டிக்டாக் செயலியை வாங்க கூட்டுசேரும் இருபெரும் நிறுவனங்கள்: உச்சக்கட்ட பேச்சுவார்த்தை!

|

டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை வாங்குவதற்கு இரண்டு பெரும் நிறுவனங்கள் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த இருபெரும் நிறுவனங்களின் கூட்டணி டிக்டா் அமெரிக்க உரிமத்தை கைப்பற்றும் என தெரிவிக்கப்படுகிறது.

59 சீன செயலிகளுக்கு தடை

59 சீன செயலிகளுக்கு தடை

இந்திய இறையான்மைக்கும், தனிநபர் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் முன்னணி நிறுவனமான பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஆனது அதிகளவு பதிவிறக்கங்களை பெற்றுள்ளது, மேலும் இந்தியாவிலும் பிரபலமான செயலிகளுள் இது பிரதானமாக திகழ்ந்தது.

 அமெரிக்காவிலும் 46 மில்லியன் பயனாளர்கள்

அமெரிக்காவிலும் 46 மில்லியன் பயனாளர்கள்

இந்தியாவில் மட்டுமின்றி இந்த செயலி அமெரிக்காவிலும் 46 மில்லியன் பயனாளர்களை கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டிக் டாக் உட்பட சமூகவலைதளங்களில் பிரபலமாக இருக்கும் சீன ஆப்களை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.

அதிபர் டிரம்புக்கு கடிதம்

அதிபர் டிரம்புக்கு கடிதம்

இந்த நிலையில் அமெரிக்காவில் 25 எம்பிக்கள் அதிபர் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், அதிநவீன உளவு பார்க்கும் கருவியாக டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை சீனா பயன்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோன்ற செயலிகள் மூலம் அமெரிக்கர்கள் தகவல்கள் எளிதாக திருடப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பு கருதி

நாட்டின் பாதுகாப்பு கருதி

நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டது. இதை உதாரணமாகக் கொண்டு அமெரிக்க அரசும் செயல்பட வேண்டும். அமெரிக்க மக்களின் தனியுரிமையை பாதுகாக்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் டிக்டாக் செயலியை தடை விதிக்க கடந்த மாதம் சிறப்பு உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட இருப்பதாக அவர் கூறினார்.

WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!

டிக்டாக் செயலிக்கு தடை

டிக்டாக் செயலிக்கு தடை

அமெரிக்க உத்தரவுபடி டிக்டாக் செயலியை அதன் தாய் நிறுவனமான சீனாவின் பைட்டான்ஸ் 90 நாட்களில் அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட்டால் தடை தொடராத என்பதாகும். அமெரிக்க நிறுவனத்திடம் விற்காதபட்சத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும்.

நிறுவனங்களிடையே கடும் போட்டி

நிறுவனங்களிடையே கடும் போட்டி

டிக்டாக் அமெரிக்க உரிமத்தை வாங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் டிக்டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்த்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட், வால்மார்ட் கூட்டு சேர்ந்து நடவடிக்கை

மைக்ரோசாப்ட், வால்மார்ட் கூட்டு சேர்ந்து நடவடிக்கை

இரண்டு பெரும் நிறுவனங்களான மைக்ரோசாப்ட், வால்மார்ட் இணைந்து டிக்டாக்கை வாங்க முயற்சி செய்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சி வெற்றிபெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. டிக்டாக் உரிமைத்தை சுமார் 20 முதல் 30 மில்லியன் டாலர்கள் வரை விலை கொடுத்து வாங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

டிக்டாக் அமெரிக்க உரிமம்

டிக்டாக் அமெரிக்க உரிமம்

பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வரும் நிலையில் டிக்டாக் அமெரிக்க உரிமத்தை பிற நிறுவனங்களும் வாங்கும் என்பது உறுதியாக தெரிகிறது. அமெரிக்க நிறுவனம் டிக்டாக் செயலி உரிமத்தை கைப்பற்றும் பட்சத்தில் தடை தகற்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Walmart Joins Microsoft to Purchase Tiktoks US Operation

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X