4 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது "முரட்டு" ஆபர்.. சம்பளம் போடுற நேரமா பார்த்து டெம்ப்ட் ஏத்துறாங்களே!
2023 குடியரசு தின சிறப்பு விற்பனை முடிந்த பின்னரும் கூட, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழங்கும் சலுகைகள் முடிந்தபாடில்லை!
இன்னமும் பிளிப்கார்ட்டில், குறிப்பிட்ட சில மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் (Mid Range Phones) மீது மிகப்பெரிய அளவிலான எக்ஸ்சேன்ஜ் ஆபர்கள் (Exchange Offers) அணுக கிடைக்கிறது!
என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு எக்ஸ்சேன்ஜ் ஆபர் கிடைக்கிறது? என்கிற விவரங்கள் இதோ:

01. போக்கோ எம்4 ப்ரோ (Poco M4 Pro)
போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.43 இன்ச் அமோஎல்இடி டிஸ்ப்ளே, 64எம்பி + 8எம்பி + 2எம்பி என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி96 (Mediatek Helio G96) ப்ராசஸர் போன்ற முகிக்ய அம்சங்களுடன் வருகிறது.
தற்போது இது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடலின் மீது ரூ.11,450 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கிறது.

02. சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி (Xiaomi 11i Hypercharge 5G)
சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108MP மெயின் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 920 (MediaTek Dimensity 920) ப்ராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, வெறும் 13 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது.
பிளிப்கார்ட்டின் குடியரசு தின சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இந்த போன் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடலின் மீது ரூ.23,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கிறது.

03. மோட்டோரோலா ஜி62 5ஜி (Motorola G62 5G)
மோட்டோரோலா ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி நெட்வொர்க் ஆதரவை வழங்கும் ஒரு ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போன் ஆகும்.
இது 50MP + 8MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16MP செல்பீ கேமரா, 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி (Qualcomm Snapdragon 695 5G) ப்ராசஸர் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
தற்போது இந்த ஸ்மார்ட்போன் குடியரசு தின சலுகையின் கீழ் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடலின் மீது ரூ.14,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கிறது.

04. மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30)
மற்றொரு பிரபலமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஆன எட்ஜ் 30 மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி (Qualcomm Snapdragon 778G) ப்ராசஸர் உடன் வருகிறது.
மேலும் இது 6.5-இன்ச் டிஸ்பிளே, 50MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32MP செல்பீ கேமரா போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.
தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடலின் மீது ரூ.21,400 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கிறது

ஜனவரி 30 வரை நடக்கும் எலெக்ட்ரானிக்ஸ் சேல்!
2023 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின சிறப்பு விற்பனையை தொடர்ந்து பிளிப்கார்ட் வலைத்தளமானது, எலெக்ட்ரானிக்ஸ் சேல் (Electronics Sale) என்கிற புதிய சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.
இன்று முதல் (அதாவது ஜனவரி 25 ஆம் தேதி முதல்) தொடங்கும் இந்த சிறப்பு விற்பனையானது வருகிற ஜனவரி 30 ஆம் தேதி வரை நடக்கும்.
இந்த விற்பனையின் போது, பல்வேறு வகையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மீது 70% வரை சலுகைகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!


Click it and Unblock the Notifications








