் பதிவிட்ட பதிவில், அமெரிக்கா ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) மீது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 500 டன் எடையுடன் கட்டமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆய்வு மையம் இந்தியா அல்லது சீனா மீது விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் அவர்களை அச்சுறுத்த விரும்புகிறர்களா? ஐஎஸ்எஸ் ரஷ்யாவுக்கு மேல் பறக்க வில்லை, உங்களுக்கு தான் ரிஸ்க் அதிகம், சந்திக்க தயாரா? என ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் ரோஸ்கோஸ்மஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Best Mobiles in India

English summary
War in Ukraine: Google Temporarily Disable its Google Map Tools
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X