மீண்டும் ரூ.200 ரீசார்ஜ்.. தேங்க்ஸ் அம்பானி.. Jio சிம் கார்ட்டை 1 மாசத்துக்கு ஆக்டிவ் ஆக வைக்க இது போதும்!
ஜியோ (Jio) நிறுவனம் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த 4 மாத காலத்தில்.. "ஐயா அம்பானி.. இவ்வளவு விலை கொடுத்து ரீசார்ஜ் செய்து என்னால மாள முடியாது டா சாமி!" என்று எஸ்கேப் ஆனவர்கள் பலர்!
ஒருவேளை உங்களுக்கும் இதே மைண்ட் செட்தான்,. ஆனால் உங்களுடைய ஜியோ நம்பரை இழக்கவோ அல்லது அதை பயன்படுத்தாமல் இருக்கவோ நீங்கள் விரும்பவில்லை என்றால்.. உங்களுக்காகவே அம்பானி விட்டுவைத்த ஒரு திட்டம் உள்ளது (அதற்காக அம்பானிக்கு ஒரு தேங்க்ஸ்). பழையபடி.. மீண்டும் ரூ.200-க்குள் என்கிற பட்ஜெட்டில் உங்களுடைய ஜியோ சிம்-ஐ 1 மாத காலத்திற்கு ஆக்டிவ் ஆக வைத்திருக்க இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் என்ன? இதோ விவரங்கள்:

அது என்ன திட்டம்? ஜியோ சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் மலிவான சிம் ஆக்டிவேஷன் பிளானின் (Cheapest SIM Activation Plan) விலை ரூ.189 ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் (28 Days Validity) ஆகும். நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 2 ஜிபி ஹைஸ்பீட் டேட்டா (2 GB Highspeed Data) வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call) நன்மைகளும் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும் மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள் (300 SMS) இலவசமாக கிடைக்கும். கூடுதலாக இந்த திட்டத்தில் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) போன்ற தளங்களுக்கான இலவச சந்தாவும் கிடைக்கும்.
உங்களுக்கு பெரிய அளவிலான டேட்டா தேவை இருக்காது என்றால், நீங்கள் சோஷியல் மீடியா தளங்களை மிகவும் குறைவாக பயன்படுத்துபவராக இருந்தால்.. அல்லது உங்களுடைய ஜியோ சிம் கார்ட்டை இரண்டாம் நிலை சிம் கார்டு (Secondary SIM Card) ஆக பயன்படுத்தி வந்தால்.. அதை அதிகம் செலவு செய்யாமல் ஆக்டிவ் ஆக வைத்து இருக்க விரும்பினால்.. கண்களை மூடிக்கொண்டு ரூ.189-ஐ ரீசார்ஜ் செய்யலாம்.
இதேபோல பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் கீழும் கூட, ரூ.200 க்குள் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்து இருக்கும் ஒரு திட்டம் உள்ளது. அந்த திட்டத்தின் விலை ரூ.199 ஆகும். இது கிட்டத்தட்ட ஜியோவின் ரூ.189 திட்டம் வழங்கும் அதே நன்மைகளை வழங்கினாலும் கூட, இது ஜியோவை விட ரூ.10 அதிக விலை கொண்டதாக இருக்கிறது.
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் (28 Days Validity) ஆகும். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 2 ஜிபி டேட்டா (2 GB Data) கிடைக்கும். இந்த ஏர்டெல் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் (Unlimited Voice Calls) பயன்படுத்தலாம்.
எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தவரை 28 நாட்களுக்கும் மொத்தம் 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமே இலவசமாக கிடைக்கும். இது ஜியோவின் ரூ.189 உடன் ஒப்பிடும் போது 200 எஸ்எம்எஸ்கள் குறைவாகும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஏர்டெல் ரூ.199-ன் கீழ் ஏர்டெல் எக்ஸ்ட்ரீமின் சந்தா (Airtel Xstream Subscription) இலவசமாக கிடைக்கும். இதன் கீழ் நீங்கள் பல்வேறு ஓடிடி (OTT) தளங்களுக்கான இலவச அணுகல்களை பெறலாம்; அதில் உள்ள திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
ஏர்டெல்லின் ரூ.199 திட்டத்தின் தினசரி செலவு ரூ.7.10 பைசா ஆகும் என்பதும். ஜியோவின் ரூ.189 திட்டத்தின் தினசரி செலவு ரூ.6.75 பைசா ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருவேளை உங்களுக்கு டெய்லி டேட்டா லிமிட் உடன் வரும் திட்டங்கள் தான் வேண்டும் என்றால்..
அதாவது டெய்லி 1 ஜிபி, டெய்லி 2 ஜிபி அல்லது டெய்லி 3 ஜிபி டேட்டா வேண்டுமென்றால்.. இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று அதிக பணம் செலவழித்து ரீசார்ஜ் செய்துகொள்ளவும். இரண்டு - பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM Card) ஒன்றை வாங்கிக்கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








