AI யூசர்கள் மத்தியில் செம்ம டிரெண்ட் ஆகும் Airtel ரீசார்ஜ்.. வெறும் ரூ.200 க்கு 1 வருஷத்துக்கு யூஸ் பண்ணலாம்!
சோஷியல் மீடியா முழுக்க எங்கு திரும்பினாலும்.. எது உண்மை, எது போலி என்று கண்டுபிடிக்க முடியாத அளவிலான ஏஐ போட்டோ, ஏஐ வீடியோக்களை தான் பார்க்க முடிகிறது. "ப்ரொடெக்டிவிட்டி" என்பதை மீறி கிரியேட்டிவிட்டி மற்றும் எண்டர்டெயின்மெண்ட்க்காகவே - ஏஐ திக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இடத்தில் தான் ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் வெறும் ரூ.200 க்குள் என்கிற பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு திட்டம், ஏஐ யூசர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அது ரூ.189 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆகும். இது பெர்பிளெக்ஸ்சிட்டி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

மேலும் - இப்போதைக்கு இது தான் 1 ஆண்டுக்கான பெர்பிளெஸ்சிட்டி ப்ரோ ஏஐ சந்தாவை மிகவும் மலிவான விலைக்கு வழங்கும் ஏர்டெல் திட்டமாகும். இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். இதன்கீழ் மொத்தமாகவே 1ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் உண்மையான நன்மை பெர்பிளெஸ்சிட்டி ப்ரோ தான். அறியாதோர்களுக்கு பெர்பிளெஸ்சிட்டி ப்ரோவின் 1 ஆண்டு சந்தாவின் அசல் விலை ரூ.17,000 ஆகும்!
1ஜிபி டேட்டாவுடன் சேர்த்து பார்தி ஏர்டெல்லின் ரூ.189 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், மொத்தம் 300 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும். ஜியோவிடம் கூட ரூ.189 க்கு ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உள்ளது. ஆனால் அதன்கீழ் ஏர்டெல்லை போன்ற இலவச ஏஐ சந்தா எதுவும் இல்லை. இருப்பினும் ஜியோவின் ரூ.189 ஆனது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டம், அதிக நன்மைகளை வழங்கும் திட்டம் என்று பார்க்கும் போது, ஜியோவின் ரூ.189 தான் வெற்றியாளர். ஆனால் ஏர்டெல்லில் உங்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ சந்தா கிடைக்கிறது. இதுதான் இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் ஆகும். ஆக ஏர்டெல்லின் ரூ.189 தான் உண்மையான வெற்றியாளர்!
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஏர்டெல் நிறுவனம் அதன் பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் "சத்தமின்றி" சில முக்கிய மாற்றங்களையும் செய்துள்ளது. முதல் மாற்றம் - ஏர்டெல் நிறுவனம் ரூ.3599 மதிப்புள்ள அதன் வருடாந்திர திட்டத்திலிருந்து ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை நீக்கியுள்ளது.
நீக்கிய வேகத்தில் ரூ.279 ஓடிடி டேட்டா பேக் மற்றும் ரூ.598 மற்றும் ரூ.1729 ஆகிய 2 அன்லிமிடெட் திட்டங்களில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ப்ரீமியம் (Xstream Play Premium) சந்தா வழியாக பல ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகலை சேர்த்துள்ளது. இதேபோல ரூ.100 டேட்டா பேக் ஆனது இப்போது மொத்தம் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நினைவூட்டும் வண்ணம், முன்னதாக ரூ.100 டேட் பேக் ஆனது 5 ஜிபி டேட்டாவை வழங்கியது
இருப்பினும் 6ஜிபி என்கிற டேட்டா லிமிட்டிற்கு பின் ரூ.0.50/எம்பி என்கிற முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் . இந்த பேக்கின் சர்வீஸ் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதன் கீழ் ஏர்டெல் ரிவர்ட்ஸ் ஆக 30 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22க்கும் மேற்ப்பட்ட ஓடிடி) சந்தாவும் அணுக கிடைக்கும்.
ரூ.100 டேட்டா பேக்கில் 1ஜிபி எக்ஸ்ட்ரா சேர்க்கப்பட்டதை போலவே ஏர்டெல் ரூ.449 அன்லிமிடெட் பிளானின் டெய்லி டேட்டாவிலும் 1 ஜிபி எக்ஸ்ட்ரா சேர்க்கப்பட்டுள்ளது. 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கிய திட்டம், இப்போது டெய்லி 4ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்கும்.


Click it and Unblock the Notifications








