ரேன்சம்வேர் பரவாமல் தடுத்த மார்க்ஸ் கைது.! ஏன்?

By Prakash
|

இந்தியா உட்பட 150க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 3 லட்சம் கணிணிகளை இந்த ரேன்சம்வேர் வைரஸ் தாக்கியது. வைரஸை பரவ விட்ட ஹேக்கர்கள், வைரஸை நீக்க கம்யூட்டர் ஒன்றுக்கு 300 முதல்600 டாலர் வரை பிணைத்தொகை கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

குறிப்பாக பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள், இ-மெயில், நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை குறி வைத்து இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் ரஷ்ய உள்துறை அமைச்சகத்தில் உள்ள கம்யூட்டர்களை ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற பாரம்பரிய ரஷ்ய கிறிஸ்துவ சபையில் உள்ள பாதிரியார்களை வைத்து புனித நீரை தெளித்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.

இருந்தபோதிலும் இங்கிலாந்தை நாட்டை சாரந்த கம்ப்யூட்டர் வல்லுநர் மார்கஸ் ஹர்சின்ஸ் என்ற 23வயது இளைஞர் ஒருவர் ரேன்சம்வேர் பரவாமல் தடுத்து நிறுத்தினர். இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து பெரிய பாரட்டுகள் இவர் பெற்றார், மேலும் பல்வேறு சிறப்பு பரிசுகள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது.

 வான்னாக்ரை :

வான்னாக்ரை :

வான்னாக்ரை ரான்சம்வேர் பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிக பாதிப்பு ஏற்ப்பட்டது மேலும் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டனர், இதனால் வங்கி,மருத்துவமனைகள் மேலும் பல்வேறு இடங்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது.

என்கிரிப்ட் :

என்கிரிப்ட் :

வானாகிரை வைரசை பரவவிட்டவர்கள் குறிப்பிட்ட கணிணியை முடக்கி அதிலுள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்துவிடுவர், முடக்கப்பட்ட தகவல்களை மீண்டும் தரவேண்டும் எனில் குறிப்பிட்ட பணத்தொகையை பிட்காயின்கள் மூலமாக செலுத்தினால் மட்டுமே மீண்டும் கிடைக்கும், இல்லையென்றால் அத்தகவல்கள் தானாகவே அழிந்துவிடும்.

மார்கஸ் ஹர்சின்ஸ்:

மார்கஸ் ஹர்சின்ஸ்:

இங்கிலாந்தை நாட்டை சாரந்த கம்ப்யூட்டர் வல்லுநர் மார்கஸ் ஹர்சின்ஸ் என்பவர் இந்த ரேன்சம்வேர் பரவாமல் தடுத்துநிறுத்த வழிமுறையை கண்டுபிடித்து வெற்றிபெற்றார். இதனால் பல்வேறு நாட்டில் இருந்த இவருக்கு பாரட்டுகள் குவிந்தது.

கில் ஸ்விட்ஸ்:

கில் ஸ்விட்ஸ்:

இந்த ரேன்சம்வேர் பரவாமல் தடுக்க மார்க்ஸ் சில கோட் வழிமுறைகளை கண்டுபிடித்தார், அந்த கோட் பெயர் கில் ஸ்விட்ஸ் என்றழைக்கப்பட்டது. இதனை இன்டர்நெட் மூலம் இணைத்து ரேன்சம்வேர் பரவாமல் தடுத்தார் மார்க்ஸ்.

அமெரிக்கா:

அமெரிக்கா:

அமெரிக்கா உள்ள லாஸ் வேகாஸ் மாகானத்தில் நடைபெற்ற ஹேக்கர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொள்ள மார்க்ஸ் வந்தார் அப்போது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எஃப்பிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

க்ரோனாஸ்:

க்ரோனாஸ்:

2014-2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் க்ரோனாஸ் என்ற வங்கித்துறை தொடர்பான மால்வேரை உருவாக்கிய காரணத்தால் தற்சமயம் மார்க்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WannaCry hero Marcus Hutchins could face 40 years in US prison ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X