Home
News

PF பணத்தை UPI மூலம் பெற வேண்டுமா? ஊழியர்கள் தவறாமல் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்..

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (Employees' Provident Fund Organisation) இபிஎப்ஓ (EPFO) விரைவில் PF தொகையை நேரடியாக UPI மூலம் பெறும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சமீபத்தில் இந்த புதிய வசதி குறித்துப் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா, இனி EPFO உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் தங்கள் வங்கி கணக்கிற்குக் கொண்டுவரலாம். இதற்கான டெஸ்டிங் ப்ராசஸ் வெற்றிகரமான முடிவடைந்துள்ளது எனத் தெரிவித்தார். ஆகவே விரைவில் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்க முடியும். ஆனால் இந்த சேவையைப் பயன்படுத்த சில முக்கிய அப்டேட்களை முன்கூட்டியே செய்து வைத்திருக்க வேண்டும். அந்த முக்கிய அப்டேட்களை இப்போது பார்க்கலாம்.

PF பணத்தை UPI மூலம் பெற வேண்டுமா?

UAN நம்பரை ஆக்டிவேட் செய்ய வேண்டும்
PF தொகையை UPI மூலம் பெற விரும்பினால், முதலில் உங்கள் UAN (Universal Account Number) செயலில் (Active) இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே UAN-ஐ செயல்படுத்தியிருந்தாலும், அது தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதை மீண்டும் சரிபார்ப்பது நல்லது. ஏதேனும் காரணங்களால் உங்கள் UAN செயலற்றதாக (Inactive) இருந்தால், இந்த புதிய UPI வசதியை பயன்படுத்த முடியாது. எனவே, அடுத்த கட்டத்திற்குச் செல்லும் முன் உங்கள் UAN நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வங்கி கணக்கு விவரங்கள் துல்லியமாக இருக்க வேண்டும்

EPFO போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் வங்கி கணக்கு எண், IFSC குறியீடு (IFSC Code) மற்றும் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக, உங்கள் வங்கி கணக்கில் உள்ள பெயர், PF கணக்கில் உள்ள பெயர் மற்றும் ஆதாரில் (Aadhaar) உள்ள பெயர் ஆகிய மூன்றும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பெயர் விவரங்களில் வேறுபாடு இருந்தால், PF தொகை பரிமாற்றத்தில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்படலாம். மேலும், அதிகம் பயன்படுத்தாத அல்லது KYC சரிபார்ப்பு முடிக்கப்படாத வங்கி கணக்குகளை இணைத்திருந்தால், PF பணம் பெறுவதில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மொபைல் எண் செயலில் இருக்க வேண்டும்
UPI மூலம் PF தொகையை பெறும் போது OTP (One-Time Password) சரிபார்ப்பு அவசியமாக இருக்கும். எனவே, உங்கள் ஆதார், PF கணக்கு மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் தற்போது பயன்பாட்டில் இருக்க வேண்டும். முடிந்தவரை அனைத்து கணக்குகளுக்கும் ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்துவது verification செயல்முறையை எளிதாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

PF பணத்தை UPI மூலம் பெற வேண்டுமா?

பழைய PF கணக்குகளை ஒருங்கிணைக்கவும்

நீங்கள் முன்பு பணியாற்றிய நிறுவனங்களின் PF கணக்குகள் இருந்தால், அவை அனைத்தும் உங்கள் தற்போதைய UAN-உடன் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பல PF கணக்குகள் தனித்தனியாக இருந்தால், அவற்றை ஒருங்கிணைப்பது (Merge) மிகவும் முக்கியம். அதேபோல், e-Nomination விவரங்களையும் புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். இந்த தகவல்கள் சரியாக இருந்தால், எதிர்காலத்தில் PF கிளைம் (Claim) அல்லது பணம் பெறும் செயல்முறைகள் எளிதாகவும் விரைவாகவும் நிறைவேறும்.

பிஎஃப் பணம் எடுப்பது மிகவும் எளிது
EPFO கொண்டுவர உள்ள புதிய யுபிஐ வசதி நடைமுறைக்கு வந்தால் ATM அல்லது UPI apps மூலம் PF தொகையை எளிதாக பயன்படுத்தும் நிலை உருவாகலாம். எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பு KYC, bank linkage மற்றும் UAN verification போன்ற அனைத்து பணிகளை முடித்துவைத்தால் பின்னர் எந்த சிக்கலும் இல்லாமல் சேவையைப் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Want to Withdraw PF Through UPI? Complete These 5 Updates First
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X