Home
News

புதிய சிம் கார்டு வாங்க, இதெல்லாம் செய்யணும்.!

விரிச்சுவல் அடையாளம் என்பது உதய் அல்லது ஆதார் மூலம் அளிக்கப்படும் 16 இலக்க எண் ஆகும்.

By Jijo Gilbert

நீங்கள் புதிய ஒரு சிம் கார்டை வாங்க, 16 டிஜிட்டல் விரிச்சுவல் அடையாளத்தை பயன்படுத்த வேண்டும். ஒரு புதிய சிம் கார்டை வாங்க நீங்கள் கடைக்கு செல்வதாக இருந்தால், டாட் (தொலைத்தொடர்பு துறை) வகுத்துள்ள ஒரு சில புதிய விதிமுறைகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தற்போது ஒரு புதிய சிம் கார்டை வாங்குவதற்கு (ஜூன் 1 ஆம் தேதி முதல்) இருக்கும் ஒரே ஒரு வழி என்னவென்றால், பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் உங்கள் சான்றுகளைச் சரிபார்க்கும் இ-கேவைசி (உங்கள் நுகர்வோரை எலக்ட்ரானிக் முறையில் அறிதல்) செயலியைப் பயன்படுத்தி மட்டுமே முடியும்.

புதிய சிம் கார்டு வாங்க, இதெல்லாம் செய்யணும்.!

எந்தொரு அடையாள அட்டையிலும் பயோமெட்ரிக் அங்கீகார தேர்வு இல்லாமல் இருந்ததால், ஒரு புதிய சிம் கார்டு இணைப்பை பெறுவதற்கு ஆதார் அட்டையின் எண் கட்டாயம் என்ற நிலை இருக்கவில்லை. ஆனால் தற்போது இ-கேவைசி செயல்பாடு வந்த பிறகு, ஆதார் அட்டையைப் பயன்படுத்தி மட்டுமே ஒரு புதிய சிம் இணைப்பை பெற முடியும் என்ற ஒரு சூழ்நிலையை டாட் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் ஆதார் அட்டையின் முழு எண்ணும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் உடன் பகிர்ந்து கொள்ளப்படுவதற்கு பதிலாக, விரிச்சுவல் அடையாளத்திற்கு ஆபரேட்டருக்கு தேவைப்படும் தகவல்களை மட்டும் கொண்ட ஒரு நிர்ணயிக்கப்பட்ட கேவைசி மட்டும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

 ஒரு விரிச்சுவல் அடையாளம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இ-கேவைசி என்றால் என்ன?

ஒரு விரிச்சுவல் அடையாளம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இ-கேவைசி என்றால் என்ன?

விரிச்சுவல் அடையாளம் என்பது உதய் அல்லது ஆதார் மூலம் அளிக்கப்படும் 16 இலக்க எண் ஆகும். கீழே அளிக்கப்பட்டுள்ள யூஆர்எல்-லுக்கு செல்வதன் மூலம் இந்த விரிச்சுவல் அடையாளத்தை ஒருவர் பெற்று கொள்ள முடியும். அதே நேரத்தில், ஒரு விரிச்சுவல் அடையாளத்தை பெற, ஆதார் எண்ணுக்கான ஓடிபி சரிப்பார்ப்பு பெறும் வகையில், ஒரு மொபைல் எண் தேவைப்படுகிறது.

ஆதார்

ஆதார்

உங்கள் ஆதார் அட்டையில் ஒரு மொபைல் எண் இணைக்கப்படாத பட்சத்தில், அருகில் உள்ள ஆதார் சென்டருக்கு சென்று, உங்கள் மொபைல் எண்ணை சேர்த்து கொள்ளுங்கள். இந்த விரிச்சுவர் அடையாளத்தின் மூலம் உங்கள் ஆதார் எண்ணிற்கும், அதிலுள்ள தகவல்களை மட்டும் பகிர்ந்து அளிக்கும்படி, கேட்கும் ஒரு நிறுவனத்திற்கும் இடையிலான ஒரு வடிகட்டியாக செயல்படுகிறது.

ஆதார் எண்ணை பயன்படுத்தி விரிச்சுவல் அடையாளத்தை உண்டாக்குதல்

ஆதார் எண்ணை பயன்படுத்தி விரிச்சுவல் அடையாளத்தை உண்டாக்குதல்

ஒரு தொலைத்தொடர்பு ஆபரேட்டருக்கு உங்கள் முகவரி மற்றும் பெயர் போன்ற தகவல்கள் உள்ளடக்கி அளிக்கும் முறையே, நிர்ணயிக்கப்பட்ட இ-கேவைசி என்ற செயல்பாடு ஆகும். இந்த நிர்ணயிக்கப்பட்ட இ-கேவைசி என்பது பேப்பர் இல்லாத செயல்முறையாக விளங்கி, குறிப்பிட்ட வினாடிகளில் பணியை விரைவாக முடிக்க கூடியது ஆகும். ஒரு பயனர் தனது விரிச்சுவல் அடையாளத்தை அளித்த உடன், பயோமெட்ரிக் உறுதியளிப்பு செயல்முறையை பயன்படுத்தி, அங்கீகாரம் சரிப்பார்க்கப்படுகிறது. இதற்கு நிர்ணயிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே ஒரு தொலைத் தொடர்பு ஆபரேட்டர் உடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆதார் எண் அளிக்கப்படுவது இல்லை

விரிச்சுவல்

விரிச்சுவல்

இதில் வாடிக்கையாளர்களுக்கு என்ன இருக்கிறது? தங்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிக்கிறதே என்று அதிகமாக கவலைப்படும் நபர்களுக்காக, தொலைத் தொடர்பு துறையின் மூலம் எடுக்கப்படும் ஒரு சிறப்பான படி என்னவென்றால், உங்களின் முழு தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்படமாட்டாது. இதனால் ஆதார் எண் ரகசியமாக காக்கப்படுகிறது. இந்த விரிச்சுவல் அடையாளத்தை பயன்படுத்தி, உங்கள் ஆதார் எண்ணை ஒருவரும் கண்காணிக்க முடியாது. இந்த விரிச்சுவல் அடையாளம் என்பது ஒரே ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாக கூடியது என்பது இதில் உள்ள ஒரு சிறப்பான தன்மை ஆகும். ஒரு பயனர் மூலம் ஒரு புதிய விரிச்சுவல் அடையாளம் உருவாக்கப்பட்ட நிலையில், அவரது பழைய அடையாளத்தை அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் பயன்படுத்தவே முடியாது.

Best Mobiles in India

English summary
Want to buy a new SIM card Then follow these rules set by DoT : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X