இந்த டிவியை சுவற்றில் பொருத்த வேண்டாம், ஒட்டினாலே போதும்

Written By:

டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தின் புதிய வரவாக தென் கொரியாவின் எல்ஜி நிறுவனம் புதிய வகை ஓஎல்ஈடி பேனல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதை சுவற்றில் பொருத்தினாலே போதுமானது.

55 இன்ச் ஓஎல்ஈடி பேனல் 0.97 எம்எம் தட்டையாக இருப்பதோடு 1.9 கிலோ எடை கொண்டிருக்கின்றது. இதனால் எளிதில் காந்தம் பொருந்திய திரையில் ஒட்டி கொள்கின்றது. வால்பேப்பர் போன்ற இந்த டிவி எல்ஜியின் 4.3எம்எம் தட்டையாக இருக்கும் 55 இன்ச் ஓஎல்ஈடி பேனல்களை விட மெலிதாக இருக்கின்றது.

இந்த டிவியை சுவற்றில் பொருத்த வேண்டாம், ஒட்டினாலே போதும்

வால்பேப்பர் ஓஎல்ஈடி பேனல் டிவியினை மிகவும் மெலிதாகவும் எடை குறைவாகவும் இருக்க செய்கின்றது. இந்தாண்டிற்குள் 99 இன்ச் ஓஎல்ஈடி பேனல் ஒன்றை வெளியிடவும் எல்ஜி திட்டமிட்டிருக்கின்றதாக எல்ஜி டிஸ்ப்ளே பிரிவின் தலைவர் யோ சங் டியோங் தெரிவித்தார்.

முன்னதாக இந்நிறுவனம் 55 இன்ச், 66 இன்ச், மற்றும் 77 இன்ச் ஓஎல்ஈடி வகைகளை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் ப்ளாஸ்டிக் ஓஎல்ஈடி, டிரான்ஸ்பேரன்ட், உள்ளிட்ட பல வகை தொழில்நுட்பங்களை மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் டியோங் தெரிவித்தார்.

 

English summary
South Korea’s LG Display has unveiled an extremely thin OLED panel that can stick to a wall.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot