சந்தையில் கிடைக்கும் 1ஜிபி டேட்டா/நாள்; அன்லிமிடெட் வாய்ஸ் திட்டங்கள் என்னென்ன.?

|

ரிலையன்ஸ் ஜியோ அதன் மலிவான தரவு மற்றும் குரல் ஒருங்கிணைப்பு திட்டங்களுடன் தனது சேவையை தொடர்கிறது. சந்தையில் நிலைத்திருக்கும் முனைப்பில், இதர போட்டியாளர்களும் ஜியோ திட்டங்களின் அதே விகிதங்களில் சலுகைகளை வழங்க போராடுகின்றனர்.

சந்தையில் கிடைக்கும் 1ஜிபி டேட்டா/நாள்; அன்லிமிடெட் வாய்ஸ் திட்டங்கள்

குறிப்பாக, வரம்பற்ற அழைப்புகளுடனான தினசரி 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா என்ற ஜியோவின் மிகவும் பிரபலமான திட்டத்தை, கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே வழங்க வேண்டிய கட்டாய நிலைபாட்டிற்குள் தள்ளப்பட்டன. அதை எல்லா நிறுவனங்களிலாலும் வழங்க முடியவில்லை என்கிற போதிலும் ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவைகள் குறிப்பிடத்தக்க விலை நிர்ண்ய வேறுபாட்டின் கீழ், ஜியோவிற்கு எதிரான திட்டங்களை வழங்கி வருகிறது.

ஜியோ (ப்ரீபெய்ட்)

ஜியோ (ப்ரீபெய்ட்)

ரூ.96, ரூ.309. ரூ.399/- என்ற ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் முறையே 7, 56 மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.

ஜியோ (போஸ்ட்பெய்ட்)

ஜியோ (போஸ்ட்பெய்ட்)

ரூ.309 மற்றும் ரூ.399/- என்ற போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கீழ் முறையே 2 மாதங்கள் மற்றும் 3 மாதங்கள் செல்லுபடியாகும், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.

ஏர்டெல்

ஏர்டெல்

ரூ.349/-(3ஜி) மற்றும் ரூ.399/- (4ஜி) என்ற இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் முறையே 28 மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை (அனைத்து ஆப்ரேட்டர்களுக்குமான லோக்கல், எஸ்.டி.டி) வழங்குகிறது.

வோடபோன் (3ஜி/4ஜி)

வோடபோன் (3ஜி/4ஜி)

ரூ.348/- என்ற ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் 28 நாட்கள் செல்லுபடியாகும், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை (அனைத்து ஆப்ரேட்டர்களுக்குமான லோக்கல், எஸ்.டி.டி) வழங்குகிறது.

ஐடியா செல்லுலார் (2ஜி/3ஜி/4ஜி)

ஐடியா செல்லுலார் (2ஜி/3ஜி/4ஜி)

மொத்தம் 28 நாட்கள் செல்லுப்படியாகும் ரூ.347/- மற்றும் ரூ.357/ என்ற ப்ரீபெய்ட் திட்டங்களுமே நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 2ஜி/3ஜி/4ஜி டேட்டா மற்றும் முறையே வரம்பற்ற அழைப்புகளை (அனைத்து ஆப்ரேட்டர்களுக்குமான லோக்கல், எஸ்.டி.டி) மற்றும் வரம்பற்ற அழைப்புகளை (அனைத்து ஆப்ரேட்டர்களுக்குமான லோக்கல், எஸ்.டி.டி, ரோமிங்) வழங்குகிறது.

பிஎஸ்என்எல் (2ஜி/3ஜி)

பிஎஸ்என்எல் (2ஜி/3ஜி)

ரூ.429/- என்ற போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் 90 நாட்கள் செல்லுபடியாகும், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 2ஜி/3ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.

பின் குறிப்பு

பின் குறிப்பு

தொகுக்கப்பட்டுள்ள திட்டங்களின் விலை மற்றும் சலுகைகள் வட்டத்திற்கு வட்டம் மாறுபடும் என்பதும், இங்கு தொகுக்கப்பட்டுள்ள விலை நிர்ணயம் தில்லி வட்டாரத்தின் அடிப்படையிலானது என்பதும், ரிலையன்ஸ் ஜியோவின் கட்டணங்கள், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன மறுபக்கம் பிஎன்என்எல் பான்-இந்தியா திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட திட்டத்தை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Want 1GB data daily with unlimited calling? Have a look at these plans from all operators. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X