ஆகச்சிறந்த பெஸ்ட் கேமராவுடன் புது Smartphone வேண்டுமா? இந்த போன்களை பாருங்க!
குறுகிய காலத்திற்குள் ஏன் ஸ்மார்ட்போன்கள் உலகளவில் பிரபலமான தெரியுமா? அது வெறும் போனாக இல்லாமல், குட்டி கம்ப்யூட்டர் போன்ற சாதனமாக கைக்கு அடக்கமாக மாறியது ஒரு காரணம், மற்றொன்று அது வெறும் போனாக இல்லாமல் படம்பிடிக்கும் கேமராவகை மாறியது.
டிஜிட்டல் கேமரா என்ற ஒரு பிரிவை ஒட்டுமொத்தமாக அழிந்து போனதற்கு ஸ்மார்ட்போன்கள் தான் முக்கிய காரணம். தனியாக ஒரு கேமராவை வாங்கி, அவர்களின் சிறந்த தருணங்களைப் படம்பிடிக்க முயல்வதற்குப் பதிலாக, சிறந்த கேமரா அம்சம் இருக்கும் போனை வாங்கினால் போதுமே, சூப்பராக போட்டோஸ் மற்றும் வீடியோஸ் எடுக்கலாமே என்பது தான் மக்களின் எண்ணமாக மாறியது.

இதனால் தான், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து அவர்களின் மொபைல் போன்களில் இருக்கும் கேமரா அம்சத்தை மேன்மேலும் மேம்படுத்தி வருகின்றனர். இப்போது பல விலை பிரிவில் பல விதமான ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கின்றன. ஒவ்வொரு விலை பிரிவிற்கும் ஏற்றார் போல, ஸ்மார்ட்போன்களில் (Smartphone) வழங்கப்படும் கேமரா தரம் மாறுகிறது. இப்படி பல்வேறு பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியலை தான் இங்கு உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.
இந்த பட்டியலில் ரூ.10,000 விலை முதல் ரூ. 50,000 விலை வரம்பு வரை கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளோம். அந்தந்த விலை பிரிவில் ஆகச்சிறந்த கேமரா அம்சங்களை கொண்ட போன்களை மட்டுமே இந்த பட்டியலில் சேர்த்துள்ளோம் என்பது கவனிக்கத்தக்கது. சரி, உங்கள் பட்ஜெட்டிற்குள் எந்த மாடல் சிறந்த கேமராவை கொண்டுள்ளது என்று பார்க்கலாமா? வாங்க.
பெஸ்ட் கேமரா போன் அண்டர் ரூ.10,000 என்ற பிரிவின் கீழ் Samsung Galaxy F13 ஸ்மார்ட்போன் மாடல் தேர்வாகியுள்ளது. இந்த சாதனம் 50MP பிரைமரி சென்சார், 5MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சாருடன் ட்ரிபிள் கேமரா அமைப்பையும், முன்பக்கத்தில் 8MP கேமராவையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் இப்போது வெறும் ரூ.9,699 மட்டுமே.

அடுத்தபடியாக ரூ.20,000 விலையில் சிறந்த கேமராவுடன் வரும் போனில் Redmi Note 12 5G போன் வருகிறது. இந்த Redmi Note 12 போன் 48MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 13MP கேமராவை கொண்டுள்ளது. இந்த சாதனம் இப்போது ரூ.17,999 மட்டுமே.
மிட்ரேஞ் ஸ்மார்ட்போன் பிரிவில் சிறந்த கேமரா போன் என்றால் ரூ.30,000 விலை பிரிவில் வருகிறது. Nothing Phone (1) இந்த பிரிவில் சிறந்த போன்களை கொண்டுள்ளது. இந்த சாதனம் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் கேமராவை கொண்டுள்ளது. இது டூயல் கேமராவாக இருந்தாலும், தரம் சூப்பராக இருக்கிறது. முன்பக்கத்தில் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.29,999 மட்டுமே.
பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் சிறந்த கேமரா போனை வாங்க வேண்டுமென்றால் நாம் ரூ.50,000-திற்குள் செலவு செய்ய வேண்டும். இந்த பிரிவில் ஆகச்சிறந்த கேமராவை கொண்ட போனாக OnePlus 11R திகழ்கிறது. இந்த சாதனம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சாரை பின்புறத்தில் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 16MP கேமராவை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.39,999 மட்டுமே.
iPhone 14 Pro மாடலுக்கு நிகரான கேமராவை கொண்ட ஆண்ட்ராய்டு போனாக Samsung Galaxy S23 Ultra மாடலாக மட்டுமே இருக்க முடியும். Samsung Galaxy S23 Ultra சாதனம் 200MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 3x மற்றும் 10x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் இரண்டு 10MP டெலிஃபோட்டோ சென்சார்களை இது கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP கேமராவை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.1,24,999 ஆகும்.
இந்த போன்கள் அனைத்தும் பெஸ்டான கேமராவுடன் வெவ்வேறு பட்ஜெட் விலை பிரிவில் இப்போது வாங்க கிடைக்கின்றன. ஆகச்சிறந்த கேமரா அம்சத்துடன் உங்களுடைய புதிய போனை நீங்கள் வாங்க விரும்பினால், கட்டாயம் இந்த போன்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தாராளமாக தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








