ஆடைகள் டேமேஜ் ஆகாமல் இஸ்திரி செய்ய வேண்டுமா? ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க! இதை வாங்குங்க!
"ஆள் பாதி ஆடை பாதி" என்று தமிழில் பிரபலமான சொலவடை ஒன்று உள்ளது. ஒருவரை கண்ணியமாக தோற்றப்படுத்தும் அம்சங்களில் நாம் உடுத்தும் உடைக்கும் முக்கியமான ஒரு பங்கு உண்டு. உடைகளை இஸ்திரி செய்து அணிவது சிறந்த மதிப்பை உருவாக்குகிறது.
பாடம் எடுக்க செல்லும் ஆசிரியர், நேர்காணலுக்குச் செல்லும் ஒரு பட்டதாரி, காவல்துறை அதிகாரி, அலுவலக வேலைக்கு செல்லும் மக்கள், அவ்வளவு ஏன்? விசேஷ வீடுகளுக்கு செல்லும் போதும் கூட கசங்களான துணியை உடுத்திக் கொண்டு செல்ல யாரும் விரும்ப மாட்டார்கள். சுத்தமான கண்ணியமான உடையை அணிந்து செல்லத்தான் அனைவரும் விரும்புவர்.

கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்து வரும் ஐயன் பாக்ஸ்கள்!
அப்படிக் கசங்கி இருக்கும் ஆடைகளை சீராக்க இஸ்திரி செய்வது பல ஆண்டுகளாகவே நம் வழக்கத்தில் இருக்கும் ஒன்று. வரலாற்றை பின்னோக்கி திரும்பிப் பார்த்தால் அந்த இஸ்திரி பெட்டி அதாவது அயன் பாக்ஸ் (Iron Box) பல பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது என்றே கூறலாம். அந்தக் காலத்தில் கங்குகளைக் கொண்டு இஸ்திரி செய்யப்பட்டு வந்தது. பின்னர் மின்சாரத்தில் செயல்படும் அயன் பாக்ஸ்-ஆக அனைத்து வீட்டிற்குள்ளும் நுழைந்தது.
பொதுவாக சுருக்கங்களை முற்றிலுமாக நீக்க தண்ணீர் தெளித்து இஸ்திரி செய்வர். இந்த செயல்பாட்டின் நவீன உருவம் தான் கார்மெண்ட் ஸ்டீமர் (Garment Steamer). அயன் பாக்ஸை பயன்படுத்தி இஸ்திரி செய்வதை விட, ஸ்டீமரை பயன்படுத்துவது மிகவும் எளிமையானதாகவும், உடைகளை தரமாக இஸ்திரி செய்யும் வகையிலும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே சமீபத்தில் மக்களின் கவனம் கார்மெண்ட் ஸ்டீமர்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது. இருப்பினும் கார்மெண்ட் ஸ்டீமர்கள் மக்கள் மத்தியில் அதிக பயன்பாட்டில் இல்லாததற்கான காரணம், அதன் அதிக படியான விலை தான். அயன் பாக்ஸை விட சுமார் பத்து மடங்கு விலை கொண்டுள்ள ஸ்டீமர்களை வாங்குவது அனைவருக்கும் சாத்தியமான ஒன்று இல்லை.

உஷா நிறுவனத்தின் புதிய USHA SI Techne Direct 1000 garment steamer!
எப்போதும் போல மலிவான விலைக்கு கார்மெண்ட் ஸ்டீமர்ளை லோக்கல் பிராண்டுகள் (Local Brand) உருவாக்கி விற்பனை செய்கின்றனர். ஆனால் தரமான பொருள் கிடைக்குமா? பாதுகாப்பாக இருக்குமா? அதிக நாட்கள் உழைக்குமா? என்பதெல்லாம் கேள்விக்குறிதான். நம்பகமாக பிராண்டுகளில் வாங்க வேண்டும் என்றால் அதன் விலை அதிகமாக இருக்கும் என்று மக்கள் கவலைப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியில் பல ஆண்டுகளாக வெற்றிக்கொடி நாட்டி வந்த "உஷா" நிறுவனம் அயன் பாக்ஸிற்கு இணையான விலையில் கார்மென்ட் ஸ்டீமர்களை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த உஷா கார்மெண்ட் ஸ்டீமரானது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் எளிமையாகவும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் துணிகளைப் பராமரிக்க அன்றாடம் பயன்படுத்தும் ஹங்கர்களிள் (Hanger) உடைகளை தொங்கவிட்டு இந்த ஸ்டீமர் கொண்டு சுலபமாக அவற்றில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி விட முடியும். சாதாரண அயன் பாக்ஸில் குனிந்து அயன் செய்வதால் வரும் இடுப்பு வலியை பொறுக்க முடியாமலே பல சமயங்களில் கசங்களான உடையை அணிந்து செல்ல நேரலாம்.

இனி குனியாமல் ஐயன் செய்யலாம்! துணிகள் டேமேஜ் ஆகாமல் இருக்க ஸ்டீமர் ஏன் பெஸ்ட்?
குனியாமல் அயன் செய்ய வேண்டும் என்றால், அதற்கென பிரத்தியேகமான அயனிங் போர்டு (Ironing Board) வாங்க வேண்டும். கார்மெண்ட் ஸ்டீமர் பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது. இந்த கார்மெண்ட் ஸ்டீமரானது 920W பவரை தன்னுடைய செயல்பாட்டிற்காகப் பயன்படுத்துகிறது. 200ml கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க்கில் (Water tanks) தண்ணீர் நிரப்பப்பட்டு, அது 21gm/min வேகத்தில் நீராவியை வெளியிடப்படுகிறது.
இதன் மூலம் மிகவும் கச்சிதமாக. சுருக்கம் இல்லாத ஆடையை பெற முடிகிறது. மேலும், நீராவி மூலம் சுருக்கம் நீக்கப்படுவதால் சாதாரண அயன் பாக்ஸில் ஏற்படுவது போல துணி தீய்ந்து போவது, எரிந்து போவது போன்ற நிகழ்வுகள் ஏற்படாது. 360 டிகிரி திரும்பும் தன்மை கொண்ட 1.8m நீளமுள்ள கார்ட் (Cord) இந்த ஸ்டீமரில் கொடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 2m அளவிற்கு நீளமுள்ள காட் இருப்பதினால் ஸ்விட்ச் பாக்ஸில் (Switch Box) பக்கத்தில் இருந்து கொண்டே ஸ்டீம்மிங் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இந்த உஷா கார்மெண்ட் ஸ்டீமரில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சம் இதன் ஓவர்ஹீட் ஷட்ஆஃப் தெர்மோஸ்டாட் (Overheat Shut Off Thermostat). கார்மெண்ட் ஸ்டீமர் அதிகப்படியான வெப்பத்தை எதிர்கொள்ளும் பொழுது தாமாக ஆஃப் ஆகிவிடும்.
USHA கார்மெண்ட் ஸ்டீமர் விலை என்ன?
இதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக கார்மெண்ட் ஸ்டீமரை பயன்படுத்த முடிகிறது. இந்த உஷா எஸ்ஐ டெக்னி டைரக்ட் கார்மெண்ட் ஸ்டீமருக்கு (Usha SI direct garment steamer) இரண்டு ஆண்டு வாரண்டியும் (Warranty) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டீமர் அமேசானில் ரூ 3,249, ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ 3,999 மற்றும் பிளிப்கார்ட்டில் ரூ 3,299 போன்ற பல்வேறு விலைக் குறிகளில் விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








