Home
News

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? Amazon கொடுக்கும் தாராள சலுகை! என்னென்ன வாங்கலாம் தெரியுமா?

இந்த வாரம் உலக உறக்க தினம் உலகளவில் கொண்டாடப்படுகிறது. அமேசான் தளம் இப்போது உறக்க தினத்தின் கொண்டாட்டத்தை கோலாகலமாக கொண்டாட துவங்கியுள்ளது. இதனையோட்டி Amazon பல மிரட்டலான சலுகை மற்றும் தள்ளுபடியை இப்போது வழங்கியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம்.

இந்த உலக உறக்க தின கொண்டாட்டதை கொண்டாடும் விதத்தில் அமேசான் நிறுவனம் மெத்தைகள், படுக்கைகள் மற்றும் லைட்கள் போன்ற "தூக்கத்திற்கு தேவையான" தயாரிப்புகளின் மீது சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனை காலம் மார்ச் 15 அன்று முதல் தொடங்கப்பட்டு, மார்ச் 19 வரை நடைபெறுகிறது.

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? Amazon கொடுக்கும் தாராள சலுகை!

இந்த விற்பனையின் போது, ​​Amazon அதன் மேடையில் 50-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட டீல்களை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் கீழ் The Sleep Company, Livpure, Solimo, Duroflex மற்றும் Sleepyhead போன்ற பிரபலமான பிராண்டுகளின் தயாரிப்புகளை கொண்டுள்ளது. அமேசான் நிறுவனம் இப்போது படுக்கைகள், மெத்தைகள், தலையணைகள், பெட்ஷீட்கள் மற்றும் பலவற்றின் மீது 75% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்களுக்கு 10% உடனடி கேஷ்பேக் மற்றும் EMI சலுகைகளுக்கும் கிடைக்கிறது. கூடுதலாக, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திட்டமிடப்பட்ட டெலிவரி, தரம் சரிபார்க்கப்பட்ட தேர்வு மற்றும் 24 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI போன்ற பலன்களையும் அமேசான் இந்த உறக்க தின விற்பனையுடன் வழங்குகிறது.

படுக்கைகள் மற்றும் மெத்தைகள் என்று வரும்போது, ​​அமேசான் குறிப்பிட்ட 'பிரபலமான' பிராண்டுகளின் தயாரிப்புகளை வழங்குகிறது. ஸ்லீப் நிறுவனத்திடமிருந்து SmartGRID Ortho Mattress இப்போது சலுகையுடன் வாங்க கிடைக்கிறது. இது முதுகெலும்பு ஆதரவைக் கொண்டுள்ளது மற்றும் மூன்று அளவு வகைகளில் வருகிறது. இதன் விலை ரூ.27,990 மட்டுமே. மறுபுறம், ஸ்டோரேஜ் இடத்துடன் வரும் நீல்கமலில் இருந்து டாக்டர் ட்ரீம்ஸ் கிங் சைஸ் படுக்கையின் விலை ரூ.11,999 விலையில் கிடைக்கிறது.

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? Amazon கொடுக்கும் தாராள சலுகை!

இதுதவிர, சோபா மற்றும் படுக்கை தயாரிப்புகளும் சலுகையில் கிடைக்கின்றன. சோலிமோ ரோலண்ட் 5 இருக்கைகள் கொண்ட சோபா பெட், எல் வடிவில் வரும் மற்றும் மடிக்கக்கூடிய வகை சோபா மாடல்களும் சலுகை விலையில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.18,999 என்ற விலையில் கிடைக்கிறது. மறுபுறம், செவன்த் ஹெவன் 4 சீட்டர் லிஸ்பன் மர சோபா படுக்கை ரூ.15,289 விலையில் 3 ஆண்டு உத்தரவாதத்துடன் கிடைக்கிறது.

விற்பனை விலையைப் பெற்ற பிற தயாரிப்புகளில் லேம்ப் மற்றும் பல்புகள் மீதும் சலுகை கிடைக்கிறது. ஹலோனிக்ஸ் ரேடார் பி22 மோஷன் சென்சார் எல்இடி பல்ப் ரூ.325 விலைக்கு கிடைக்கிறது. பிலிப்ஸ் ஜாய் விஷன் கோரல் ரஷ் எல்இடி பல்ப் ரூ.119 விலைக்கு கிடைக்கிறது. கடைசியாக, நியாமேக்ஸின் ஸ்கை நைட் ப்ரொஜெக்டர் பெட்சைடு லைட் ரூ.429 விலையில் கிடைக்கிறது. உங்கள் வீட்டிற்கும், உங்களுக்கும் சுகமான உறக்கம் வேண்டுமா? அப்போ இந்த சலுகையை தவறவிடாதீர்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Want a Restful Night's Sleep Check These generous World Sleep Day Offer By Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X