Home
News

1000 ரூபாய்க்கு ப்ளூடூத் காலிங் உடன் Smartwatch வேண்டுமா? யோசிக்காம இந்த வாட்சை தான் வாங்கணும்!

1000 ரூபாய் தான்ப்பா பட்ஜெட்.. ஆனா எல்லா அம்சமும் அந்த ஸ்மார்ட் வாட்ச்ல இருக்கனும்.. ஒரு நல்ல மாடலா காட்டுங்க என்று கடைக்காரர்களிடம் பேசுவது போல நினைத்துக்கொண்டு, ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நண்பர்களே! உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வாட்ச் இது தான்.

beatXP என்ற பிட்னஸ் தொடர்பான பிராண்ட் மிக விரைவில் beatXP Marv Neo smartwatch என்ற புது ஸ்மார்ட் வாட்ச் மாடலை இந்திய சந்தையில், மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில், இப்போது ஸ்மார்ட்வாட்ச் கலாச்சாரம் மக்களிடையே அதிகரித்துவிட்டது. பலரும் இப்போது ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களை ட்ரை செய்து பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

1000 ரூபாய்க்கு ப்ளூடூத் காலிங் உடன் Smartwatch வேண்டுமா?

ஸ்மார்ட் வாட்ச் அனுபவத்தை ட்ரை செய்து பார்க்க விரும்புவோரின் எதிர்பார்ப்பில் குறைவே இல்லாமல், அவர்கள் வாங்க நினைக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் அணைத்து அம்சமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதன் விலை ரூ.1000 விலை புள்ளிக்குள் தான் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார்கள். இவர்களுக்காகவே beatXP Marv Neo ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகவிருக்கிறது.

இதன் விலை இந்தியாவில் ரூ.1,199 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. நீங்கள் வாங்க விரும்பும் புது ஸ்மார்ட் வாட்சில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு லிஸ்ட் ரெடியாக இருக்குமல்லவா? அந்த லிஸ்டை இது ஒன்றின் பின் ஒன்றாக டிக் செய்து. உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறது. குறிப்பாக, இந்த விலையில் இந்த ஸ்மார்ட் வாட்ச் ப்ளூடூத் கால்லிங் அம்சத்துடன் வருகிறது.

ஆம், இந்த beatXP Marv Neo ஸ்மார்ட் வாட்ச் சாதனம் வாய்ஸ் கால் செய்ய அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் இப்போது Amazon தளத்தில் லைவ் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த வாட்ச்சின் லுக் மற்றும் சிறப்பம்ச விபரங்கள் இப்போது வெளியாகியுள்ளது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம். பீட்எக்ஸ்பி மார்வ் நியோ வாட்ச் இந்தியாவில் ரூ.1,199 விலையில் வருகிறது.

1000 ரூபாய்க்கு ப்ளூடூத் காலிங் உடன் Smartwatch வேண்டுமா?

இந்த ஸ்மார்ட் வாட்ச் பிங்க் கோல்டு, பிளாக் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வரும். இது UI நேவிகேஷனுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் 1.85' இன்ச் கொண்ட பெரிய டிஸ்பிளேவைச் சுற்றி மிகக் குறைந்த பெசல்களைக் கொண்டிருக்கும். இந்த வாட்ச் EzyPair குயிக் பேரிங் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும்.

உடல்நலம் சார்ந்த அம்சங்களுக்கு நகரும், இந்த beatXP Marv Neo ஸ்மார்ட்வாட்ச் இரத்த அழுத்தக் கண்காணிப்பு, இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் SpO2 கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். beatXP Marv Neo ஒரு இன்பில்ட் AI வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்துடன் வருகிறது. இந்த சாதனம் 280mah பேட்டரியைக் கொண்டிருக்கும். இது ஒரு வாரம் வரை நீடிக்கிறது. இந்த சாதனம் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது.

இதில் 60+ ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளது. கடைசியாக, பீbeatXP Marv Neo ஸ்லீப் டிராக்கிங், மாதவிடாய் கண்காணிப்பு, மியூசிக் பிளேபேக் கட்டுப்பாடு, 100க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் மற்றும் இன்பில்ட் கேம்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெறும் ரூ.1,199 விலைக்கு வழங்குகிறது என்பது ஆச்சரியம். மலிவு விலையில் அணைத்து அம்சங்களையும் எதிர்பார்க்கும் நபர்களுக்கு இந்த beatXP Marv Neo பெஸ்ட் சாய்ஸ்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Want a Smartwatch With Bluetooth Calling For Rs 1000 Price Range Buy This beatXP Marv Neo Watch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X