ஜியோ, ஏர்டெல் ஓரம்போ...மலிவு விலையில் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்.!
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களை விட மலிவு விலையில் ஒரு மாதம் வேலிடிட்டி உடன் அதிகமான டேட்டா நன்மையை தரும் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் அறிமுகம் செய்து விட்டன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்யவில்லை. அதாவது இன்னும் சில மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கும் திட்டங்களுக்கு ரூ.300-க்கு மேல் வசூல் செய்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதே சலுகைகளைக் குறைந்த விலையில் வழங்குகிறது. இப்போது அந்த திட்டத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
அப்படியென்ன திட்டம்? அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கேமிங் சேவைகள் உள்ளிட்ட பல அசத்தலான சலுகைகள் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களிடம் கூட இதுபோன்ற ஒரு திட்டம் இல்லை என்று தான் கூறவேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனம் என்ன தான் கம்மி விலையில் திட்டங்களை வழங்கினாலும் இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை. அதுமட்டும் தான் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது. விரைவில் இந்நிறுவனம் 4ஜி சேவையைக் கொண்டுவந்தால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். சரி இப்போது இந்நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.187 திட்டம்: பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள், இலவச PRBT உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
பிஎஸ்என்எல் ரூ.299 திட்டம்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பிரபலமான திட்டம் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.347 திட்டம்: பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை ஆகிய அனைத்து நன்மைகளும் உள்ளது.. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இத்துடன் கூடுதல் நன்மைகளாக M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவையின் கூடுதல் நன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








