Airtel 5G இலவசமா அன்லிமிடெட்-ஆ வேண்டுமா? அப்போ நீங்க இதை மட்டும் தான் செய்யணும்!
ஏர்டெல் (Airtel) பயன்படுத்தும் கோடி கணக்கான மக்களில் நீங்களும் ஒருவரா? உங்களிடம் ஒரு ஏர்டெல் சிம் இருக்கிறதா? கூடுதல் பைசா செலவின்றி உங்கள் 4ஜி திட்டத்தை வைத்தே, அன்லிமிடெட் ஆக 5ஜி (5G) பயன்படுத்த ஆசையா? அப்போ இதை படியுங்கள்.
பார்தி ஏர்டெல் சமீபத்தில் இந்தியாவில் உள்ள அதன் அனைத்து 4ஜி வாடிக்கையாளருக்கும், வரம்பற்ற 5ஜி டேட்டா சலுகையை அறிவித்தது. வாடிக்கையாளர்களை இது நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு சலுகையாக இருக்கிறது. மற்ற நாடுகளில் 5ஜி சேவைக்கு கணிசமாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலும், கூடுதல் கட்டணமின்றி 5ஜியைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரே நாடாக இந்தியா மட்டுமே திகழ்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

சரி, ஏர்டெல் வழங்கும் இலவச அன்லிமிடெட் 5ஜி சேவையை பற்றி பார்க்கலாம். ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆஃபர் மிகவும் சுவாரஸ்யமானது. இந்த சலுகையின் விவரங்கள் சந்தாதாரர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், அன்லிமிடெட் 5ஜி சேவையை பெறுவதில் சில சிக்கலை நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்பதனால் பதிவை இறுதி வரை படித்துப் பயன்பெறவும்.
ஏர்டெல் தனது 5G நெட்வொர்க் சேவையை நாட்டில் அறிமுகம் செய்ததிலிருந்து, பரவலாகப் பல இடங்களில் அதன் 5ஜி சேவையை அணுகச் செய்தது. உங்களிடம் 4ஜி சிம் இருந்தாலும், உங்களுக்கு ஏர்டெல்லின் 5ஜி பயன்படுத்தக் கிடைக்கும் என்பதே உண்மை. உங்கள் ஏரியாவில் 5ஜி கவரேஜ் இருக்க வேண்டும் என்பது அடுத்த அடிப்படை விஷயமாகவும். இது தவிர, உங்களின் அடிப்படை திட்டம் எது என்பது முக்கியமானது.
ஏர்டெல்லின் 5ஜி டேட்டா சலுகையை பெற உங்கள் மொபைல் எண் ரூ.239 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யப்பட்டிருக்க வேண்டும். சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் மக்களே. ரூ.299 திட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 5ஜி சலுகை கிடைக்கும். இதில் கூட, ரூ.455 மற்றும் ரூ.1799 போன்ற திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் 5ஜி சலுகை கிடைக்காது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏர்டெல்லின் 5ஜி சலுகை போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும். Airtel வழங்கும் வரம்பற்ற 5G டேட்டாவைப் பயன்படுத்த, நீங்கள் எப்போதும் செயலில் இருக்கும்படியான ரீசார்ஜ் வேலிடிட்டி உடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை, வாடிக்கையாளர் குடும்ப போஸ்ட்பெய்டு திட்டத்திற்கு குழு சேர்ந்திருந்தால், அனைத்து பயனர்களும் வரம்பற்ற 5G டேட்டா சலுகையை தனித்தனியாகக் கோர வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சரி, இப்போது ஏர்டெல் வழங்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை எவ்வாறு பெறுவது? என்று பார்க்கலாம். ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாகக் கிடைக்கிறது.
இதற்கு முதலில் உங்கள் போனில் Airtel Thanks App இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். நீங்கள் பயன்பாட்டின் home பகுதிக்குச் சென்று,Unlimited 5G டேட்டா பேனரைக் கண்டுபிடித்து அதை கிளிக் செய்யவும். பிறகு, சலுகையைப் பெறுவதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள். Claim Now ஆப்ஷனைத் தட்டினால், வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பெறத் தொடங்குவீர்கள். ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆஃபர் டெல்கோவின் 5ஜி கவரேஜ் உள்ள பகுதிகளில் மட்டுமே வேலை செய்யும்.
வாடிக்கையாளர் 4G கவரேஜின் கீழ் வந்து, Airtel இன் 4G நெட்வொர்க்குடன் இணைந்தவுடன், FUP (நியாயமான-பயன்பாடு-கொள்கை) தரவு தொடங்கும். 5ஜி சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏர்டெல் குறிப்பிட்டுள்ள மிகப்பெரிய விஷயங்களில் ஒன்று, பயனர்கள் வரம்பற்ற 5G டேட்டா சலுகையில் இருந்தால் ஹாட்ஸ்பாட் வழியாக மற்றவர்களுடன் டேட்டாவைப் பகிர முடியாது. இதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








