Home
News

விண்வெளியில் நடந்து வங் யபிங் என்ற பெண் சாதனை.! முழு விவரம்.!

பெண்கள் உலகில் அனைத்து பகுதிகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள் என்பது தான் உண்மை. குறிப்பாக பெண்கள் தங்களுக்கு பிடித்த துறைகளில் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி, தாங்களும் சிறந்தவர்கள் என்று நிரூபித்து வருகின்றனர். இந்நிலையில் சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் முதன் முறையாக விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளார். மேலும் இதுசார்ந்த விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டியன்ஹி என்ற ஆய்வு

அதாவது விண்வெளியில் டியன்ஹி என்ற ஆய்வு நிலையத்தை சீனா அமைத்து வருகிறது என்பது அனைவரும் தெரியும். இந்நிலையில்கடந்த அக்டோபர் 16-ம் தேதி இந்த ஆய்வு நிலையத்திற்கு வங் யபிங் என்ற பெண் உட்பட மூன்று பேர் ஷென்ஷோ - 13 என்றவிண்கலத்தில் சென்றனர்.

 டியன்ஹி ஆய்வு

குறிப்பாக இவர்கள் மூவரும் டியன்ஹி ஆய்வு நிலையத்தில் அடுத்த ஆறு மாதங்கள் அங்கேயே தங்கி கட்டுமான பணிகளை மேற்கொள்வர் என சீனா தெரிவித்துள்ளது. மேலும் நேற்று இந்த டியன்ஹி ஆய்வு நிலையத்தில் இருந்து வங் யபிங், ஜாய் ஆகியோர் வெளியேறி விண்ணில் நடந்து வெளிப்புறத்தில் இருக்கும் கட்டுமான பணிகளை மேற்கொண்டனர்.

, ஜாய் ஆகியோர் விண்ணில்

குறிப்பாக வங் யபிங், ஜாய் ஆகியோர் விண்ணில் நடந்து வெளிப்புறத்தில் இருக்கும் கட்டுமான பணிகளை மேற்கொண்டபோது அவர்களுக்கு டியன்ஹியில் இருந்த மூன்றாவது விண்வெளி வீரரான யி குவாங்பூ உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு மணி நேரம் விண்வெளியில் நடந்து

சுமார் ஆறு மணி நேரம் விண்வெளியில் நடந்து பல்வேறு பணிகளை செய்து முடித்த பின், வங் யிபிங், ஜாய் ஆகியோர்டியன்ஹிக்கு திரும்பினர். எனவே இதன்மூலம் விண்வெளியில் நடந்த முதல் சீன விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பை
வங் யபிங் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 குழுந்தைக்கு தாயான வங் யபிங்

அதேபோல் ஓரு குழுந்தைக்கு தாயான வங் யபிங், சீன விமானப் படையில் பணியாற்றி, விண்வெளி துறைக்கு வந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் ரஷ்யாவின் வாலன்டினா தெரஷ்கோவாவிற்கு பின்பு விண்வெளியில் நடந்த இரண்டாவது பெண் என்ற பெருமை வங் யபிங்கிற்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் நாசா,ரஷியா,

அதேபோல் அமெரிக்காவின் நாசா,ரஷியா, ஜப்பான்,ஐரோப்பா மற்றும் கனடா போன்றவை இணைந்து சர்வதேச விண்வெளிமையத்தை அமைத்துள்ளன. இந்த சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்கள் அனுப்பி ஆய்வு
மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது இந்த சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படும் வீர்கள் 3 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் வரை அங்கு தங்கி இருந்து ஆய்வு செய்து விட்டு பூமிக்கு திரும்புவார்கள்.

 சர்வதேச விண்வெளி மையத்தில்

சமீபத்தில் இந்த சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்க வீராங்கனை மேகன் மெக்ஆர்தர், பிரான்ஸ் வீரர் தாமஸ் பெஸ்குவெட் உட்பட 3 விண்வெளி ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டனர். அப்போது அந்த ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் இருந்த கழிவறை உடைந்ததாக கூறப்படுகிறது. எனவே இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கழிவறையில் கசிவுஏற்பட்டதால் அதனை சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு 3 விண்வெளி வீரர்களும் டயப்பர்களை பயன்படுத்தினார்கள். இந்த பிரச்சனையால் சுமார் 20 மணி நேரம் அவர்கள் தவிப்புக்குள்ளானர்கள். ஒருவழியாக பூமிக்கு திரும்பிய மேகன் மெக்ஆர்தர் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தது என்னவென்றால், விண்வெளி பயணம் மிகவும் சவால்கள் நிறைந்தது. எனவே இது எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் மற்றும் கவனித்துக் கொள்ளும் ஒன்று. எனவே நாங்கள் அதைப் பற்றி அதிகம்கவலைப்படவில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா அமைப்பு பெ

மேலும் நாசா அமைப்பு பெர்சவரன்ஸ் விண்கலத்தின் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புதிய
புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டது. குறிப்பாக இதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ள மலைகள், பாறைகள், படிமங்கள் போன்றவற்றை இதுவரை இல்லாத அளவு துல்லியமான தரத்தில் புகைப்படங்களை காணமுடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பெர்சவரன்ஸ் விண்கலத்தின் செயல்பாடுகளை நாசா வானியாலாளர் எமி வில்லியம்ஸ் தலைமையிலான குழு ஆய்வு
செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கத. மேலும் சமீபததில் கிடைத்த செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை குறித்து வில்லியம்ஸ் கூறுகையில், ஜெசேரோ பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளின் அம்சங்களும், நமது பூமியின் நதி டெல்டாக்களில் உள்ள வடிவங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Wang Yaping was the first Chinese woman to walk in space: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X